மருதாணி இலைகளை சிறிதாக நறுக்கிவைத்துக் கொண்டு நல்லெண்ணையை சூடாக்கி காய்ந்தவுடன் இலைகளை போட்டு சடசடவென வெடித்தவுடன் சட்டியை இறக்கி எண்ணெய் ஆறியபின் சுத்தமான அம்மியில் மைய அரைத்து அதில் தேவையான அளவை எடுத்து ஒரு துணியில் தடவி புண்ணின் மீது படும்படி வைத்து கட்டு போட வேண்டும். 5 நாட்கள் இவ்வாறு மாற்றி மாற்றி கட்ட புண் ஆறும்.
அரசமரத்தின் பட்டையை சட்டியில் வறுத்து தீய்ந்து கருகிய பின் தூள் செய்து தேங்காய் எண்ணெயில் குழைத்து பற்று போட ஆறாத புண், சொறி, சிரங்கு ஆறும்.
இலந்தை மரஉள்பட்டையை எடுத்து வெயிலில் நன்கு காயவைத்து இடித்துப் பொடி செய்து ஆறாத புண்மீது தூவி தேங்காய் எண்ணெய் விட்டு, வெற்றிலைகளை வைத்துக் கட்டி வந்தால் ஆறாதபுண் விரைவில் ஆறும்.