உடலில் ஏற்படும் அசதி, வலிகளுக்கு மிக சிறந்த உணவு. செரிமானத்தை அதிகரிக்கும். அவ்வப்பொழுது இதனை தயாரித்து உண்பதால் உடலில் ஏற்படும் பல தொந்தரவுகள் நீங்கும்.
தேவையான பொருட்கள்
- 1 கப் கிச்சிலி சம்பா புழுங்கல் அரிசி (எந்த புழுங்கல் அரிசியை வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளலாம்)
- சிறிது உளுந்து
- சிறிது சீரகம்
- 2 துண்டு இஞ்சி
- 15 – 20 பல் பூண்டு
- 4 – 5 ஸ்பூன் தேங்காய் எண்ணெய்
- 2 ஸ்பூன் மல்லித் தூள்
- 10 வெங்காயம்
- உப்பு
- பெருங்காயம்
செய்முறை
- முதலில் கிச்சிலி சம்பா புழுங்கல் அரிசியை இரண்டு மூன்று முறை நனறாக களைந்து, ஒரு மணி நேரம் ஊறவைத்து சாதமாக வடித்துக்கொள்ள வேண்டும். (கிச்சிலி சம்பா அரிசி சாதம் சமைக்கும் முறை )
- இஞ்சி, பூண்டை நன்கு அரைத்து விழுதாக எடுத்துக் கொள்ளவேண்டும்.
- பின் ஒரு வாணலியில் தேங்காய் எண்ணெய் ஊற்றி சீரகம், உளுந்து தாளித்து நீளமாக நறுக்கிய வெங்காயத்துடன் சேர்த்து நன்கு வதக்கவும்.
- வெங்காயம் நன்கு பொன்னிறமாக வதங்கிய பின் அரைத்து வைத்திருக்கும் இஞ்சி பூண்டு விழுது, பெருங்காயம், மல்லித்தூள் சேர்த்துக் கிளறவும்.
- பச்சை வாசனை போகும்வரை வதக்கிவிட்டு உப்பு சேர்த்து அடுப்பை அணைத்து வடித்த கிச்சிலி சம்பா சாதத்தையும் சேர்த்து கிளறவும்.
- அவ்வளவுதான் சூடான சுவையான இஞ்சி பூண்டு சாதம் தயார்.
இஞ்சி பூண்டு சோறு
உடலில் ஏற்படும் அசதி, வலிகளுக்கு மிக சிறந்த உணவு. செரிமானத்தை அதிகரிக்கும். அவ்வப்பொழுது இதனை தயாரித்து உண்பதால் உடலில் ஏற்படும் பல தொந்தரவுகள் நீங்கும்.
தேவையான பொருட்கள்
- 1 கப் கிச்சிலி சம்பா புழுங்கல் அரிசி (எந்த புழுங்கல் அரிசியை வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளலாம்)
- சிறிது உளுந்து
- சிறிது சீரகம்
- 2 துண்டு இஞ்சி
- 15 – 20 பல் பூண்டு
- 4 – 5 ஸ்பூன் தேங்காய் எண்ணெய்
- 2 ஸ்பூன் மல்லித் தூள்
- 10 வெங்காயம்
- உப்பு
- பெருங்காயம்
செய்முறை
- முதலில் கிச்சிலி சம்பா புழுங்கல் அரிசியை இரண்டு மூன்று முறை நனறாக களைந்து, ஒரு மணி நேரம் ஊறவைத்து சாதமாக வடித்துக்கொள்ள வேண்டும்.
- இஞ்சி பூண்டை நன்கு அரைத்து விழுதாக எடுத்துக் கொள்ளவேண்டும்.

💪