Inflammation, Body Pain in Tamil, Reasons behind inflammation; Inflammation, Body Pain in Tami;

கை, கால் வீக்கம் குணமாக

பிரபஞ்சத்தில் படைக்கப்பட்ட அனைத்து உயிரினமும் சராசரியான வளர்ச்சியையே ஒவ்வொரு நாளும் பெறுகின்றன. மனித இனமும் அவ்வாறே, உடல் வளர்ச்சி சீராகவே அமைந்துள்ளது. ஆனால் பலருக்கு காலை விடியும்போது கை, கால், முகம் என்று பல பாகங்கள் சதாரண நிலையை விட சற்று பெருத்தார்ப் போல் வீக்கம் பெறுகிறது. பின் நேரம் செல்ல செல்ல சாதாரண நிலைக்கு திரும்புவதும் இயல்பாகிறது. சராசரியாக 40 வயதை கடந்தவர்களுக்கு பெரும்பாலும் இந்த தொந்தரவு ஏற்படுகிறது.

உணவு, வேலை, பழக்க வழக்கம் என்று பல வழக்கமான நிகழ்வுகள் நம்மை நகர்த்திக் கொண்டிருக்க நம் உடலின் இந்த செயல்பாடு ஏன்? என்ற கேள்வியுடன் நாளைத் தொடங்கி பின் அதற்கு நேரம் செலவிட முடியாது நாளைக் முடிக்கிறோம். பின் அடுத்தநாளும் இந்த கேள்வியுடன் தொடக்கம். நாட்கள் செல்ல செல்ல உடலில் ஏற்படும் இந்த மாற்றத்தை பொருட்படுத்தாததினால் பதிப்பு தீவிரம் அடைகிறது.

கை விரல் முட்டிகளில் தொடங்கிய வீக்கம் மெல்ல மெல்ல உள்ளங்கை, கால்கள், முகம்,  முட்டிகள் என்று தொடர்வது மட்டுமல்லாது நமது வேலைகளையும் சரிவர செய்ய இயலாத நிலைக்கு தள்ளுகிறது. அடைவது விக்கம் திவிரம் அடைய திவிரம் அடைய  நம் அன்றாட செயல்பாடுகளை காலை சில மணி நேரம் முடக்க ஆரம்பிக்கும். 

Inflammation, Body Pain in Tamil, Reasons behind inflammation; Inflammation, Body Pain in Tami;

கை கால் வீக்கம் உருவாக காரணங்கள்

நமது உடல் பல கோடி உயிரணுக்களால் ஆனது. நாம் ஆரோக்கியமாகவும் நோய் நொடி இல்லாமலும் இருக்கு உடல் உறுப்புகள் சரிவர இயங்க வேண்டும். உடல் உறுப்புகள் சரியான முறையில் இயங்கவே உடலில் உள்ள உயிரணுக்கள் செயல்படுகின்றன. பல உயிரணுக்கள் ஒன்று சேர்ந்ததே உறுப்புகள்.

ஒவ்வொரு உயிரணுவும் ஒவ்வொரு உயிர் உப்பைக் கொண்டு நிர்மாணிக்கப் படுகிறது. இந்த உப்புக்களையே தாது உப்புக்கள் என்று அழைக்கிறோம். இந்த உயிர் உப்பான தாது உப்புக்களே உடலை சீராகவும், ஆரோக்கியமானதாகவும் வைத்திருக்க உதவுகின்றன. உடலில் இயக்கத்திற்கு மிக முக்கியமான பங்கு வகிப்பது இந்த தாது உப்புக்களே. இந்த தாது உப்புக்கள் இல்லாது மற்ற சத்துப் பொருட்கள் உணவாக உடலில் சேர்ந்தாலும் எந்த பயனும் இருக்காது.

உடல் இயக்கத்திற்கு தாது உப்புக்கள் பல உணவின் மூலம் பெறப்படுகிறது. சோடியம், பாஸ்பரஸ், பொட்டாசியம், குளோரின், சல்பர் மற்றும் கால்சியம் போன்றவை பன்னிரு தாது  உப்புக்களில் முக்கியமானவை. நாம் உண்ணும் உணவில் இருந்தும் உடலில் செயல்பாடுகளில் இருந்தும் பெறப்படும் இந்த தாது உப்புக்கள் பல நேரங்களில் குறைந்தும் அதிகரித்தும் காணப்படும். மேலும் உடலில் உள்ள சுரப்பிகள் உடலுக்கு தேவையான மற்ற தாது உப்புக்களை உணவின் துணைக்கொண்டு சுரக்கின்றன.  

நிணநீர் ஓட்டம்

நமது உடலில் இரத்த ஓட்டம் இருப்பதைப் போல் மற்றுமொரு ஓட்டமும் உள்ளது. அதுவே நிணநீர் ஓட்டம். நிணநீர் வெள்ளை அணுக்களையும், நோய் எதிர்ப்பு ஆற்றலையும் பெற்றிருக்கும். உடலில் (இரத்தத்தில்) தேவைக்கு அதிகமாக இருக்கும் தாது உப்புக்களை இரத்தம் வெளியேற்ற அவற்றை இந்த நிணநீர் ஓட்டம் பெற்றுக்கொள்ளும் (சாக்கடைக் கழிவுகளைப் போல்).

கழிவு நீர்ப் பொருட்களை வெளியேற்றுவதில் இந்த நிணநீர் முக்கிய பங்கு வகிக்கிறது. அதிகமான தாது உப்புக் கழிவுகளுடன் நிணநீர் உடல் முழுவதும் சுற்றி வரும் போது அதில் உள்ள தேவையற்ற (கழிவு) தாதுக்களை உடலின் மென்மையான சதையின் உயிரணுக்கள் உறிஞ்சிக்கொள்ளும். அவ்வாறு உட்சென்ற கழிவுகளால் உயிரணுக்களின் அளவு பெரிதாகும்.  உயிரணுக்களின் அளவு பெரிதாக மொத்த உறுப்பும் பெரிதாகி வீங்கினர்ப் போல் காணப்படும்.

Inflammation, Body Pain in Tamil, Reasons behind inflammation; Inflammation, Body Pain in Tami;

உணவு முறையும் வீக்கத்தின் காரணமும்

உடல் ரீதியாக பல செயல்பாடுகள் வீக்கத்திற்கு காரணமானாலும், நம் அன்றாட வாழ்க்கை முறை இவ்வாறான வீக்கத்திற்கு பெரிய அளவில் காரணங்களாக அமைகிறது. உடலின் தாது உப்புக்களின் பற்றாக்குறை அல்லது கூடுதலே இந்த உடல் வீக்கத்திற்கு காரணம் என்று பார்த்தோம்.

மூட்டு வலி, துதி கால் வலி உள்ளவர்களுக்கு தாது உப்புக்களின் சமநிலையின்மை அதிக தொந்தரவுகளை ஏற்படுத்தக்கூடும். அதிக உப்புக் கழிவு உள்ளவர்களின் மூட்டுகளில் உள்ள கிளைகோஜன் அரிக்கப்பட்டு நாள் பட்ட மூட்டு வலியாக மாற வாய்ப்பு உள்ளது.

அதிகப்படியான தாது உப்புக்கள் (உப்புக் கழிவுகள்) உள்ளவர்களுக்கு உப்பு வியர்வையும் அதிகரிக்கும். இவர்களுக்கு மற்றவர்களைக் காட்டிலும் உடலின் வியர்வை அதிகமாகவும் துர்நாற்றத்துடனும் இருக்கும். மேலும் எதிர்காலத்தை நோக்கிய பயம் அதிகமாகவும்  இவர்களுக்கு இருக்கும். 

இவை அனைத்திற்கும் பெரிய அளவில் காரணங்கள் என்று பார்த்தால் அவை நாம் அன்றாடம் எடுத்துக்கொள்ளும் இன்றைய நாகரீக சக்கை உணவுகள், அதிகப்படியான உணவுகள் மற்றும் துரித உணவுகளால். அதிகப்படியான உணவுகள் என்பது உண்ட உணவு செரிமானமாகாமல் அடுத்த வேலை உணவு உண்பது ஆகும். உயிர் சத்துக்கள் இல்லாது சக்கை உணவுகளை அதிகம் உண்பதும் இதற்கு முக்கியமான காரணம். 

இன்று மாநகரங்களில் மிக பிரபலமாகி வரும் மண்ணில்ல வீட்டு மாடித் தோட்டமும், இரசாயனங்கள் கொண்டு விளைவிக்கப்படும் காய், பழங்கள் போன்றவற்றினாலும் இந்த தாது உப்பு சமநிலையின்மை தொந்தரவுகள் அதிகரித்து வருகிறது.

காய் கனிகள் இயற்கையின் வரப்பிரசாதங்கள், ஆனால் இன்று இரசாயனங்கள், பூசிக் கொல்லி விசங்கள் கொண்டு விளைவிக்கப்படும் இவற்றில் இரசாயனங்களின் ஊடுருவல் அதிகமாகக் காணப்படுகிறது. இவற்றால் தாது உப்புக் குறைபாடோடு இரசாயனங்களின் ஆதிக்கம் மேலோங்குகிறது. சத்துப் பொருட்களுக்கு மேல் கழிவுகள் உடலில் சேர்க்கிறது. இதனால் உணவின் மூலம் உடல் சுரக்கும் உப்புக்களும் பாதிக்கப்பட்டு, நேரடியாக கொடுக்க அதனையும் உடல் ஏற்றுக்கொள்ள உடல் மறுக்கின்றது.

உதாரணத்திற்கு உடலில் ஐயோடின் (iodine) என்ற தாது உப்பு பற்றாக்குறை ஏற்ப்படுகிறது, அதனை சரிசெய்ய ஐயோடின் உப்பை பயன்படுத்துகின்றனர், ஆனால் உடல் அதனை ஏற்றுக்கொள்ளது கழிவாக உருமாற்றி இந்த பற்றாக்குறையை தீவிரம் அடையச்செய்து அடுத்த நிலை நோயை வரவளைகிறது. 

இரசாயனங்கள் மட்டுமில்லாது இன்று பல இடங்களில் மண்ணில்லாத வீட்டுக் காய்கறித் தோட்டம் மிகப் பிரபலமாகிறது. மண்ணில் இருந்து பல இயற்கை கனிமங்கள் (minerals  வைரம், தங்கம்) கிடைக்கின்றன. அதேப் போல் மண்ணில் இருந்து இயற்கை தாது உப்புக்களும் செடி மரங்கள் வழியாக காய் கனிகளுக்கு செல்கிறது. மண்ணில்லாமல் தங்கமும் வைரமும் இல்லாததுப் போல் மண்ணில்லாமல் இயற்கை சத்துப் பொருட்களும் (தாது உப்புக்கள், mineral salt) இல்லை. 

ஆகா நாம் உண்ணும் உணவில் சத்துக் குறைபாடு இருக்க அது உடலிலும் வெளிப்படுகிறது. அந்த வெளிப்பாடு பல விதங்களில் பல நோய்களாக தோன்றுகிறது. கை, கால் வீக்கம் தொடங்கி arthritis வரை நீண்டு இந்த சமநிலையின்மை காரணமாக பலர் அன்றாடம் வாழ்க்கையை சிரமத்துடன் நடக்க கூட முடியாமல் நகர்த்துகின்றனர். 

சமநிலையின்மை – கூடுதல் தாது உப்பு உள்ளவர்களுக்கு காலையில் வீக்கம் பின் நேரம் செல்ல செல்ல அது மறையும். தாது உப்பு குறைபாடு உள்ளவர்களுக்கு நேரம் செல்ல செல்ல இரவு வீக்கம் தோன்றும். 

கை கால் வீக்கத்தை எவ்வாறு சரி செய்வது?

  • நல்ல சத்தான காய், கனிகளை இயற்கையான முறையில் (Organic Soil Cultivation) விளைவிக்கப் பட்டு அளவோடு எடுத்துக் கொள்ள வேண்டும். 
    தாது உப்புக்கள் அதிகம்  கொண்ட கீரை வகைகளை தொடர்ந்து எடுத்து வர விரைவில் நலம் பெறலாம். உடல் ஏற்றுக்கொள்ளும் கால்சியத்தை இந்த கீரைகள் பெற்றுள்ளது. இன்று கிடைக்கும் பாலை தவிர்க்கவும், இந்த பாலில் உள்ள கால்சியம் உடலில் கழிவுகளாக சேரும். தாய்ப்பால் மட்டுமே சிறந்தது. 
  • உணவில் கடல் உப்பை குறைத்துக் கொள்ள வேண்டும். தேவைப்பட்டால் இந்து உப்பு குறைவாக பயன்படுத்தவும். 

  • மாவுச் சத்து மட்டும் கொண்ட உணவு வகைகளை குறைத்துக் கொள்ள வேண்டும். 
  • கை கால்களுக்கு தொடர்ந்து பயிற்சி கொடுக்க வேண்டும். வீங்கிய விரல்களுக்கு பயிற்சி( அசைவு கொடுப்பதன் மூலம்), கையை தலை மேல் உயர்த்துவது, வீக்கம் கொண்ட இடங்களை நன்கு தேய்த்து விடுவது, வீட்டில் அல்லது அலுவலகத்தில் ஒரு மிதமான வெப்பநிலை பராமரிப்பது. நல்ல அசைவு கொடுக்கும் பொது தங்கி இருக்கும்  கழிவுகள் வெளியேற்றப்படும்.

யோகா முறையில் உட்கட்டாசனம்

உடலை இறுக்கமாக இல்லாமல் தளர்த்தி வைத்துக்கொண்டு நேராக நிமிர்ந்து நிற்க வேண்டும். பின்னர் 2 கால்களுக்கு இடையே ஒரு அடி அகலம் இருக்குமாறு கால்களை விரித்து வைத்துக் கொண்டு கைகளை தோள்பட்டை உயரத்துக்கு நேராக முன்னே நீட்ட வேண்டும்..பின்பு உடலை மெதுவாக கீழே இறக்கி நாற்காலி மீது அமருவது போன்று மெதுவாக உட்கார வேண்டும். 

முதுகெலும்பு நேராக இருக்குமாறு பார்த்துக் கொள்வதுடன் முன்பக்கமாகவோ, பின்பக்கமாவோ உடலை வளைக்கக் கூடாது. முதுகெலும்பு 90 டிகிரி போன்று நேராக இருக்க வேண்டும். இது தான் உட்கட்டாசனம் ஆகும். முதலில் 5 முதல் 10 வினாடிகள் செய்யலாம். தினந்தோறும் நன்றாக பயிற்சி செய்த பின்னர் 20 முதல் 30 வினாடிகள் வரை செய்ய வேண்டும். 

Yoga, Inflammation, Body Pain in Tamil, Reasons behind inflammation


இந்த ஆசனத்தை செய்யும் போது மூட்டுவலி ஏதாவது ஏற்பட்டால் வலி நீங்கிய பின்னரே செய்ய வேண்டும். உட்கட்டாசனம் செய்யும் போது சாதாரண நிலையில் மூச்சை வெளியில் விட வேண்டும். செய்து முடித்த பின்னர் ஆழ்ந்து மூச்சை இழுத்து விட வேண்டும். 

Inflammation, Body Pain in Tamil, Reasons behind inflammation, Shoulder Pain

பயன்கள்

  • கால் மூட்டு வீக்கம், மூட்டில் நீர் தேங்கல், வலி, கணுக்கால் மூட்டுவலி, உளைச்சல், வாதம் எல்லாம் எட்டிப் பார்க்காமலேயே ஓடி விடும். தொடர்ந்து செய்வதினால் இந்த பயன்கள்.
  • தோள் பட்டை வலி சரியாகும். நடைப்பயிற்சி செய்யாமலேயே பயிற்சியை செய்தது போன்ற பலனையும், முதுகெலும்புக்கு பலத்தையும் உட்கட்டாசனம் கொடுக்கிறது.
(12 votes)