வெந்தயத் தைலம்

வெந்தயம் தலையில் வரக்கூடிய உஷ்ணத்தை குறைத்து முடி வளர்ச்சியை அதிகரிப்பதோடு கூந்தல் கருமையாக வளரவும் உதவக்கூடியது. இந்த தைலத்தில் சோற்றுக் கற்றாழையும் வெந்தயமும் சேருவதால் அதனுடைய பலன் பல மடங்கு அதிகரிப்பது மட்டுமல்லாமல் கூந்தல் கருகருவென்று வளருவதற்கும் துணையாக இருக்கிறது.

இவையிரண்டும் இணைவதில் ஏற்படும் வேதியல் மாற்றங்கள் கூந்தலை கறுப்பாக்கும் செயலை செய்யக் கூடியதாகவும் உள்ளது. இந்த வெந்தயத் தைலத்தை செய்வதற்கு மிக முக்கியமான ஒரு பொருள் வெந்தயமும் அடுத்ததாக சோற்றுக் கற்றாழையும்.

தேவையான பொருட்கள்

  • ஒரு மடல் சோற்றுக்கற்றாழை
  • 2 ஸ்பூன் வெந்தயம்
  • 200 கிராம் தேங்காய் எண்ணெய்

செய்முறை

  • சோற்றுக் கற்றாழையை நடுவில் லேசாக பிளந்துவிட்டு சோற்றுப் பகுதியில் வெந்தயத்தை வைத்து கட்டிவிட வேண்டும்.
  • ஓரிரு நாட்களில் அந்த வெந்தயங்கள் முளைத்துவிடும்.
  • அந்த முளைத்த வெந்தயங்களை வெளியிலெடுத்து அவற்றை நன்கு அம்மியில் அரைத்து வடை போல தட்டி நிழல் காய்ச்சலாக காய வைத்துக் கொள்ள வேண்டும்.
  • நன்கு காய்ந்த பின், காய்ந்த வெந்தய வடைகளை தேங்காய் எண்ணெயில் சேர்த்து வெயிலில் ஒரு பத்து நாட்கள் வைக்க வெந்தயத் தைலம் தயாராகிவிடும்.

  • வெயிலில் வைக்கமுடியாத இடங்களில் லேசாக தேங்காய் எண்ணெயை சூடு படுத்தி, அதில் வெந்தய வடையை சேர்த்து இரண்டு நாள் ஊறவைக்கவேண்டும்.
  • பின் எண்ணெயை வடிகட்டி வேறொரு கண்ணாடி பாட்டிலில் பத்திரப்படுத்தி வைக்க வேண்டும்.

குறிப்புகள்

கூந்தல் கருமையாக நன்கு வளரச் செய்யும் சிறந்த ஒரு தைலம் இந்த வெந்தய தைலம். உடலுக்கு குளிர்ச்சி அளிக்கக்கூடியது. மிகவும் சுலபமாக தயாரிக்க கூடியது. செலவே இல்லாமல் கூந்தலை பாதுகாக்கவும் மிகச் சிறந்த தைலம். தயாரிப்பதும் சுலபம். உடல் உஷ்ணத்தைக் குறைக்கவும் தலை வெப்பத்தை குறைக்கவும் உதவுகிறது.

5 from 1 vote

கூந்தல் வளர வெந்தயத் தைலம்

வெந்தயம் தலையில் வரக்கூடிய உஷ்ணத்தை குறைத்து முடி வளர்ச்சியை அதிகரிப்பதோடு கூந்தல் கருமையாக வளரவும் உதவக்கூடியது. இந்த தைலத்தில் சோற்றுக் கற்றாழையும் வெந்தயமும் சேருவதால் அதனுடைய பலன் பல மடங்கு அதிகரிப்பது மட்டுமல்லாமல் கூந்தல் கருகருவென்று வளருவதற்கும் துணையாக இருக்கிறது.இவையிரண்டும் இணைவதில் ஏற்படும் வேதியல் மாற்றங்கள் கூந்தலை கறுப்பாக்கும் செயலை செய்யக் கூடியதாகவும் உள்ளது. இந்த வெந்தயத் தைலத்தை செய்வதற்கு மிக முக்கியமான ஒரு பொருள் வெந்தயமும் அடுத்ததாக சோற்றுக் கற்றாழையும்.
Fenugreek Hair oil
மொத்த நேரம் : – 10 days

தேவையான பொருட்கள்

  • ஒரு மடல் சோற்றுக்கற்றாழை
  • 2 ஸ்பூன் வெந்தயம்
  • 200 கிராம் தேங்காய் எண்ணெய்

செய்முறை

  • சோற்றுக் கற்றாழையை நடுவில் லேசாக பிளந்துவிட்டு சோற்றுப் பகுதியில் வெந்தயத்தை வைத்து கட்டிவிட வேண்டும்.
  • ஓரிரு நாட்களில் அந்த வெந்தயங்கள் முளைத்துவிடும்.
  • அந்த முளைத்த வெந்தயங்களை வெளியிலெடுத்து அவற்றை நன்கு அம்மியில் அரைத்து வடை போல தட்டி நிழல் காய்ச்சலாக காய வைத்துக் கொள்ள வேண்டும்.
  • நன்கு காய்ந்த பின், காய்ந்த வெந்தய வடைகளை தேங்காய் எண்ணெயில் சேர்த்து வெயிலில் ஒரு பத்து நாட்கள் வைக்க வெந்தயத் தைலம் தயாராகிவிடும்.
  • வெயிலில் வைக்கமுடியாத இடங்களில் லேசாக தேங்காய் எண்ணெயை சூடு படுத்தி, அதில் வெந்தய வடையை சேர்த்து இரண்டு நாள் ஊறவைக்கவேண்டும்.
  • பின் எண்ணெயை வடிகட்டி வேறொரு கண்ணாடி பாட்டிலில் பத்திரப்படுத்தி வைக்க வேண்டும்.

குறிப்புகள்

கூந்தல் கருமையாக நன்கு வளரச் செய்யும் சிறந்த ஒரு தைலம் இந்த வெந்தய தைலம். உடலுக்கு குளிர்ச்சி அளிக்கக்கூடியது. மிகவும் சுலபமாக தயாரிக்க கூடியது. செலவே இல்லாமல் கூந்தலை பாதுகாக்கவும் மிகச் சிறந்த தைலம். தயாரிப்பதும் சுலபம்.
உடல் உஷ்ணத்தைக் குறைக்கவும் தலை வெப்பத்தை குறைக்கவும் உதவுகிறது.
(2 votes)

1 thought on “வெந்தயத் தைலம்

Comments are closed.