மருதோன்றி / மருதாணி – நம் மூலிகை அறிவோம்

மருதோன்றி இலைகளை மருதாணி என்று பேச்சு வழக்கில் கூறுவதுண்டு. பெண்களின் உள்ளங்கையை அழகுபடுத்திக் கொள்வதற்காக மருதோன்றி இலையை அரைத்து போட்டுக்கொள்வது உண்டு. இவ்வாறு போடுவதால் உள்ளங்கை சிவந்து அழகாகக் காட்சியளிக்கும்.

தமிழகத்தில் அனைத்து இடங்களிலும் பார்க்கக் கூடிய ஒரு மூலிகை. கிராமங்களிலும் நகரங்களிலும் பெரும்பாலான வீடுகளில் சாதாரணமாக பார்க்கக் கூடிய செடியாக இல்லாமல் ஒரு சிறு மர வகையை மூலிகை மருதாணி. ஆன்ட்டி ஆக்சிடென்ட் மட்டுமல்லாமல் வைட்டமின் சத்துக்கள் குறிப்பாக வைட்டமின் இ சத்துக்கள், தாதுக்கள் மற்றும் புரதச் சத்துக்கள் நிறைந்த ஒரு மூலிகை இந்த மருதாணி. இலை, பூ, விதை, பட்டை, வேர் என அனைத்து பாகங்களும் மருந்தாக பயன்படக் கூடியது.

பெண்கள் இதனை ஒரு அழகு சாதனமாக மட்டும் கருதுவதுண்டு அதனாலேயே இதன் மருத்துவ குணம் பலருக்கும் தெரிவதில்லை. பலவிதமான மருத்துவ குணங்களை கொண்ட ஒரு சிறந்த மூலிகை இந்த மருதாணி எனும் மருதோன்றி.

மருதாணி இலைக்கு முடி உதிர்வை தடுக்கும் ஆற்றல் அதிகமாக உள்ளது. மருதாணியைக் கொண்டு கூந்தல் தைலம் தயாரித்து வைத்துக் கொண்டு அதனை பயன்படுத்த இளநரை மறையும், கூந்தல் நீண்டு அடர்த்தியாக வளரும்.

மருதாணி தைலத்தை தொடர்ந்து முடி வேர்கால்களில் பயன்படுத்த பொடுகு நீங்கும், தலையில் ஏற்படும் கட்டிகள், கிருமிகளால் ஏற்படும் தொந்தரவுகள் மறையும்.

மருதாணியை கைகளிலும் கால்களிலும் வைப்பதால் உடலில் இருக்கும் நச்சுக்கள் நீங்கும். நகங்களில் ஏற்படும் பதிப்புகள் மறையும். உடல் உஷ்ணம் குறையும்.

மருதாணியின் பூக்கள் தலைவலிக்கு சிறந்த நிவாரணம் அளிக்கும், மூட்டுக்களில் ஏற்படும் வலிகளையும் குறைக்க பயன்படும்.

காலில் தோன்றக்கூடிய வெடிப்புகள், கரப்பான், புண்களை அகற்றுவதில் இது நல்ல ஆற்றலைக் கொண்ட மூலிகை. மருதோன்றியின் வேர் பட்டையை சேகரித்து எடுத்துக்கொண்டு அதனை தேங்காய் எண்ணெயில் ஊறவைத்து மற்ற மூலிகைகளையும் சேர்த்து ஊறவைத்து பயன்படுத்த நாள்பட்ட நீர் ஒழுகும் எக்ஸிமா என்னும் புண்கள் விரைவில் குணமாகும்.

(2 votes)