கூந்தல் வளர்ச்சி

காரிருங் கூந்தலைப் பற்றி பேசாத காப்பியங்கள் உண்டா? அல்லது காரிருங் கூந்தலைப் பற்றி எண்ணாத பெண்கள் உண்டா?. கூந்தல், பெண்களின் மகிழ்ச்சி, அயர்ச்சி, இன்பம், துன்பம், சினம், வேட்கை முதலான மன உணர்வுகளை வெளிப்படுத்தும் கருவியாகவும் கையாளப்படுகிறது. கூந்தல் பராமரிப்பிலும், கூந்தல் அழகிலும் அன்று முதல் இன்று வரை பெண்கள் அதிக அளவு கவனம் செலுத்தி வருகின்றனர். 

கூந்தல் மட்டுமா பெண்களுக்கு அழகு சேர்ப்பது கூந்தலோடு கண்கள், மூக்கு என்று அடுக்கிக் கொண்டே போகலாம். இயல்பாகவே பெண்களுக்கு அழகாகவும் அடக்கமாகவும் அவை அமைந்துள்ளது. அவற்றை இயற்கை முறையில் பராமரித்தால் வெளிப்படும் எதார்த்த அழகிற்கு அளவே இல்லை. 

இன்று அழகு என்பது நிறத்தை பொறுத்தே பெரும்பாலும் தவறாக தீர்மானிக்கப்படுகிறது. நிறம் என்ற போர்வைக்குள் மாட்டிக்கொண்டு நிலை தெரியாமல் திக்கு முக்காடிக் கொண்டிருகின்றனர் நம்மவர்கள். முகப்பொலிவு, நிரமூட்டல் போன்றவற்றை ஏதோ கடைகளில் கிடைக்கும் கிரிம்களிலும், அழகூட்டிகளிலும் பெற்று விடலாம் என்று இன்னும் எவ்வளவு காலம் தான் ஏமாறப்போகிறோம். 

வணிக பொருட்கள்

சம உரிமை பற்றி பேசிக்கொண்டிருக்கும் நாம், பெரிய அளவில் இந்த வணிக பொருட்களில் மூலம் முகத்தின் நிறத்தை கூட்டிவிடலாம் என்று தவராக எண்ணிகொண்டிருக்கிறோம். பத்து பதினைந்து வருடங்களுக்கும் மேல் இவற்றை பயன்படுத்தியும் எந்த பயனும் இல்லை, காசை கரைத்ததைத் தவிர என்று நம் அனைவருக்கும் தெரியும். மாற்றத்தை ஏற்படுத்திவிடும் என்ற எண்ணத்தில் பல வணிகப் பொருட்களுக்கு நாள் தோறும் நாம் அடிமைகளாக இருக்கிறோம் என்று புரிந்து கொள்ள வேண்டும். 

புரிந்த பலர் வேறு வழி இல்லாமல் பயன்படுத்துகின்றனர். காரணம் அவற்றால் முகத்தின் இயல்பு நிலை முற்றிலும் மாறுபட்டு இருப்பதே. இரசாயன பூச்சுகள் இன்றி முகமும் முடியும் பொலிவிழந்திருப்பதே இதற்கு காரணம். அதனால் மேலும் மேலும் இவற்றை பயன்படுத்த சருமம், தோல் வழியாக அந்த இரசாயனங்கள் உடலில் ஊடுருவி பல உபாதைகளையும் சரும நோய்களையும் உருவாக்குகிறது. முடிக்கு பயன்படுத்தும் ஷாம்பூக்கள் மூலம் முடி தொடர்ந்து  கொட்டுவதும், சத்தற்ற நிலையும், வறண்ட தலைமுடி அழகின்றி காணப்படுகிறது. 

நல்ல புரதம்

முடி பளபளப்பிற்கும் முக பொலிவிற்கும் காரணம் உணவின் மூலம் நாம் உட்கொள்ளும் நல்ல புரதங்களே தவிர இந்த செயற்கை பொருட்கள் இல்லை. முடி உதிர்வு, முகப்பொலிவின்மை சத்துப் பற்றாக்குறையை குறிக்கும். புரதம், இரும்புச் சத்து, அனைத்து வைட்டமின்கள், தாது உப்புகள், அமினோ அமிலங்கள் நிறைந்த உணவுகளே முடியை அடர்த்தியாக்கி, வளப்படுத்தும் தன்மை கொண்டவை. இவற்றை தனியாக உட்கொள்ளாது உணவின் மூலம் பெருவோமானால் கூந்தலும் சருமமும் ஆரோக்கியமாகவும் பொலிவுடன் அழகாகவும் இருக்கும். 

எது புரதம்?

அசைவ உணவில் மட்டும் தான் அதிக புரதம் இருக்கிறது என்று தவறான கருத்துக்கள் பல நம்மிடையே உள்ளது. அதிக உழைப்பின்றி புரதத்திற்காக அசைவ உணவை உண்பதினால் மேலும் மேலும் உடல் உஷ்ணம் கூடி முடி உதிர்வும் சருமம் போலிவும் கெட தொடங்கும். அசைவ உணவு மட்டுமல்லாமல் உடலுக்கு புரியாத ப்ரோடீன் ரிச் உணவுகளும் இன்று வெளிநாடுகளில் இருந்து படையெடுக்க தொடங்கிவிட்டது. உடலுக்கு புரியாத அல்லது எளிதாக உடல் ஏற்றுக்கொள்ளாத இந்த வகை புரதத்தினால் உடல்  பருமன்  உள்ளிட்ட புற்று நோய் வரை பல நோய்கள்  படை எடுக்க காரணமாகிறது. 

அமினோ அமிலங்கள் நிறைந்த புரதமும் வைட்டமின்களும் அன்றாடம் எளிமையாக உணவில் சேர எளிய நம் பாரம்பரிய உணவுகளே போதும். ‘உணவே மருந்து மருந்தே உணவு’ என்ற வகையில் உடலுக்கும் நம் மரபணுவிற்கும் பரிட்சயமான உணவான நம்  சிறுதானிய உணவுகள், பாரம்பரிய அரிசி உணவுகள், நாட்டு பயறுவகைகள், தானியங்கள் நாட்டு காய்கள், பருவகாலத்தில் கிடைக்கும் பழங்களே போதுமானதாக இருக்கும்.

பயறு வகைகள்

உடலுக்கு தேவையான சத்துக்களை முளைகட்டிய பயறுகள் பெருமளவில் அளிக்கிறது. பச்சைபயறு, நரிபயறு, கொள்ளு, மொச்சை, கொண்டைக்கடலை, உளுந்து போன்ற பயறுகளை அன்றாடம் சிறிதளவு சேர்த்துக்கொள்வதால் எளிமையகப் பெறலாம்.

Herbal juice, mooligai juice, fruit juice, vegetable juice, healthy juice, herb juice recipe in tamil

இரும்பு சத்துக்கள்

அன்றாடம் இரும்பு சத்துக்கள் நிறைந்த உணவுகளை வைட்டமின் சி சத்துக்கள் கொண்ட உணவுகளுடன் சேர்த்து உண்பதால் உடலுக்கு தேவையான தாது சத்துக்களை எளிதாக பெறலாம். கருவேப்பிலை, எலுமிச்சை, நாட்டு சர்க்கரை (கூந்தல் வளர்ச்சியை கட்டுபடுத்தும் பானம் காணொளி) சேர்த்து ஒரு பானம் தயரித்து பருக முடியுதிர்வு குறைவதுடன் கூந்தல் வளர்ச்சி அதிகரிக்கும். அதேபோல் கொத்தமல்லி சாறு, பீட்ரூட் சாறு, நெல்லிக்காய் சாறு போன்றவற்றையும் கொண்டு பானம் தயாரித்து பருகலாம்.

இவ்வாறான உணவுகளை அன்றாடம் உட்கொள்வதால் உடலுக்கு தேவையான சத்துகளையும் எளிதாக பெறலாம், கூந்தலும் கருகருவென்று அடர்த்தியாகவும் நீளமாகவும் வளரும். நரைமுடி குறையும்.

(2 votes)