முந்தைய காலங்களில் வெள்ளைப்பூண்டு உண்பவர்கள் கீழ் குலத்தவர் அல்லது தீண்டத்தகாதவர்களாகப் பார்க்கப் பட்டன என்பது வரலாறு. உலகின் பல நாடுகளில் இந்த நிலை இருந்தது. இதனால் பல நாடுகளில் சிறைக்கைதிகளுக்குப் பூண்டையே உணவாக்கி இருக்கிறார்கள்.
இந்திய மருத்துவமும் இன்றைய விஞ்ஞானமும் பூண்டின் மருத்துவ குணம் மகத்தானது என்கின்றன. இரத்தத்தில் உள்ள கொலஸ்ட்ராலைக் குறைப்பதில் பூண்டின் மருத்துவ பங்கு முதன்மையானது. இரத்தத்திற்கு மட்டுமல்லாமல் உடலில் ஏற்படும் பல தொந்தரவுகளுக்கும் பூண்டு மிக சிறந்த மருந்தாக உள்ளது.
பூண்டின் முக்கிய மருத்துவப் பயன்கள்
சீரணமின்மை, ஜலதோஷம், காதுவலி, வாயுத்தொல்லை, முகப்பரு, ஊளைச்சதை, இரத்த சுத்தமின்மை, புழுத்தொல்லை, இரத்த அழுத்தம் சம்மந்தமான நோய்கள், மூல நோய் போன்றவை வராமல் தடுக்கவும் வந்தால் குணப்படுத்தவும் பூண்டு வல்லமையுடையது.
கடும் காய்ச்சலுக்கு
சிலருக்கு கடும் காய்ச்சல் ஏற்படும். அதற்கு சிறந்த நிவாரணத்தை பூண்டு அளிக்கும். 102 டிகிரிக்கு மேல் காய்ச்சல் வந்து விட்டால் வெள்ளைப் பூண்டு சாற்றை உள்ளங்கையிலும், உள்ளங்காலிலும் நன்கு தேய்க்க காய்ச்சல் இறங்கும்.
விடாத இருமலுக்கு
படுக்கப் போகும் முன் சிறிது பூண்டை சேர்த்து பாலை காய்ச்சி பூண்டையும் பாலையும் சாப்பிட விடாமல் இருந்த இருமல் நீங்கும். அதிலும் அலர்ஜியால் ஏற்படும் இருமலுக்கு இம்முறை சிறந்தது.
இரத்தக் காயத்திற்கு
இரத்தக் காயத்திற்கு வெள்ளைப் பூண்டு நல்ல நிவாரணத்தை அளிக்கும் மருந்து என கூறலாம். வெள்ளைப் பூண்டையும், சுண்ணாம்பையும் சம அளவு அரைத்து இரத்த காயத்தில் வைத்துக் கட்டினால் ஒட்டிக் கொள்ளும். காயம் ஆறின பின் தானாகவே அது விழுந்து விடும்.
எகிப்தின் பிரமிடுகளைக் கட்டிய தொழிலாளர்கள் வெங்காயத்தையும், பூண்டு உண்டு தான் ஆற்றலுடன் செயல்பட்டார் என வரலாறு கூறுகிறது.