ஆவாரம்பூ சர்க்கரை நோய்க்கு சிறந்தது, உடலில் ஏற்படும் கற்றாழை நாற்றம் மறையும். இலவங்க பூ பித்தம் நீக்கி, அல்சர் மற்றும் வயிற்று வலி நீங்கும். முல்லை மலர் முகர்ந்தால், பைத்தியம் தெளியும், மனக்கவலை குறையும். |
கரும் தும்பை பூ தலை வலி நீங்கும். கல்யாண முருங்கை பூ கவலை அகற்றும், கருப்பை கட்டி கரையும். சரக்கொன்றை பூ மலர் இதழ்களை வதக்கி உப்பு, புளி வைத்துத் துவையல் செய்து சாப்பிட மலச்சிக்கல் தீரும், வயிற்றில் உள்ள கிருமிகள் வெளியேறும், சர்க்கரை வியாதிக்கு நல்லது. |
சூரியகாந்தி பூ எண்ணெய் சமையலுக்கு, மூட்டு வலிக்கு நல்லது. செம்பருத்திப்பூ இருதயம் வலுப்பெறும், வெள்ளை படுதல் நிற்கும், ரத்தக்கொதிப்பு, வயிற்றுபுண் ஆறும். துத்திப்பூ இரத்த பேதி, சளியில் இரத்தம், கோழையில் இரத்தம், சிறுநீரில் ரத்தம் எதுவானாலும் குணமாகும். |
தூதுவளை பூ நெய் விட்டு வதக்கி உண்டால் அளவில்லா சரீர பலமும் தாது விருத்தியும் உண்டாகும். தென்னம் பூ பூவை வெளியில் காயவைத்து தூளாக்கி காலை உணவுக்கு முன் அரை ஸ்பூன் சாப்பிட்டு வர பெண்களுக்கு ஏற்படும் பெரும்பாடு, உதிரப்போக்கு, தீராத வெள்ளைப் போக்கு நிற்கும். |
புளியம் பூ ஆயிந்து துவரம் பருப்புடன் சேர்த்து கடைந்து தாளித்து சாதத்துடன் சாப்பிட ருசியாக இருக்கும். பித்த மயக்கம், குமட்டல் தீரும். வேப்பம் பூ வயிறு உப்புசம், பித்தம், வாதம் தீரும், கல்லீரலை பாதுகாக்கும். |
முருங்கைப் பூ உடல் வலுபெறும், தாது பெருகும். வாழைப்பூ பெருங்குடல் இரத்த பேதி நீங்கும், மூலம் உள்ளவர்கள் அடிக்கடி உண்ண வேண்டும். |
சங்கு பூ இளமையையும் மேனி பளபளப்பையும் பாதுகாக்கும். நினைவாற்றலை அதிகரிக்கும். தும்பை பூ கண் நோய்களுக்கு சிறந்தது, விஷக்கடிகளை நீக்கும். |