பயறு வகைகளில், பருப்பு வகைகளில் சத்துக்கள் அதிகம் இருக்கக்கூடிய ஒரு பயறு பாசிப்பயறு. பாசிப் பருப்பிலும் பாசிப்பயறிலும் உயிர் சத்துக்களும் ஊட்டச்சத்துக்களும் அதிகமாகவே உள்ளது. புரதம், நார் சத்துக்கள், வைட்டமின் சத்துக்கள் என பலவிதமான சத்துக்கள் அதிக அளவில் உள்ளது.
உடல் சுகமில்லாதவர்கள், நோயுற்றவர்கள் மட்டுமில்லாமல் உடலாரோக்கியத்தில் அக்கறை உள்ள அனைவருக்கும் உகந்த ஒரு சத்தான சூப் இந்த பாசிப்பயறு சூப். அன்றாடம் சமையலில் பயன்படுத்த கூடிய தோல் நீக்கிய பாசிப்பருப்பை பயன்படுத்துவதற்கு பதில் இந்த சூப்பை பச்சை பயறு அதாவது முழு பயரில் தயாரிக்க சத்துக்கள் அதிகமாகும்.
தேவையான பொருட்கள்
- ஒரு கையளவு பச்சை பயறு
- 1 ஸ்பூன் நல்லெண்ணெய் அல்லது பசு நெய்
- சிறிது கடுகு
- சிறிது வெந்தயம்
- சிறிது கருவேப்பிலை
- உப்பு
- 1 ஸ்பூன் எலுமிச்சை சாறு
செய்முறை
- முளைகட்டிய பச்சை பயறு அல்லது வறுத்து எடுத்த பச்சைப்பயிரை ஒரு கப் தண்ணீர் சேர்த்து வேகவைத்து எடுத்துக் கொள்ளவேண்டும்.
- லேசாக மசித்து தண்ணீரை மட்டும் இறுத்து எடுத்துக்கொள்ள வேண்டும்.
- ஒரு வெறும் வாணலியில் மிளகை லேசாக வறுத்து பொடித்து எடுத்துக் கொள்ள வேண்டும்.
- ஒரு வாணலியில் நல்லெண்ணெய் அல்லது நெய் சேர்த்து சிறிது கடுகு, வெந்தயம், கருவேப்பிலை சேர்த்து தாளித்து பாசிப்பயறு சூப் நீரில் சேர்க்கவும்.
- இந்த சூப்புடன் தேவையான அளவு உப்பு, வறுத்து எடுத்து பொடித்து வைத்திருக்கும் மிளகுத்தூளையும் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
- இறுதியில் சிறிது எலுமிச்சை சாறு சேர்க்கவும்.
- கூடுதல் சுவைக்கு மாங்காய் தூளையும் சேர்த்துக் கொள்ளலாம்.
- இறுதியில் சிறிது கொத்தமல்லி தூவி பரிமாற வேண்டும்
- அவ்வளவுதான் நல்ல ஒரு சத்தான சுவையான பச்சைப் பயறு சூப் தயார்.
பச்சை பயறு சூப் பயன்கள்
- இந்த சூப்பில் இருக்கக்கூடிய சத்துக்கள் உடலில் இருக்கக்கூடிய கழிவுகளை வெளியேற்ற உதவுவது மட்டுமல்லாமல் உடலுக்கு நல்ல ஒரு தெம்பையும் ஆரோக்கியத்தையும் அளிக்கும்.
- எளிமையாக செரிமானம் ஆகக்கூடியது. வாய்வு சார்ந்த பிரச்சனைகள் இருப்பவர்கள் இதனுடன் சிறிது ஓமம் அல்லது சீரகம் சேர்த்து பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
- பிரசவித்த பெண்களுக்கு சிறந்த ஒரு சூப்பாக இது இருக்கும்.
- புரதச்சத்துக்கள் மட்டுமில்லாமல் எளிமையாக செரிமானத்தையும் அளிக்கக் கூடியதாகவும் இந்த சூப் இருக்கும்.
- இரும்புச் சத்துக்கள், தாது உப்புக்களையும் உடலுக்கு தேவையானவாறு உட்கிரகிக்கும் தன்மை கொண்டது இந்த சூப்.
- நீரிழிவு உள்ளவர்கள் தொடர்ந்து எடுத்துக் கொள்ள சிறந்தது.
- நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க கூடியது.
- அதிகமான நார்ச்சத்து, புரதச் சத்துகளையும் கொண்டிருக்கக்கூடியது.
- ஹார்மோன் சார்ந்த பாதிப்புகள் இருப்பவர்கள் இந்த சூப்பை அவ்வப்பொழுது எடுத்துக்கொள்ள நல்ல ஒரு பலன் கிடைக்கும்.
- ரத்தக்கொதிப்பு, உடல் பருமன், உடல் எடை போன்ற பிரச்சனைகளுக்கும் சிறந்தது.
பாசிப்பயறு சூப்
பயறு வகைகளில், பருப்பு வகைகளில் சத்துக்கள் அதிகம் இருக்கக்கூடிய ஒரு பயறு பாசிப்பயறு. பாசிப் பருப்பிலும் பாசிப்பயறிலும் உயிர் சத்துக்களும் ஊட்டச்சத்துக்களும் அதிகமாகவே உள்ளது. புரதம், நார் சத்துக்கள், வைட்டமின் சத்துக்கள் என பலவிதமான சத்துக்கள் அதிக அளவில் உள்ளது.
தேவையான பொருட்கள்
- ஒரு கையளவு பச்சை பயறு
- 1 ஸ்பூன் நல்லெண்ணெய் அல்லது பசு நெய்
- சிறிது கடுகு
- சிறிது வெந்தயம்
- சிறிது கருவேப்பிலை
- உப்பு
- 1 ஸ்பூன் எலுமிச்சை சாறு
செய்முறை
- முளைகட்டிய பச்சை பயறு அல்லது வறுத்து எடுத்த பச்சைப்பயிரை ஒரு கப் தண்ணீர் சேர்த்து வேகவைத்து எடுத்துக் கொள்ளவேண்டும்.
- லேசாக மசித்து தண்ணீரை மட்டும் இறுத்து எடுத்துக்கொள்ள வேண்டும்.
- ஒரு வெறும் வாணலியில் மிளகை லேசாக வறுத்து பொடித்து எடுத்துக் கொள்ள வேண்டும்

Healthy