brown rice, red rice, unpolished rice, kaikuthal rice, handpound rice

கைக்குத்தல் அரிசி

கைக்குத்தல் அரிசி என்பது நெல்லின் உமியை மட்டும் நீக்கிவிட்டு அதனை தவிடுடன் கொள்வது. இவ்வாறான கைக்குத்தல் அரிசியை தவிட்டுடன் சேர்த்து சாப்பிடும் போது உடலுக்குத் தேவையான சத்துக்கள் கிடைக்கும். அதுபோல் அரிசியில் அடங்கியுள்ள மாவுப் பொருளை எளிதில் ஜீரணிக்கவும் செய்யும்.

brown rice, red rice, unpolished rice, kaikuthal rice, handpound rice

அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு’ எனும் பழமொழியை நாம் அறிந்திருப்போம். எந்தவொரு பொருளையும் அளவுக்கு அதிகமாக சாப்பிட்டால் அது பின்விளைவுகளை ஏற்படுத்தும் என்பதே இதன் பொருள். ஆனால் அதை முறியடிக்கும் மருந்தும் அந்த உணவிலேயே இருக்கிறது என்பதை பலர் அறிவதில்லை.

இதைத்தான் சித்தர்கள் சத்துரு (பகைவன்) மித்துரு (நண்பன்) என்கின்றனர். அதாவது, மாம்பழம் அளவுக்கு அதிகமாக சாப்பிட்டால் அது பின்விளைவுகளை ஏற்படுத்தும். ஆனால், அதோடு சிறிதளவு மாம்பருப்பையும் சேர்த்து சாப்பிட்டால் எவ்வித பின்விளைவும் உண்டாகாது. இது அனைத்து உணவிற்கும் உண்டு.

தவிடு நீங்காத அரிசியை சாப்பிடுவதால் அதன் பலன்கள் அனைத்தும் சரிசமாக உடலுக்கு சேர்கிறது.

இந்த தவிடு நீக்காத அரிசி இந்தியாவில் கேரளாவிலும், இலங்கையிலும் மட்டுமே அதிகமாக பயன்படுத்துகின்றனர். நம் முன்னோர்கள் அதிகளவில் இந்த அரிசியை பயன்படுத்தினாலும், தற்பொழுது தமிழ்நாட்டில் இந்த அரிசியை பயன்படுத்துவது சில வருடங்களாக குறைவாகவே இருந்தது. நம் முன்னோர்கள் பயன்படுத்திய நெல் அளவில் சற்று பெரியதாகவும், பயிர்காலம் 6 மாதமாகவும் இருந்தது. ஆனால் தற்போது குறுகிய காலத்தில் அதாவது 3 மாதத்திலேயே விளையும் நெல் வகைகளையே அதிகம் உற்பத்தி செய்யப்படுகிறது. இவ்வகை பயிர்கள் அதிக விளைச்சலை அளிப்பதுடன் பல உடல் உபாதைகளையும் அளிக்கிறது.

இன்று பெரும்பாலும் நடைமுறையில் இருக்கும் இந்த குறுகிய கால அரிசிகள் இரண்டு மூன்று முறை பாலிஷ் செய்யப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது. இது அளவில் சிறியதாகவும், சாப்பிட மிருதுவாகவும் வெண்மையாகவும் இருப்பதால் மக்கள் இதையே அதிகம் விரும்பி உண்கின்றனர்.

ஆனால் நமது முன்னோர்கள் பயன்படுத்திய சம்பா பட்டதில் விளையும் சம்பா அரிசிகள், கார் அரிசி, வாலான், கருங்குறுவை, ஈர்க்குச் சம்பா, கோரைச்சம்பா, குறுஞ்சம்பா, மிளகுச் சம்பா, சீரகச்சம்பா, காளான்சம்பா, மைச்சம்பா, கோடைச்சம்பா, காடைச்சம்பா, மல்லிகைச் சம்பா, இலுப்பை பூ சம்பா, மணிச்சம்பா, கைவரைச்சம்பா, செஞ்சம்பா, கல்துண்டைச் சம்பா, குண்டுச்சம்பா, குன்றிமணிச்சம்பா, அன்னமழகி, சொர்ணவல்லி என பல பாரம்பரிய அரிசிகள் உண்டு.

உமி நீக்கிய அரிசியின் பொது குணங்கள்

உமி நீக்கிய அரிசியில் பச்சரிசி, புழுங்கல் அரிசி என இரு வகைப்படுத்துகின்றனர். நெல் மணியை அவித்து காயவைத்து உரலில் வைத்து குத்தி உமியை நீக்கினால் அது புழுங்கல் அரசி. நெல்லை வேகவைக்காமல் அப்படியே குத்தி உமியை நீக்கி பயன்படுத்தினால் அது பச்சரிசி.

Kaatu-yaanam-rice-traditional-rice-parambariya-arisi-organic-rice-low-cost-organic-rice-red-rice-sigapparisi-fiber-rich-rice-diabetic-rice-weight-loss-rice

அதேபோல் உமியை நீக்கி அதனுடன் தவிடையும் நீக்கினால் அது பட்டைதீட்டிய அரிசி அதுவே உமியை மட்டும் நீக்கி தவிட்டுடன் இருந்தால் அது கைக்குத்தல் அரிசி.

கைக்குத்தல் அரிசியின் மருத்துவப் பயன்கள்

  • எளிதில் சீரணமடையும்
  • மலச்சிக்கலைப் போக்கும்
  • சிறுநீரை நன்கு பிரிக்கும்
  • இரத்தத்தைச் சுத்தப்படுத்தி உடலுக்கு புத்துணர்வைக் கொடுக்கும்
  • பித்த அதிகரிப்பை குறைக்கும்
  • நீரிழிவு நோயின் தாக்கம் இருக்காது
  • உடலில் தேங்கியுள்ள கொழுப்பை நீக்கும் சருமத்தைப் பாதுகாக்கும் வாத, பித்த, கபத்தை அதனதன் நிலையில் வைத்திருக்கும்.

பெருமப்பாலும் இன்று பல இடங்களில் இயற்கை விவசாயம் செய்பவர்கள் நமது பாரம்பரிய அரிசிகளை கைக்குத்தல் முறையில் தயாரித்து விற்பனைசெய்கின்றனர். அவற்றை பயன்படுத்தினால் ஆரோக்கியம் மேம்படும்.

நாவிற்கு ருசி, தொண்டை வரை, ஆனால் பலன் ஒன்றுமில்லை. ஆரோக்கிய உடலுக்கு கைக்குத்தல் அரிசி சிறந்தது. பாலிஷ் செய்த வெள்ளை அரிசி சத்தற்றது என்பதை மறந்துவிடக்கூடாது.

(3 votes)