பிணி வெல்லும் கனிகள்

பப்பாளி

பப்பாளி புரத சத்துக்கள் கொண்ட பழம், செரிமான சக்தியை அதிகரிக்கும். மலச்சிக்கல், நரம்பு தளர்ச்சி, பசியின்மை, கல்லீரல் நோய்கள், தோல் நோய்கள், இரத்த சோகை போன்றவற்றிற்கு சிறந்தது. பப்பாளி பால் பல்வலியை போக்கும்.

நாட்டு நெல்லி அல்லது பெரிய நெல்லி

உடல் சூட்டை தணிக்கும் அற்புத கனி நெல்லிக்கனி. இரத்தத்தைச் சுத்தம் செய்யும். வயிற்றுப்போக்கு, செரிமானத்தைச் சீராக்கும். வயிற்று வலியை போக்கும். தேன் நெல்லி, நெல்லிக்கனியைத் தேனில் ஊறவைத்து. நாள்தோறும், காலையும், மாலையும் உண்டு வர, உடல் பலமும், இளமையும் பெறலாம். பித்தக் கிறுகிறுப்பு, மயக்கம், பைத்தியம். மனத் தடுமாற்றம், சோகை போன்றவை நீங்கும். நெல்லிக்காயை அரைத்துத் தலையில் பற்றுப் போட்டு வர மனநோய் வேகங்கள் குறையும். நெல்லிக்காய்ச்சாறு தேன் கலந்து. நாள்தோறும் காலையில் வெறும் வயிற்றில் அருந்தி வர உடல் வலுவடையும்.

சிறு நெல்லி எனும் அருநெல்லி

அருநெல்லிக்காயை அரைத்து மோரில் கலக்கி பருக, மஞ்சள் காமாலை மறையும். கல்லீரலை பலப்படுத்தும். பத்திய உணவு எடுத்து வர விரைவில் நல்ல பலனைப் பெறலாம். பித்தத்தைச் சமப்படுத்தும்.

நாவற் பழம்

நாவற் பழம் நீரிழிவுக்கு நல்லது. நாவல் கபம் (சளி). பித்தக் கோளாறுகள், நாவறட்சி, நீர்ச்சுருக்கு, மூலக்கொதிப்பு, இரத்த மூலம் மறையும்.

சாத்துக்குடி

சாத்துக்குடி உடலுக்கு தேவையான சக்தியை அளிப்பது மட்டுமல்லாமல் நோய் எதிர்ப்பு ஆற்றலையும் அதிகிரிக்கும் பழம். அமிலம் போல் தோன்றினாலும் சாத்துக்குடியின் குணம் காரம் (அல்கலைன்). இரத்தத்தை சுத்தம் செய்யும் சிறந்த பழம். காய்ச்சலுக்கு நல்லது. விரைவாக காய்ச்சலைக் குறைக்கும். குழந்தைகளுக்கு ஏற்றது. வைட்டமின் சத்துக்கள் மட்டுமில்லாமல் தாது சத்துக்களும் அதிகம் நிறைந்தது.

பேரீச்சம் பழம்

இரத்த விருத்திக்கு சிறந்தது பேரீச்சம் பழம். இரத்தத்தைச் சுத்தப்படுத்தும். உடல் பலத்தை அதிகரிக்கும். இருமல், கபம் (சளி) மறையும்.

அன்னாசிப் பழம்

வைட்டமின் சத்துக்கள் நிறைந்த பழம் அன்னாசி பழம். மஞ்சள் காமாலை குணமாகும். இரத்தக் சுத்தியாகும். இதயம் வலுப்பெறும், வயிற்றுவலி, வாதம், குன்மம், வாந்தி, தாகம், நீடித்த உடற்குடு, தலைவலி ஆகியன குணமாகும்.

மாம்பழம்

மாம்பழம் உண்டபின் தேங்காய்ப் பால் பருகி வர உடல் எடை கூடும். மாம்பழச் சாறு அருந்தி வர தீராத தலைவலி குணமாகும். இரத்தம் விருத்தி அதிகரிக்கும். மலச்சிக்கல், செரியாமை தொந்தரவு மறையும்.

மாதுளம் பழம்

இரத்த விருத்தி அதிகரிக்கும் பழம் மாதுளம் பழம். வைட்டமின் தாது சத்துக்கள் அதிகம் கொண்டது. காசம், சீதபேதி, சிறுநீரகக் கோளாறுகளைப் போக்குகிறது; இரத்தத்தைத் தூய்மைப்படுத்துகிறது.

ஆப்பிள் பழம்

நாள்தோறும் ஓர் ஆப்பிள் உண்ண மூளைக் கோளாறுகள் நீங்கும், வாத நோயை அகற்றும், பற்கள் வலுவடையும், பல் ஈறுகளில் வலி, புண். இரத்தம் வருதல் நீங்கும். நரம்புத் தளர்ச்சி, தூக்கமின்மை, தூக்கத்தில் வாய் புலம்பல், தூக்கத்தில் எழுந்து நடத்தல் போன்ற நரம்புக் கோளாறுகளுக்கு ஆப்பிள் பழச்சாறு நல்ல மருந்தாக அமையும். பேதியாகும் குழந்தைகளுக்கு ஆப்பிள் பழக் கூழ் கொடுக்கலாம். குடல் கிருமிகள் அழியும்.

வாழை

வாழைப்பழம், கல்லீரல் பிரச்சினை, மலச்சிக்கல். நெஞ்செரிச்சல், புளிப்பு ஏப்பம், உடல் எடை அதிகரிக்க, உடல் எடை குறைக்க, காய்ச்சல் குணமாக உதவும் பழம். வாழைப் பூ பெண்களுக்கு ஏற்படும் கருப்பை நோய்களுக்கு மிக சிறந்தது. வயிற்றுப் புண்களை ஆற்றும். வாழைத்தண்டுச் சாறு சிறுநீரகக் கல்லடைப்பைப் போக்கும். வாழைப்பட்டைச் சாறு பாம்புக்கடி நஞ்சை முறிக்கும் தன்மைக் கொண்டது.

விளாம் பழம்

இரும்பு சத்துக்கள் நிறைந்த பழம் விளாம் பழம். நன்கு பழுத்த கனியுடன் சிறிது மிளகுதூள், நாட்டு சர்க்கரை கலந்து உட்கொள்ள இருமல், ஈளை, ருசியின்மை, தாகம், பித்தம் தணியும்.

எலுமிச்சம் பழம்

எலுமிச்சை ஒரு சர்வரோக நிவாரணி. விட்டமின் ‘சி’ அதிகம் கொண்டது. இரத்தத்தைச் சுத்தப்படுத்தும், காய்ச்சலைக் குணப்படுத்தும். பித்தத்தைப் போக்கும். மலச்சிக்கலை விரட்டும். மண்ணீரல் வீக்கம் குணமாகும். தொற்று நோய்க் கிருமிகளைக் கொல்லும். படை, சொறி, சிரங்கு போன்றவற்றை போக்கும். இதய நோய் நீக்கும்.

lemon benefits in tamil, elumichai

ஆரஞ்சுப் பழம்

ஆரஞ்சுப் பழச் சாற்றுடன் தேன் கலந்து பருகி வந்தால் உடற்சூடு தணியும் இருமல் குணமாகும். ஆரஞ்சு பழம் உண்ண செரிமான சக்தி அதிகப்படும். கல்லீரல் வலுப்படும். காமாலை நோய் நீங்கும்.

சப்போட்டாப் பழம்

சப்போட்டா உண்ண உடற்சூடு தணிகிறது. தூக்கமின்மை, பலவீனம் ஆகியவற்றிற்கு நாள்தோறும் குறைந்தது ஐந்து சப்போட்டா பழம் உண்டு தேங்காய்ப் பால் பருகி வர விரைவில் குணம் கிடைக்கும்.

சீத்தாப் பழம்

இதயம் வலுவடையும். சீத்தாப் பழ இலையை ரணங்களுக்கும் அரைத்துப் பூசலாம். சீத்தாப்பழ விதைகளைப் பொடி செய்து, தேங்காய் எண்ணெய் கலந்து அரப்புப் போட்டுத் தலையில் தேய்த்துக் குளித்து வர பேன், பொடுகு நீங்கும். சீத்தாமர இலைச் சாற்றுக்குக் கிருமிகளை அழிக்கும் தன்மையுண்டு. வேளாண்மைப் பயிர்களை நாசமாக்கும் பூச்சிகளை இந்த இலைத் தூளின் மூலம் ஒழிக்கலாம். தொடர்ந்து 48 நாள்கள் சீத்தாப்பழம் சாப்பிட்டு வர காச நோய் குணமாகும்.

திராட்சைப் பழம்

திராட்சைப் பழச்சாறு காமாலை, இருமல், சளி, வயிற்றுக் கோளாறுகள், வறட்டு இருமல், வாய்க் கசப்பு, குமட்டல், வாந்தி, இதய நோய், நீரிழிவு நோய், கல்லடைப்பு, காது நோய்கள், கண் நோய்கள், புத்தி மந்தம், ஒற்றைத் தலைவலி, பித்த மயக்கம், உடற்சோர்வு ஆகிய தொந்தரவுகளுக்கு சிறந்தது.

கொய்யாப் பழம்

தேவைக்கு அதிகமான உடல் கொழுப்பைக் குறைக்கும். மூளை, இருதயத்திற்குப் பலமளிக்கிறது. மலச்சிக்கலை நீக்கும். கொய்யா இலைக் கஷாயம், தொண்டைக் கரகரப்பைப் போக்கும், தேநீராக பருக பல நோய்கள் மறையும்.

வெள்ளரிப்பழம்

நீரிழிவிற்கு சிறந்தது. சிறுநீரகத்தை வலுவாக்கும். உடற்சூடு, தாகம் தணிக்கும்.