குடிநீரை உயிரோட்டமுள்ள சத்துள்ள குடிநீராக மாற்ற இந்த முடிச்சு – குடிநீர் முடிச்சு நமக்கு உதவும். கீழுள்ள மூலிகைகள், பலசரக்குகளை ஒன்றாக சேர்த்து ஒரு துணியில் முடிச்சாக கட்டி அவற்றை மண்பானை நீரில் ஊறவைத்து குடிக்க பல நன்மைகள் கிடைக்கும். உடலின் நோய் எதிர்ப்பு ஆற்றலையும் அதிகரிக்கும் அற்புத குடிநீராக மற்றும் தன்மை இந்த முடிச்சில் இருக்கும் மூலிகைகளுக்கு உண்டு. உடல் கழிவுகளை வெளியேற்றும் தன்மை கொண்ட குடிநீர், நமது செல்களுக்கு பேராற்றலை அளித்து புத்துணர்வையும் அளித்து உடலுக்கு தேவையான நீர்சத்துக்களையும் அளிக்கிறது.
இந்த குடிநீரை பருகுவதால் உடலில் உள்ள கழிவுகள் அகலும், உடலுக்கு குளிர்ச்சி உண்டாகும், உடலின் PH அளவை சமப்படுத்த உதவும், உடலில் உள்ள சத்துக்களை சீராக உட்கிரகிக்க உதவும். ஜீரண மண்டலத்தில் உள்ள தொந்தரவுகள் அகலும். குறிப்பாக தண்ணீரை சுத்திகரிக்க ஏற்றது, தண்ணீரில் உள்ள நச்சுக்களை முறிக்கும்.
மிளகு 25 கிராம், சீரகம் 25 கிராம், வெட்டி வேர் சிறிது, தேத்தாங்கொட்டை 1, வெந்தையம் 20 கிராம் இவைகளை துணியில் வைத்து கட்டி 15 லிட்டர் தண்ணீரில் போட்டு பயன்படுத்தலாம், மண்பானையில் சேர்த்து பயன்படுத்துவது மிகவும் நல்லது.