கொய்யா இலை

கொய்யா மரத்தை ஒரு சிலர் வீடுகளில் வைத்து பழங்களுக்காக பயனடைகின்றனர். பல இடங்களில் தோப்பாக வைத்தும் பலன் அடைகின்றனர். கொய்யா மரத்தின் பழங்களை நாம் சாப்பிடுகிறோம். அதன் இலைகளும் நமது நோய் தீர்க்கும் மருந்தாக பயன்படுகிறது. பல சத்துக்களையும், ஆன்டி ஆக்ஸிடென்ட் நிறைந்தது இந்த கொய்யா இலைகள். இதனை தேநீராக அவ்வப்போது செய்து பருக உடல் புத்துணர்வடைவதுடன் இருப்பதுடன் ஆரோக்கியம் மேம்படும்.

அதிக அளவில் வைட்டமின் சி சத்துக்கள் நிறைந்த இவை உடலில் ஏற்படும் சளி, காய்ச்சல், நோய் தொற்றுகளால் ஏற்படும் பாதிப்புகளுக்கும் சிறந்த பலனை அளிக்கிறது. முடி ஊதிர்வை தடுக்கும், இளநரையை தடுத்து இளமையை பேணிக்காக்க உதவும்.

நிற்காத சீதபேதி, மலச்சிக்கல், நீரிழிவு, இருதய நோய்கள், மாதவிடாய் கோளாறுகள், அடி வயிற்று வலி, உடல் பருமன், வீக்கங்கள், ஆண்மை கோளாறு, குழந்தையின்மை போன்ற தொந்தரவுகளுக்கு மிக சிறந்த பலனை அளிக்கக்கூடியது. மேலும் நோய் எதிர்ப்பு ஆற்றலை பல மடங்கு அதிகரிக்க கூடியதாகவும் உள்ளது இந்த கொய்யா இலைகள்.துவர்ப்பு சுவை கொண்ட இவை இரத்த சோகைக்கும் சிறந்த மருந்தாக உள்ளது.

பசி உண்டாக

சாப்பிட்ட ஆகாரம் ஜீரணம் ஆகாமல் பசிமந்தப் பட்டிருக்கும் சமயம் கொய்யா இலையின் கொழுந்து இலையில் மூன்றை எடுத்து அதை அம்மியில் வைத்து அதனுடன் அரை தேக்கரண்டியளவு சீரகத்தையும் ஒரு சுண்டைக்காய் அளவு உப்பும் சேர்த்து மை போல அரைத்து உருட்டி வாயில் போட்டு சிறிதளவு வெந்நீர் குடிக்க வேண்டும். மூன்று மணி நேரத்தில் நல்ல பசி உண்டாகும். அஜீரணம், பசி மந்தம் அகலும்.

காலரா குணமாக

தேவையான அளவு கொய்யா இலையைக் கொண்டு வந்து அதை கழுவி பொடியாக நறுக்கி ஒரு கைப்பிடியளவு எடுத்து ஒரு சட்டியில் போட்டு ஒரு மிளகாயையும் விதையுடன் கிள்ளிப் போட்டு நன்றாக வறுக்க வேண்டும். இலை வதங்கி சுருளும் சமயம் இரண்டு டம்ளர் தண்ணீர் விட்டு ஒரு டம்ளர் அளவுக்கு சுண்டக் காய்ச்சி இறக்கி வைத்துக் கொண்டு அரை மணி நேரத்திற்கு ஒரு முறை 4 தேக்கரண்டி வீதம் கொடுத்து வந்தால் குணமாகும்.

பல் கோளாறு குணமாக

பல் சம்பந்தமான கோளாறுகளை கொய்யா இலை நன்கு குணப்படுத்தும் சக்தி வாய்ந்ததாக இருக்கிறது. பல் வலியினால் கஷ்டப்படும் பொழுது ஒரு கொய்யா இலையை வாயில் போட்டு மென்று நன்றாக மென்று வலியுள்ள இடத்தில் வைத்திருந்து அதைக் கொண்டு பல் துலக்கி வெந்நீரில் வாய் கொப்பளித்து வந்தால் பல் சம்பந்தமான கோளாறுகள் குணமாகும்.

கொய்யா இலை தேநீர்

https://www.youtube.com/watch?v=2iD3e0pPMeY&t=2s

(2 votes)