கொய்யா பழம் ஜூஸ்

வைட்டமின் சி சத்துக்கள் மிகுந்த கொய்யாப் பழ ஜூஸ். நோய் எதிர்ப்பு சத்துக்களை அள்ளிக்கொடுக்கும் அற்புதமான ஜூஸ். மிக எளிமையாக தயாரிக்கக் கூடியது. சுவையானது மட்டுமல்லாமல் உடலுக்கு பலத்தையும் பலநோய்களுக்கு மருந்தாகவும் இருக்கக் கூடியது. கொய்யா மரத்தில் கொய்யா பழம் மட்டும் அதிக சத்துக்களை கொண்டதல்ல கொய்யா இலைகளும் அதிக சத்துக்களை கொண்டது. இந்த கொய்யா இலைகளைக் கொண்டு தேநீர் தயாரித்து பருகுவதால் பல நன்மைகளைப் பெறமுடியும்.

தேவையான பொருட்கள்

  • 1 கொய்யாப்பழம்
  • ¼ ஸ்பூன் மிளகு தூள்
  • ½ ஸ்பூன் சீரகத் தூள்
  • தேவையான அளவு இந்துப்பு
  • தேவையான அளவு தண்ணீர்

செய்முறை

  • கொய்யாப் பழத்தை நன்றாகக் கழுவி விட்டு துருவிக் கொள்ள வேண்டும்.
  • பின் அதனை மத்தால் கடையவேண்டும் அல்லது கைகளால் நன்கு பிசைந்துக் கொள்ளவேண்டும்.
  • அத்துடன் தேவைக்கேற்ப தண்ணீர் சேர்த்து மிளகுத்தூள், சீரகத் தூள், சிறிது இந்துப்பு சேர்த்து பருகலாம்.
  • இனிப்பு தேவையெனின் இந்துப்பை தவிர்த்து நாட்டுசர்க்கரை சேர்த்துப் பருகலாம்.
5 from 1 vote

கொய்யா பழம் ஜூஸ்

வைட்டமின் சி சத்துக்கள் மிகுந்த கொய்யாப் பழ ஜூஸ். நோய் எதிர்ப்பு சத்துக்களை அள்ளிக்கொடுக்கும் அற்புதமான ஜூஸ். மிக எளிமையாக தயாரிக்கக் கூடியது. சுவையானது மட்டுமல்லாமல் உடலுக்கு பலத்தையும் பலநோய்களுக்கு மருந்தாகவும் இருக்கக் கூடியது.
ஆயத்த நேரம் : – 5 minutes
மொத்த நேரம் : – 5 minutes

தேவையான பொருட்கள்

  • 1 கொய்யாப்பழம்
  • ¼ ஸ்பூன் மிளகு தூள்
  • ½ ஸ்பூன் சீரகத் தூள்
  • தேவையான அளவு இந்துப்பு
  • தேவையான அளவு தண்ணீர்

செய்முறை

  • கொய்யாப் பழத்தை நன்றாகக் கழுவி விட்டு துருவிக் கொள்ள வேண்டும்.
  • பின் அதனை மத்தால் கடையவேண்டும் அல்லது கைகளால் நன்கு பிசைந்துக் கொள்ளவேண்டும்.
  • அத்துடன் தேவைக்கேற்ப தண்ணீர் சேர்த்து மிளகுத்தூள், சீரகத் தூள், சிறிது இந்துப்பு சேர்த்து பருகலாம்.
  • இனிப்பு தேவையெனின் இந்துப்பை தவிர்த்து நாட்டுசர்க்கரை சேர்த்துப் பருகலாம்.

1 thought on “கொய்யா பழம் ஜூஸ்

  1. TBN Sri Lanka

    5 stars
    Super

Comments are closed.