தலைவலி, தலைசுற்றல், தலை பாரம் நீங்க

தலைசுற்றல் குணமாக

  • விரலி மஞ்சளை விளக்கெண்ணையில் முக்கி விளக்கில் காட்டி சுட்டு அதன் புகையை மூக்கின் வழியாக உரிஞ்ச தலைவலி நெஞ்சுவலி முதலியன நீங்கும்.
  • சுக்கு, மிளகு, திப்பிலி, விலாமிச்சை வேர், சீரகம் ஆகியவைகளை 5 கிராம் வீதம் எடுத்து பவுடராக்கி தினசரி காலை, மாலை 1/2 தேக்கரண்டி சாப்பிட்டு வர தலைசுற்றல் குணமாகும்.
  • கீழாநெல்லி தைலத்தை பூசி குளித்து வந்தால் தலைசுற்றல் நிற்கும்.

தலை வலி, மூக்கடைப்பு நீங்க

  • நாட்டு நெல்லிகாயை எடுத்து அதன் கொட்டையை நீக்கி அரை லிட்டர் அளவு சாறு எடுத்து அதில் தேவையான அளவு உப்பு சேர்த்து மூன்று நாள் வெயிலில் காய வைத்து பின் தேங்காய் எண்ணெயை கொதிக்க வைத்து அதில் நெல்லிச்சாறு கலந்து கொதிக்க வைத்துக் கொண்டு மூக்கில் நுகர தலை வலி, மூக்கடைப்பு உள்ளிட்ட பிரச்சனைகளும் நீங்கும்.
  • குப்பைமேனி சாறு தடவ தலைவலி குணமாகும்.
  • கீழாநெல்லிச்சாறு, உத்தாமணிச்சாறு, குப்பைமேனிச்சாறு சம அளவு கலந்து நல்லெண்ணெயில் எரித்து நசியமிட ஓயாத தலைவலி தீரும்.

தலை பாரம் தீர

  • தும்பை பூவை நல்லெண்ணையில் போட்டு காய்ச்சி தலையில் தேய்த்து குளித்து வர தலைபாரம் குறையும்.
  • திருநீற்றுப்பச்சிலை சாறு, தும்பைச் சாறு இரண்டையும் கலந்து பச்சை கற்பூரம் சேர்ந்து மூக்கில் உறிஞ்ச தலைவலி பாரம் குணமாகும்.
  • நல்லெண்ணையில் 10 கருஞ்செம்பைப்பூவும், கஸ்தூரி மஞ்சள், சாம்பிராணி சேர்த்து இளஞ்சூட்டில் தலையில் வைத்து அரை மணி நேரம் கழித்து வாரம் இரண்டு முறை என்ற முறையில் இவ்வாறு செய்து குளித்தால் தலை பாரம் தீரும்.

தலைபாரம் நீரேற்றம் நீங்க

இஞ்சியை இடித்துச் சாறு எடுத்து சூடாக்கி தலையில் நெற்றியில் பற்றாகப் போட்டால் தலைபாரம் நீரேற்றம் குணமாகும்.

கடுமையான தலைவலி நீங்க

ஐந்தாறு துளசி இலைகளும் ஒரு சிறுதுண்டு சுக்கு, 2 இலவங்கம் சேர்த்து மைபோல அரைத்து நெற்றியில் பற்றாகப் போட்டால் கடுமையான தலைவலி குணமாகும்.

ஒற்றைத் தலைவலி குணமாக

தேத்தாங் கொட்டையுடன், பச்சைக் கற்பூரத்தையும் சேர்த்து தாய்ப்பால் விட்டு அரைத்து நெற்றியில் பற்று போட ஒற்றைத் தலைவலி குணமாகும்.

(2 votes)

Do check our New English Recipe Website

-->