கொய்யாப் பழம்

கொய்யாப்பழம் துவர்ப்புடன், இனிப்பு சுவை கலந்த அற்புதமான பழம். இதில் வைட்டமின் ஏ உயிர் சத்து சிறிதளவும் கிடையாது. வைட்டமின் சி உயிர் சத்து தான் அதிக அளவில் இருக்கிறது. வேறெந்த பழங்களையும் விட கொய்யாவில் தான் வைட்டமின் சி உயிர் சத்து அதிக அளவில் நிறைந்துள்ளது. வளரும் சிறுவர்களுக்கு வைட்டமின் சி சத்து நிறைந்த உணவு வகைகளையே அதிகமாக கொடுக்க வேண்டும். வைட்டமின் சி சத்துக்கள் எலும்புகளுக்கு பலத்தையும், உறுதியையும் அளித்து சீரான வளர்ச்சியையும் பெற உதவுகிறது.

எந்த ஒரு பழ வகையிலும் இல்லாத அளவு வைட்டமின் சி உயிர் சத்து நிறைந்த கொய்யாப் பழத்தை வளரும் சிறுவர்களுக்கு அடிக்கடி அளிப்பது அவசியம்.

மலச்சிக்கல் உடையவர்கள் கொய்யாப் பழத்தினை அடிக்கடி உண்டு வர உடல் ஆரோக்கியம் மேம்பட்டு மலச்சிக்கலிலிருந்து முழுமையாக வெளிவர உதவும் பழங்கள். ரத்தசோகை குணமாகும். விஷக்கிருமிகளை கொல்லும் சக்தி கொய்யாப் பழத்திற்கு அதிகமாக உள்ளது. வியாதியை உண்டு பண்ணும் விஷக் கிருமிகள் ரத்தத்தில் கலந்தால் அதை உடனேயே கொன்று அழித்து விடும் ஆற்றல் இந்த கொய்யாப்பழத்திற்கு அதிகமாக உள்ளது.