பசுந்தேநீர்

சீனாவில் பசுந்தேநீர் பருகுவதைப்போல் நம் தமிழகத்திலும் மூலிகை தேனீர், சுக்கு காபி, கருப்பட்டி காபி, திரிகடுகம் தேனீர் போன்றவற்றை நம் முன்னோர்கள் பயன்படுத்தினர். எந்த பின்விளைவுகளும் இன்றி உடல் ஆரோக்கியத்திற்காகவும் உடல் புத்துணர்வுடன் செயல்படவும் நம் தட்ப்பவெப்பத்திற்கு ஏற்றவாறும் இவை உள்ளது.

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் பருக ஏற்றது மூலிகை பானம். செரிமான குறைவு, பசியின்மை, மந்தம், வாய்வு, மலச்சிக்கல், சளி, ஆஸ்துமா, நீரழிவு நோய், நெஞ்சுவலி, இருதய நோய், மூட்டு வலி, வயிற்று பொருமல், சோம்பல் போன்றவற்றிற்கு சிறந்த திரவ உணவு மற்றும் மாமருந்து மற்றும் அற்புத முதலுதவி மருந்தும் கூட இந்த பசுந்தேநீர்.

நம் முன்னோர்கள் காலையில் இஞ்சி, மல்லி, பனைவெல்லம் கலந்த பானமும், மாலையில் சுக்கு, மல்லி, மிளகு கலந்த மூலிகை பானமும், இரவு வேளைகளில் கடுக்காய் கசாயமும் பருகினர். இது நம் நாட்டின் வெப்ப சூழலுக்கு ஏற்றவாறு இருந்ததோடு முதுமையிலும் இளமையாக வாழச் செய்தது.  

இத்தகைய சிறப்பம்சங்கள் உள்ள நமது பாரம்பரிய பானத்தை தயாரிக்கும் முறை நமக்கெல்லாம் மறந்தே போனது. எளிமையாகவும் சுவையாகவும் தரமாகவும் ஆரோக்கியத்தை அளிக்கின்ற பனங்கள் ஏராளம். உதாரணத்திற்கு மூலிகை தேநீர், சுக்கு மல்லி காபி.

பசுந்தேநீர் தயாரிப்பு

பொடி எதுவும் தயராக இல்லை என்றாலும் கவலை இல்லை. ஒரு கப் தண்ணீரை கொதிக்க விட்டு அதில் 5 புதினா இலை போட்டு சிறிது வெல்லம் அல்லது பனங்கருப்பட்டி சேர்க்க எளிய முறையில் புதினா பசுந்தேநீர் தயார். பசியைத் தூண்டும் சக்தி கொண்டது, உஷ்ணம் தணியும், இரத்த சோகை நீங்கும், இரத்தம் சுத்தமாகும், தேவையற்ற கொழுப்பு நீங்கி உடல் அழகுபெறும். 

நாலு துளசி இலை அல்லது செம்பருத்தி பூக்களின் இதழ் அல்லது ஆவாரம் பூ, கொத்தமல்லி, இரண்டு கருஞ்சீரகம் என்று எதாவது ஒன்றைக் கொண்டும் உடனடி தேநீர் தயாரிக்கலாம்.

கொய்யா இலைகளை நீரில் கொதிக்க வைத்து வெல்லம், ஏலக்காய் சேர்த்துப் பருகலாம். பச்சை இலைகலான புதினா, துளசி போன்றவற்றை கொண்டு தயாரிக்கும் பசுந்தேநீரில் ஆண்டி ஆக்சிடென்ட் அதிகம் உள்ளது. புற்றுநோய் முதல் எல்லா நோய்களில் இருந்தும் நம்மை பாதுகப்பதுடன் என்றும் இளமையுடன் நம்மை காக்கிறது.   

இவ்வாறு பல நன்மைகளையும் புத்துணர்வுடன் கொடுக்கும் எளிய மூலிகை தேநீர், மூலிகை காபிகளை தொடர்ந்து பயன்படுத்த எல்லா வியாதிகளும் இருந்த இதன் தெரியாமல் ஓடிவிடும். 

எந்த உபாதைகளும் இன்றி உடலின் ஜீரண சக்தியை அதிகரித்து, சீராக செல்களை புதுப்பித்து என்றும் இளமையுடனும் உற்சாகத்துடனும் பேணிப் பாதுகாக்கும் நம் நாட்டு மூலிகை தேநீர், மூலிகை காபியை பயன்படுத்தி இன்புருவோம். இனி ஒன்று இரண்டு ஐந்து என கணக்கு வைத்து எதையோ குடிப்பதை நிறுத்தி நமது மூலிகை அமிர்தத்தை பருகுவோம்.

(2 votes)