Welcome to HealthnOrganicsTamil !!!

மரபணு மாற்று பயிர்கள் / GM Food

நவீனமும், ஆடம்பரமும் ஒவ்வொரு தனிமனிதனையும்  பகுத்தறிவில்லாத பட்டதாரியாக்கியது இந்த நூற்றாண்டில். படித்தவர்கள் நிஜத்தில் எதையும் செய்யமுடியாத கோழைகளாக இருப்பதும் இந்த நூற்றாண்டில்தான்.

நவீனமும், ஆடம்பரமும் ஒவ்வொரு தனிமனிதனையும்  பகுத்தறிவில்லாத பட்டதாரியாக்கியது இந்த நூற்றாண்டில். படித்தவர்கள் நிஜத்தில் எதையும் செய்யமுடியாத கோழைகளாக இருப்பதும் இந்த நூற்றாண்டில்தான். அனைத்துமே கணினியில், அனைத்துமே கைபேசியில்.. என்ற நிலை கருவுருவாவதில் கூட துணைபுரிகிறது என்பது சிலருக்கு பிரமாண்டமாக இருந்தாலும், நமது குழந்தையை ஒரு காக்கா குருவி தங்களுக்குள் பெற்றுக் கொள்வதைப்போல் இயற்கையாக பெறமுடியாமல் பலரின் உதவியுடன், பல மருந்துகளுடன், லட்சக்கணக்கில் செலவு செய்து பெற்றுக்கொள்வது உண்மையில் வெட்ககேடுதான்.

எப்படியாவதும் குழந்தையை பெற்று விடலாம் என்று ஒவ்வொருவரும் குழந்தையை அதாவது அடுத்த தலைமுறையினரை சோதனைக் குழாய் மூலம் பெற்றுக்கொள்வது சரி. அவர்களுக்கு தேவையான ஆரோக்கியமான உணவையும் அதனுடன் மாசில்லாத காற்று, தூய நீரையும் இனி வரும் காலங்களில் அவர்களுக்கு அளிக்க முடியுமா?

நாம் ஒவ்வொருவரும் அன்றாடம் மூன்றில் தொடங்கி ஐந்து வேளை உணவு உட்கொள்பவர்களாக இருக்கிறோம். இன்று மட்டுமல்ல நமது வாழ்நாள் முழுவதும் நமக்கான நிலைமை இதுதான். நாம் ஒவ்வொருவரும் அடிப்படையில் விவசாயக் குடும்பத்திலிருந்து வந்தவர்களாகவே தான் இருக்கிறோம். நமது தந்தையோ அல்லது அதற்கு இரண்டு தலைமுறையினருக்கு முன் வரை நமது அன்றாடம் வேலைகள் விவசாயத்தை சார்ந்தே இருந்தது. 

விவசாயம் லாபமில்லாத தொழிலாக இன்று மாற்றப்பட்டதும், ஏளனமாகப் பார்க்கப்பட்டதும் பலவகைகளில் நமது ஆரோக்கியத்தை சூறையாடிவிட்டது. இன்று நாம் பார்க்கும் விவசாயிகளே நிஜத்தில் கடைசி தலைமுறை விவசாயிகள் என மாறிக்கொண்டிருக்கும் அவலம் உருவாகியுள்ளது. ஒவ்வொரு விவசாயியும் விவசாயத்தில் லாபமில்லை என்பதால் தனது குழந்தைகளை விவசாயத்தை விட்டு வெளியேற்றி கணினி துறை, பொறியியல் துறை போன்ற பல துறைகளுக்கு வேலைக்கு அனுப்புகின்றனர். நமது வீட்டிலும் இந்த நிகழ்வுகள் நிகழ்ந்தவண்ணமே உள்ளது. இதனால் உணவு தட்டுப்பாடு உருவாகிறது.

மூன்று வேளை உணவு அனைவருக்கும் வேண்டும் ஆனால் உணவினை உற்பத்தி செய்ய யாரும் தயாரில்லை…

மூன்று வேளை உணவு அனைவருக்கும் வேண்டும் ஆனால் உணவினை உற்பத்தி செய்ய யாரும் தயாரில்லை… இதுதான் இன்றைய உண்மையான நிலை. வேறு காரணம் மழை பற்றாக்குறை, நீரில்லை, விளைச்சலில்லை, மண்சரியில்லை போன்றவையெல்லாம்.
இந்த நிலையில் தான் பன்னாட்டு நிறுவனங்கள் நம்மை குறிவைத்து மரபணு மாற்று பயிர்களை அறிமுகப்படுத்துகின்றனர்.

விவசாயம் பொய்த்து போனது, ஆனால் உணவு தேவையை பூர்த்தி செய்ய வேண்டும். பூச்சி, நோய் போன்ற தாக்குதலை எதிர்த்து பயிர்கள் வளர வேண்டும். எந்த நாட்டில் விளைந்தாலும் உலகம் முழுதும் விநியோகம் செய்ய வேண்டும். இவையெல்லாவற்றையும் குறிக்கோளாக வைத்து கோடிக்கணக்கில் லாபமீட்ட வெளிவந்தது தான் மரபணு மாற்று பயிர்கள் (விதைகள்).

உதாரணத்திற்கு, நமது தக்காளியை வைத்துக்கொள்வோம். உடலுக்கு ஆரோக்கியத்தையும், இதயத்திற்கு பலத்தையும் அளித்தது நமது பாரம்பரிய தக்காளி. புளிப்பு கலந்த சுவையில் சிறிதாக, லேசான தோலினை கொண்ட நமது தக்காளி இரத்தக்கொதிப்பிற்கு மாமருந்தாக இருந்தது. இன்று அதிகமாக இருக்கும் இரத்த சோகை, உடல் பருமன், கொழுப்பு போன்ற நோய்களுக்கும் மாமருந்தாக இருந்தது. 

பக்கத்துக்கு கிராமத்தில் விளைந்த தக்காளிகளை லாவகமாக கையாளவேண்டும். குழம்பு, ரசம் போன்ற உணவிற்கு தக்காளிகளை லேசாக பிழிந்து விட்டாலே போதும். அவை கரைந்து அந்த உணவுடன் கலந்து சுவையையும் சத்தையும் அதிகரிக்கும்.

ஆனால் இன்று நமது விவசாயிகளும், அந்த விவசாயிகளின் மகன்களும் விவசாயத்தை விட்டு வெளியேற ஏதோ நாட்டிலிருந்து நமது சமயலறைக்கு தக்காளிகள் வரவேண்டும். ஒரு நாட்டிலிருந்து மற்றொரு நாட்டிற்கு கப்பலில் உணவுப்பொருட்கள் வரவேண்டுமென்றால் குறைந்தது பதினைந்து நாட்கள் முதல் அறுவது நாட்களாவது வேண்டும். இதற்குள் அந்த தக்காளிகள் ஒன்றோடு ஒன்று உரசி உடைந்து, பழுத்து அழுகிவிடக்கூடாது. எப்படி உருட்டி, பிராட்டினாலும் எதுவும் ஆகக்கூடாது. இதற்காக வந்தது தான் நவீன மரபணு மாற்று தக்காளி. 

பொதுவாக தக்காளிகள் தோல் மென்மையானது, பழுத்து சில நாட்களே இருக்கக்கூடியது. என்னசெய்வது?

தக்காளியின் தோலினை கனமாக்க வேண்டும். செடியிலிருந்து பறித்து இரண்டு மூன்று மாதங்களானாலும் கெட்டு விடக்கூடாது. அதனால் தாவர இனத்தை சேர்ந்த தக்காளியின் மரபணுவை வேற்று இன மரபணுவுடன் (பூச்சியினம், விலங்கினம், கடலினம் போன்றவற்றுடன்) சேர்த்து புதுவகை தக்காளியை உருவாக்குவது இந்த மரபணு மாற்று உணவுகள். இவை பார்க்க தக்காளிகளைப் போல் இருக்கும் ஆனால் உண்மையில் தக்காளிகள் இல்லை. இந்த தக்காளிகள் நமது இல்லத்தில், நமது சமையலறையில், நமது உணவாக உள்ளது. இதனை ‘உணவை போல்’ (So called Food) என்று அழைக்கின்றனர்.

பார்க்க தக்காளியைப்போல் உள்ளது ஆனால் உண்மையில் தக்காளிகள் இல்லை.. இதனை உண்டால் உடல் எவ்வாறு இவற்றை ஜீரணிக்கும். நமது மரபணுவையும் இவை மாற்றி விடுகிறது. நோய் எதிர்ப்பு தன்மை எதுவும் இதன் முன் வேலைசெய்யாது. இது தான் இன்று பரவிவரும் Metabolic Disorder, Genetic Disorder போன்ற பல பல வியாதிகளுக்கு காரணமாகிறது.

இரண்டு தலை, மூளைவளர்ச்சி யின்மை, உடல் வளர்ச்சியின்மை, உடல் செயல்பாடின்மை போன்ற குழந்தைகள் பிறக்கவும் இதுவே மூலகாரணமாகிறது. இவை உடலை மட்டுமல்ல நமது சுற்றுப்புறத்தில் வளர்ந்தால் நமது மண், நீர் போன்ற இயற்கை வளத்தையும் பாழாக்குகிறது. இதனாலேயே மரபணு மாற்று உணவுகளை நமது நாட்டில் விளைவிக்க பல பல தடைகள் உள்ளது. சமீபத்தில் BT கத்திரிக்காய்க்கும், GM கடுகிற்கும் பல எதிர்ப்புகள் வந்ததற்கும் இதுவே காரணம். பல சமூகம் ஆர்வலர்களும், விவசாயிகளும் இதனை தொடர்ந்து எதிர்க்கின்றனர்.

உடலை செயல்பட விடாமல் பலவகையில் முடக்கி, அனைவரையும் இந்த வகை உணவுகள் பெரும் துன்பத்திற்கு ஆளாக்குகிறது. பல நாடுகளில் இந்த GM உணவுகளுக்கு தடை உள்ளது. அமெரிக்க போன்ற நாடுகளில் இதனை குறிப்பிட்டு தான் அந்த பொருட்களை விற்கவேண்டும் என்ற சட்டமும் உள்ளது. நமது நாட்டில் குறுக்கு வழிகளில் பல நேரங்களில் நேரடியாகவும், மறைமுகமாகவும் இந்த உணவுகள் எதுவும் குறிப்பிடாமல் சந்தைகளில் விற்பனையாகிறது.

நாம் தான் எச்சரிக்கையுடன் இவற்றை சமாளித்து இவ்வகை பொருட்கைளை கண்டறிந்து வாங்காமல் இருக்க வேண்டும். நமது குழந்தைகளை இவ்வாறான உணவுகளிலிருந்து பாதுகாக்க வேண்டும். அதற்கு ஒரு சிறந்த வழி நமக்கான உணவை சிறு அளவில் வீட்டுத்தோட்டம் மூலம் சாத்தியப்படுத்தலாம். நமக்கான உணவை நாமே நல் (உண்மையான) விதைகளைக் கொண்டு விளையவைத்து உண்ணவேண்டும்.

மதிப்பீடு செய்யவும்
சிந்தனை துளிகள் :

குளித்தால் குளிர் போகும் நசித்தால் நாணம் போகும்.

You may also like...

Leave a Reply

Your email address will not be published.

error: Content is protected !!