நிலத்தில் தொடர்ந்து இரசாயன் உரங்கள், பூச்சிக்கொல்லிகளை அதிகம் பயன்படுத்துவதால் மண் வளம் குறைகிறது. மேலும் இந்த நிலத்தில் விளையும் இந்த நஞ்சு கலந்த உணவுகளை உட்கொள்வதால் உடல் உபாதைகளும் காரணம் தெரியாத பல பல நோய்களும் ஏற்படுகிறது.
இதனால் பலர் இயற்கையில் விளைந்த உணவுகளை உட்கொள்ள தொடங்கிவிட்டனர். மேலும் இந்த இரசாயனங்களால் சுற்றுசூழல் மாசு, நிலம் மலடாவது என பல பதிப்புகளும் ஏற்படுகிறது. இவற்றிலிருந்து நம்மையும் நமது நிலத்தையும் பாதுகாக்க இயற்கை விவசாயமும் அதனை வெற்றிகரமாக செய்வதற்கு இயற்கை உரங்களும், இயற்கை இடுபொருட்கள், பூச்சி விரட்டிகள் உதவுகிறது. அந்த வரிசையில் சிறந்த விளைச்சலைக் கொடுக்கும் பழக்காடி கரைசல் எவ்வாறு தயாரிப்பது என பாப்போம்.
பழக்காடி கரைசல் என்பது கனிந்த பழங்களை கொண்டு தயாரிக்கப்படும் கரைசலாகும்.
பழக்காடி கரைசல் தயரிக்க தேவையான பொருட்கள்
சாணம் – 20 கிலோ
கெட்டுப்போன பழங்களின் கூழ் – 5 முதல் 10 கிலோ
தொல்லுயிர் கரைசல் – 50 கிலோ
தண்ணீர் – 50 லிட்டர்
ஜீவாமிர்தம் – 5 முதல் 10 லிட்டர்
தேமோர் (அ) அரப்புமோர் – 5 முதல் 10 லிட்டர்
பழக்காடி கரைசல் தயாரிக்கும் முறை
முதலில் சாணம், பழங்களின் கூழ், தொல்லுயிர் கரைசல், தண்ணீர், ஜீவாமிர்தம், தேமோர் (அ) அரப்புமோர் ஆகியவற்றை நன்றாக கலந்து ஒரு பிளாஸ்டிக் டிரம்மில் 1௦ – 15 நாட்கள் வரை நொதிக்க விட வேண்டும்.
இடைப்பட்ட ஒவ்வொரு நாளும் காலையும், மாலையும் இதனை நன்கு கலந்துவிட வேண்டும். பத்து பதினைந்து நாள் கழித்து பழக்காடி கரைசல் தயாராகிவிடும்.
வடிகட்டி ஒரு லிட்டருக்கு 10 லிட்டர் தண்ணீர் சேர்த்து செடிகளுக்கும் பயிர்களுக்கும் தெளிக்கலாம்.
பழக்காடி கரைசல் பயன்கள்
- மிகவும் எளிமையாக தயாரிக்கக்கூடிய பழக்காடி கரைசலை செடிகளுக்கும், பயிர்களுக்கும் தெளிப்பதால் நுண்ணுயிர்கள் பலமடங்கு பெருகும்.
- இந்த கரைசலை மாதம் ஒருமுறை பயன்படுத்தினாலே போதும்.
- பயிர்கள், செடிகளுக்கு இலைகள் மூலமாக ஊட்டம் கிடைக்கும்.
- அனைத்து பயிர்களுக்கும் பயன்படுத்தலாம் காணப்படும்.
- இதனை தெளிப்பதால் காய்கள் மற்றும் பழங்கள் நன்கு பெருத்து, அதிக சுவையுடன் இருக்கும்.
- பூச்சி தாக்குதலை கட்டுபடுத்தும்.
- மண்ணின் நுண்ணுயிர்களை அதிகரிக்கும்.
இதன் மூலம் நுண்ணுயிர்கள் பலமடங்கு பெருகும். மாதம் ஒருமுறை வீதம் 5 முறை பாசன நீரில் பழங்காடி கரைசலை நிலங்களில் சீராகக் கலந்து செல்லும் வகையில் பயன் படுத்த நல்ல பலன் கிடைக்கும்.
மேலும் இயற்கை உரங்கள், பூச்சி விரட்டிகள் மற்றும் இயற்கை இடுபொருட்களை தயாரிக்கும் முறையை அறிந்துக்கொள்ள – இயற்கை உரங்கள், பூச்சி விரட்டிகள் மற்றும் இயற்கை இடுபொருட்கள்.