குளியல் பொடி / ஸ்நானப் பரிமளப் பொடி

உடலில் ஏற்படும் கற்றாழை நாற்றம், வியர்வை நாற்றம், சரும நோய்கள் என பலவற்றிற்கும் அற்புதமான ஸ்நானப் பரிமளப் பொடி இது. இந்த பொடியை இந்துஸ்தானியில் சிக்ஸா (Chiksa) என்று பெயர். சிறந்த ஒரு நறுமணப் குளியல் பொடி. Herbal Bath Powder English Recipe

இந்த நறுமணப் பொடியைக் கொண்டு அன்றாடம் குளிக்க சருமம் பளபளக்கும், தோல் நோய்கள் விலகும், உடலின் நறுமணம் அதிகரிக்கும். புதுமணத் தம்பதியினருக்கும் இந்த குளியல் பொடி சிறந்ததாக இருக்கும்.

மிக குறைந்த செலவில் வீட்டிலிருக்கும் பொருட்களையும், நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும் பொருட்களைக் கொண்டும் இதனை எளிதாக வீட்டில் தயாரித்து பயன்படுத்தலாம். பெரியவர்கள், குழந்தைகள் என அனைவருக்கும் ஏற்றது.

ஸ்நானப் பரிமளப் பொடி / நறுமண குளியல் பொடி தயாரிக்க தேவையானவை

சந்தனம்
கஸ்தூரி மஞ்சள்
கிச்சிலிக் கிழங்கு
சடா மாஞ்சில்
கார்போக அரிசி
வாய் விளங்கம்
கசகசா
துரிஞ்சி நாரத்தம் தோல் (கிடார நாரத்தை)
திருநீற்றுப் பச்சிலை
நறுமண குளியல் பொடி எவ்வாறு தயாரிப்பது?

சந்தனம், கஸ்தூரி மஞ்சள், கிச்சிலிக் கிழங்கு, சடா மாஞ்சில், கார்போக அரிசி, வாய் விளங்கம், கசகசா, துரிஞ்சி நாரத்தம் தோல் (கிடார நாரத்தை), திருநீற்றுப் பச்சிலை ஆகியவற்றை சம அளவு எடுத்து நன்கு வெயிலில் காயவைத்து பொடியாக்கிக் கொள்ளவேண்டும். பின் அதனை சிறு சால்லடையில் சலித்து ஒரு கண்ணாடி பாட்டிலில் காற்றுபூகாதவாறு வைக்கவும். பத்து நாட்களுக்கு தேவைக்கேற்ப ஒரு சிறு பாட்டிலில் வைத்துக் கொண்டு குளிக்க பயன்படுத்தலாம்.

குளியல் பொடியை எவ்வாறு பயன்படுத்துவது?

அரைத்து வைத்திருக்கும் பொடியில் கொஞ்சம் எடுத்து வடி கஞ்சி, மோர், பசும் பால் அல்லது சாதாரண நீர் இவற்றில் ஒன்றை விட்டு கலந்து உடலில் நன்கு பூசி தேய்த்து குளிக்கலாம். இதனுடன் சம்பங்கி எண்ணெய் கிடைத்தால் சேர்த்து குளிக்கலாம். சிறப்பாக இருக்கும்.
இதனையே முகப்பூச்சாகவும் இரவு படுக்கும் முன் நன்கு முகத்தை கழுவி விட்டு பூசி ஒரு இருபது நிமிடம் ஊறவைத்து நன்கு உலர்ந்த பின் மீண்டும் முகத்தை கழுவிவிடலாம்.

Chiksa (சிக்ஸா) என்றால் என்ன?

சிக்ஸா என்பது நறுமண குளியல் பொடி. இந்துஸ்தானியில் சிக்ஸா மேல் குறிப்பிட்டுள்ள பொருட்களைக் கொண்டு தயாரிக்கப்படும் பொடிக்கு (Chiksa) என்று பெயர்.

முக பளபளப்பு அதிகரிக்க என்ன செய்ய வேண்டும்?

இந்த குளியல் பொடியை வீட்டிலேயே தயாரித்து பசும் பால், மோர் அல்லது வடிகஞ்சியை கொண்டு பயன்படுத்த முகப்பொலிவு பளபளப்பு அதிகரிக்கும்.

ஸ்நானப் பரிமளப் பொடியின் பயன்கள்

உடலில் நல்ல சுகமான மணம் இருக்கும், சருமம் பளபளக்கும், தோல் நோய்கள் படிப்படியாக குறையும், அரிப்பு குறையும், மேனி அழகு அதிகரிக்கும், வியர்வை நாற்றம் நீங்கும், கற்றாழை நாற்றம் நீங்கும், புதுமணத் தம்பதிகளுக்கு ஏற்றது.

(22 votes)