கருடன் சம்பா அரிசி – நம் பாரம்பரிய அரிசி

பாரம்பரிய அரிசி வகைகளில் ஒரு அற்புதமான ரகம் இந்த கருடன் சம்பா அரிசி. பலருக்கும் விருப்பமான ஒரு ரகம் என்று கூட இதனை சொல்லலாம். காரணம் இதனுடைய அமைப்பும் இதனுடைய தன்மையும். மிகச் சீக்கிரத்தில் வேகக்கூடிய கூடிய சிறந்த ஒரு அரிசி. நவீன உலகில் காலையில் அவசரமாக வேலைக்கு செல்லும் பெண்களுக்கும் ஏற்ற அரிசி. விரைவாக சமையலை முடிக்க உறுதுணையாக இருப்பதுடன் சத்துக்களையும் அள்ளிக் கொடுக்கும் தன்மை கொண்டிருப்பதே இதன் மற்றொரு சிறப்பு. அனைவருக்கும் பிடித்த நடுத்தர – சன்ன ரக வெள்ளை நிற அரிசி இந்த கருடன் சம்பா அரிசி. இதனுடைய நெல் மணிகள் சிகப்பு நிறத்திலும், இதனுடைய அரிசி வெள்ளை நிறத்தில் இருக்கக் கூடியது.

கருடன் சம்பா சிறப்புகள்

சிறந்த ஊட்டச்சத்து கொண்ட உணவாகவும், நோய்களுக்கு சிறந்த மருந்தாகவும் இருக்கக்கூடிய அரிசி இந்த கருடன் சம்பா அரிசி. வைட்டமின் சத்துக்கள், உடலுக்கு அவசியமான புரதம் சத்துக்கள், தாது சத்துக்கள், நார்ச்சத்துகள் என அனைத்து விதமான சத்துக்களும் ஒருங்கே இணைந்து அமைந்திருக்கக் கூடிய ஒரு சிறந்த அரிசி இந்த கருடன் சம்பா அரிசி. இந்த அரிசி உணவை தொடர்ந்து உணவில் பயன்படுத்தும் பொழுது இரத்த சோகை, குழந்தையின்மை, மலட்டுத்தன்மை, நீரிழிவு, உடல் பருமன், சிறுநீர் எரிச்சல், ரத்தக்கொதிப்பு, ரத்தசோகை, இருதய நோய்கள் போன்ற தொந்தரவுகளில் இருந்து வெளிவரலாம். நோய் எதிர்ப்பு ஆற்றலை அதிகரித்துக் கொள்ளலாம்.

கருடன் சம்பா பெயர் காரணம்

‘பரமசிவன் கழுத்தில் இருந்து பாம்பு கேட்டது கருடா சௌக்கியமா’ என்ற பிரபலமான பாடல் வரிகளை அனைவரும் கேட்டிருப்போம். இந்த பாடலில் வரும் கருடன் என்ற பறவையை நாம் பார்த்திருப்போம். இந்த கருடன் கழுகுக்குக் கழுத்துப்பகுதியில் வெள்ளையாக இருப்பதைப் போலவே இந்த கருடன் சம்பா நெல் மணியின் நுனி பகுதியும் வெள்ளை நிறத்தில் இருப்பதால் இந்த அரிசிக்கு கருடன் சம்பா என்ற பெயர் வந்தது.

கருடன் சம்பா பயிர்

இந்த அரிசி ஒரு நீண்ட காலப் பயிர். 140 நாள் முதல் 160 நாள் வரை வயதுடைய நெல் ரகம் இது. சம்பா பட்டத்தில் பயிரிடக் கூடியது. நீண்ட நாள் விளையக்கூடிய வெள்ளை நிற அரிசி வகைகளில் ஒன்றாக இந்த கருடன் சம்பா அரிசி உள்ளது. அதிக ஊட்டச் சத்துக்களையும் அதிக உயிர் சத்துக்களையும் கொண்ட ஒரு அற்புதமான அரிசி இது. இந்த நெல் மணியை மானாவரியில் கூட விளையவைக்கலாம். அதிகமான நீர் இன்றி விளைய வைக்கமுடியும். அதிக வெள்ளம், அதிக மழை, வறட்சி என அனைத்து விதமான இயற்கை சீற்றங்களையும் தாங்கி வளரக்கூடிய ஒரு அற்புதமான ரகம் இது. நோய்த்தாக்குதலின்றி சீராக வளரக்கூடியது. விவசாயிகளுக்கும் லாபத்தை அளிக்கும் அற்புதமான பாரம்பரிய அரிசி ரகம் இந்த கருடன் சம்பா என்றால் அது மிகையாகது. இயற்கையான முறையில் எந்தவித ரசாயனமும் இன்றி இந்த கருடன் சம்பா அரிசி விளைய வைத்து எடுக்கலாம். இதனை நேரடி விதைப்பு, நடவு அல்லது ஒற்றை நாற்று நடவு மூலமும் விதைத்து அறுவடை செய்யலாம். கருடன் சம்பா அரிசி 5 அடி உயரம் வரை வளரக்கூடியது.

கருடன் சம்பா அரிசி பயன்கள் / சிறப்புகள்

உடலில் தேங்கியிருக்கும் அனைத்து விதமான கழிவுகளையும் நீக்கக் கூடியது. உடல் கழிவுகளே உடலுக்கு நோயாக மாறக்கூடிய தன்மை கொண்டது. நம் உணவில் இருக்கும் ரசாயன கழிவுகள், நாம் பயன்படுத்தக்கூடிய அழகு சாதன பொருட்களில் இருந்து பெறப்படும் ரசாயன கழிவுகளால் இன்று பலருக்கும் பல உடல் நோய்கள், உபாதைகள், சருமம் சார்ந்த பிரச்சனைகள், புற்றுநோய் போன்ற தொந்தரவுகள் ஏற்படுகிறது. இதற்கு மிகச் சிறந்த ஒரு மருந்தாகவும் உணவாகவும் இருக்கக்கூடிய அரிசி இந்த கருடன் சம்பா அரிசி.

நோய் எதிர்ப்பு சக்தி

சிறந்த ஒரு நோய் எதிர்ப்பு சக்தியை அளிக்கக் கூடிய அரிசி. நோய் எதிர்ப்பு சக்தி சீராக இருக்கும் பொழுது எளிமையாக உடல் கழிவுகள் வெளியேறும், நோய் கிருமிகளின் தக்குதல் குறையும். இவ்வாறு உடலில் தேங்கி இருக்கும் கழிவுகள் வெளியேறுவதால் உடல் புத்துணர்வையும் பொலிவையும் பெறும். மேலும் உடலில் ஏற்படும் நோய்களுக்கு மிகச்சிறந்த மருந்தாகவும் இந்த கருடன் சம்பா அரிசி இருக்கும்.

உடல் பருமன்

உடல் பருமனாக உள்ளவர்கள் இந்த கருடன் சம்பா அரிசியை தொடர்ந்து உணவில் பயன்படுத்துவதால் விரைவாகவே உடல் எடை குறையும்.

சிறுநீரகத்தை காக்கும்

சிறுநீர் எரிச்சல் சிறுநீரகத்தில் வரக்கூடிய பிரச்சினைகளுக்கும் மிகச் சிறந்த ஒரு உணவாக இந்த அரிசி உள்ளது.

ரத்தசோகை

ரத்தசோகை உள்ளவர்கள் சத்து குறைபாடு போன்ற தொந்தரவுகள் உள்ளவர்கள் இந்த அரிசியை உண்பதால் சிறந்த ஒரு பலனை பெற முடியும்.

எலும்பை பலப்படுத்தும்

எலும்புகளை பலப்படுத்த கூடிய ஒரு அற்புதமான ரகம். எலும்புகளுக்கு தேவையான ஊட்டச்சத்துக்களையும், வலுவையும் அளிக்கக்கூடியது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் அவசியமான சத்துக்களைக் கொண்ட அரிசி.

கொழுப்பு கட்டி நீங்கும்

உடலில் பலருக்கும் தேவையில்லாத கொழுப்பு கட்டிகள் வருவதை பார்த்திருப்போம், இந்த கொழுப்புக்களையும் கரைத்து வெளியேற்றும் தன்மை கொண்ட ஒரு சிறந்த ரகம்.

வெள்ளை அரிசியை மதிய உணவில் உண்ண விரும்புபவர்களுக்கு சத்தான ஒரு சிறந்த மாற்று அரிசி இந்த கருடன் சம்பா பாரம்பரிய அரிசி. மதிய உணவிற்கு சாதமாக தயாரித்தும் சாப்பிடலாம் அல்லது இட்லி, தோசை, கஞ்சி, இடியாப்பம், புட்டு என அனைத்துவிதமான பலகாரங்களையும் இந்த அரிசியில் தயாரித்தும் உண்ணலாம். காலை உணவு, சிற்றுண்டி, மதிய உணவு என அனைத்துவிதமான உணவுக்கும் ஏற்ற ஒரு சிறந்த அரிசி. தொடர்ந்து உணவில் பயன்படுத்தும் பொழுது சிறந்த ஊட்டச்சத்துக்களைக் எளிமையாக பெறலாம்.

(7 votes)