தினை சர்க்கரைப் பொங்கல்

தொன்றுதொட்டு, மக்களால் அதிகளவில் விரும்பி, வரவேற்கப்பட்ட பலவகையான மூலிகைகள், தானியங்கள் நாட்கள் செல்லச் செல்ல தெய்வீக முக்கியத்துவமும் புனிதத்துவமும் பெற்றதாக வரலாறு கூறுகின்றது. அவ்வாறு புனிதத்துவம் பெற்ற தானியங்களில் ஒன்று தான் தினை. மேலும் தினை அரிசியின் சத்துக்கள் பயன்களை தெரிந்துக்கொள்ள – தினை அரிசி.

சுவையான சத்தான தினை சர்க்கரைப் பொங்கல். இயற்கையாகவே இனிப்பு சுவை கொண்ட இந்த தானியம் தினை உடலை வலுவாக்கும். வாயு நோயையும், கபத்தையும் போக்கும். பசியை உண்டாக்கும் குணம் கொண்டது.

This image has an empty alt attribute; its file name is Thinai-Foxtail-Millet-Benef.jpg

தேவையான பொருட்கள்

  • 1 கப் தினை
  • ¼ கப் பாசிப்பருப்பு
  • 1 – 1½ கப் நாட்டுச்சர்க்கரை (வெல்லத்தின் தன்மையைப்பொறுத்து அளவு மாறுபடும்)
  • 4 ஸ்பூன் பசு நெய்
  • 1 ஏலக்காய்
  • பாதாம்

செய்முறை

  • ஒரு மண்சட்டியில் பாசிப்பருப்பை லேசாக வறுத்து பின் பாதிவேகவிடவும்.
  • இத்துடன் ஐந்து கப் தண்ணீர்சேர்த்து இருபது நிமிடம் ஊறவைத்த தினையை சேர்த்து வேகவிடவும்.
  • தேவைப்பட்டால் மீண்டும் சிறிது சூடான தண்ணீர் சேர்த்து வேகவிட்டு நன்கு வெந்து வரும்பொழுது நாட்டுசர்க்கரையை சேர்க்கவும். 
  • அனைத்தும் நன்கு குலைய வெந்தபின் பின் அடுப்பை அணைத்து மேலும் சிறிது நெய்சேர்த்து பாதாம் பருப்பு ஏலக்காயை பொடித்து சேர்க்கவும்.
  • இனிப்பான தினையரிசியில் இனிப்பு சர்க்கரைப்பொங்கல் பிரமாதமாக இருக்கும்.
  • பொதுவாக செய்யும் சர்க்கரைப்பொங்கல் தான், அரிசியை மட்டும் மாற்றி சிறுதானியமான தினையில் தயாரிக்க சுவை, மணம், சத்துக்கள் கூடுகிறது. 
  • குழந்தைகளின் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்கும்.

தினை சர்க்கரைப் பொங்கல்

சுவையான சத்தான தினை சர்க்கரைப் பொங்கல். இயற்கையாகவே இனிப்பு சுவை கொண்ட இந்த தானியம் தினை உடலை வலுவாக்கும். வாயு நோயையும், கபத்தையும் போக்கும். பசியை உண்டாக்கும் குணம் கொண்டது.
ஆயத்த நேரம் : – 10 minutes
சமைக்கும் நேரம் : – 15 minutes
மொத்த நேரம் : – 25 minutes
பரிமாறும் அளவு : – 3