Helicopter tree tamil, tannakka maram,

தணக்கம் மரம் / Helicopter tree – நம் மூலிகை அறிவோம்

தணக்கம் மரம்; Gyrocarpus americanus; Helicopter tree; sal tree

அழகான காய்களை கொண்ட மரம் இந்த தணக்கம் மரம். தமிழகத்தில் பல இடங்களில் இதனை நாம் பார்க்க முடியும். Helicopter போல் இதன் காய்கள் இறக்கையுடன் இருக்க இதை நம்மவர்கள் Helicopter மரம் என அழைப்பதுண்டு. மேலும் இது ஆங்கிலத்திலும் Helicopter tree என பெயர் கொண்டுள்ளது.

Helicopter tree tamil, tannakka maram,

தமிழில் மிழில் தனுகு, தனுக்கு, தணக்கம் என பெயர் கொண்டது இந்த மரம். இதன் காய்கள் முற்றிய நிலையில் விதைகளைக் கொண்டு மரத்திலிருந்து விழும் போது இதன் இறக்கைகள் இரண்டும் காற்றில் சுழன்று கொண்டு விதைகள் கீழ்நோக்கியும் விழும். பல கிலோ மீட்டர் இந்த விதைகள் சுழன்று கொண்டே பறந்து விழுந்து முளைக்கும் திறன் கொண்டது. இந்த மரத்தின் இலைகள் நுனிப்பகுதியில் நெருக்கமாக வளரும் தன்மை கொண்டது. தனுக்கு மரத்தின் பூக்கள் மஞ்சள் கலந்த பச்சை நிறத்தில் இருக்கும். பூக்களின் மணம் விரும்பத்தக்கவாறு இருக்காது.

Helicopter tree tamil, tannakka maram,

சிறு அல்லது தொடர் மலைகளிலும், மலை அடிவாரத்தில் அதிகமாக இந்த மரத்தை காணலாம். தனக்க மரம், காத்தாடி மரம், தனுகு, தனுகான், டணக்கன் என பல பெயர்கள் இதற்கு உண்டு. இந்த மரம் மிகுந்த மென்மையான மரம். எளிதில் உடைந்து விடும் அளவு மென்மையான மரம். இதன் குச்சிகளை உடைத்து வைத்தாலே போது செழித்து வளரக்கூடியது.

Helicopter tree tamil, tannakka maram,

நம் முன்னோர்கள் விவசாயத்திற்கும் பிற செயல்பாடுகளுக்கும் எடை குறைவான கடினமாக மரங்களை பயன்படுத்தும் இடங்களில் இந்த மரத்தையே பயன்படுத்தினர். இன்றும் கோவில் குளங்களில் தெப்பங்கள் கட்ட மிதவை மரங்களாக இந்த தணக்கம் மரத்துடன் வேறு சில மரங்களையும் பயன்படுத்தினர்.

Helicopter tree tamil, tannakka maram,

பல காலங்கள் நீரில் இருந்தாலும் இந்த மரங்கள் நீரினால் பாதிக்கப்படாமலும் வலுவிழக்காமலும் இருக்கும். பழங்காலத்தில் கப்பல்லின் அவசர கால மிதவைகள் இந்த தணக்கம் மரத்திலேயே இருந்தன.

தீக்காயங்கள்

தனுக்கு மரத்தின் இலைகளை அரைத்து தீக்காயங்களுக்கு போட விரைவில் காயங்கள் மறையும்.

கால்நடைகளுக்கு

கால்நடைகளுக்கு ஏற்படும் வாத நோய்களுக்கும் இது சிறந்த மருந்தாக உள்ளது.

(1 vote)