இருதய நோய் – சில வீட்டுக் குறிப்புகள்

அதிக மன உளைச்சல், படபடப்பு, உணவு முறை சரியில்லாமல் இருப்பது என பல காரணங்களால் இருதய நோய் ஏற்படுகிறது. இருதயம் சம்மந்தமான தொந்தரவுகளையும், வலிகளிலிருந்து நம்மை பாதுகாக்கவும், இருதயத்தை பலப்படுத்தவும் எளிமையான சில வீட்டுக் குறிப்புகளை இந்த தொகுப்பில் நாம் பார்க்கலாம். இவற்றால் தொந்தரவுகளை கட்டுக்குள் வைக்கவும், இருதய நோய் நம்மை தாக்காமலும் நம்மை பாதுகாக்க முடியும்.

ஆரஞ்சு பழம்

இருதயத்தை பலப்படுத்த ஆரஞ்சு பழம் சிறந்த ஒரு பழம். நாட்டுரக கமலா ஆரஞ்சு பழத்தை அன்றாடம் சாப்பிட்டு வர இதயம் பலப்படும்.

அத்திப்பழம்

இதயம் வலுவாக அத்திப்பழங்கள் சிறந்ததாக உள்ளது. நாட்டு அத்திப் பழங்களை சாப்பிடலாம். நாட்டு அத்தி பழத்தை காய வைத்து அல்லது தேனில் ஊறவைத்து அன்றாடம் ஒன்று சாப்பிடலாம். பொடியாக தயாரித்து வைத்துக் கொண்டும் ஒவ்வொரு நாளும் உண்டுவர இதயம் வலுவாகும்.

பேரிக்காய்

பேரிக்காய் இருதய படபடப்பை குறைக்க பெருமளவில் பயன்படக் கூடிய பழமாக உள்ளது. பேரிக்காய் கிடைக்கக்கூடிய காலங்களில் அன்றாடம் ஒன்றை சாப்பிடுவதால் இதய பாதிப்பில் இருந்து விரைவில் வெளிவர முடியும்.

மூலிகை தேநீர்

சாதாரணமாக துளசி பலரது வீடுகளில் இருக்கக்கூடிய ஒரு மிக முக்கியமான மூலிகையாகும். இந்த துளசி இருதய நோய்க்கும் சிறந்த ஒரு மருந்து என்று கூட சொல்லலாம். சிறிது துளசியை சாறெடுத்து அதனுடன் தேன், வெந்நீர் கலந்து இரண்டு மாதங்கள் தொடர்ந்து பருகி வர இதயம் சம்பந்தமான தொந்தரவுகள் நீங்கும். இதயம் சம்பந்தமான அனைத்து நோய்களிலிருந்து விடுபடலாம்.

அதேப்போல் மருதம்பட்டை, செம்பருத்தி பூ ஆகியவையும் இருதய படபடப்பு, இருதய நோய்களுக்கு மிகச்சிறந்த ஒரு மருந்து. மருதம்பட்டையை கஷாயமாக அல்லது தேனீராக தயாரித்து இரண்டு மாதங்கள் சாப்பிட நல்ல ஒரு பலனை பெறலாம். செம்பருத்திப் பூக்களையும் கஷாயமாக அல்லது தேனீர் தயாரித்து இரண்டு மாதங்கள் சாப்பிட நல்ல ஒரு பலனை பெறலாம்.

herbal tea. vallarai tea, thulasi tea, seeraga kudineer, avarampoo tea, avaram poo water, karisalai tea, nannari water, nellipattai, mampattai water, mooligai teneer

கசாயம்

பலருக்கும் இதயத்தில் குத்துவது போல் வலி இருக்கும். இந்த குத்தும் வலிக்கு கருந் துளசி இலைகள் நல்ல ஒரு மருந்தாக இருக்கும். செம்பருத்தி பூ, கருந் துளசி ஆகிய இரண்டையும் ஒன்றாக சேர்த்து தண்ணீர் விட்டு காய்ச்சி கசாயமாக தயாரித்தல் ஒரு வாரம் முதல் பத்து நாட்கள் தொடர்ந்து சாப்பிட்டுவர இருதயத்தில் வரக்கூடிய வலிகள் தீரும்.

சுவாசிக்க

திருநீற்றுப்பச்சிலையை நுகர்வதால் இருதயத்தில் வரக்கூடிய நடுக்கத்தை போக்கலாம்.

மாதுளை

மாதுளை பழங்கள் இருதயத்தை பலப்படுத்த உதவும். மாதுளம் பழ சாறுடன் தேன் கலந்து சாப்பிட விரைவாக நல்ல ஒரு பலனை பெறலாம்.

இலந்தை பழம்

இலந்தை பழங்களை நெஞ்சு வலிக்கு சிறந்தது. இதனை சாப்பிடுவதால் நெஞ்சு வலியிலிருந்து நம்மை நாம் பாதுகாக்க முடியும். தேன் இஞ்சியும் நெஞ்சு வலியிலிருந்து நம்மை பாதுகாக்கும். இஞ்சியைச் சிறிது சிறிதாக நறுக்கி தேனில் சேர்த்து ஊற வைத்து தொடர்ந்து இரண்டு மாதங்கள் சாப்பிட்டு வர நெஞ்சுவலி, இதய வலியிலிருந்து நம்மை பாதுகாக்கலாம்.

(2 votes)