தினை புளியோதரை

தாது உப்பு சமன்பாடு பெரும். அனைத்து ஊட்டச்சத்துக்களும் எளிதாக உடலுக்கு கிடைக்கும் சிறந்த உணவு. குழந்தைகள் முதல் வயதானவர்கள் வரை அனைவருக்கும் ஏற்றது. குறிப்பாக பெண்களுக்கு ஏற்ற உணவு.

மேலும் தினை அரிசியின் பயன்கள் நன்மைகள் பற்றி தெரிந்துகொள்ள இங்கு தொடரவும் – தினை அரிசி. மற்ற சிறுதானியங்கள் பற்றிய நன்மைகள் மற்றும் பயன்கள் பற்றி தெரிந்துகொள்ள – சிறுதானியங்கள்.

தினை அரிசியில் புளியோதைரை செய்து குழந்தைகளுக்கு கொடுக்க விரும்பி உண்பார்கள். பல பல சத்துக்கள் நிறைந்த சிறுதானியம் தினை என்பதால் வளரும் குழந்தைகளுக்கு ஏற்ற ஊட்டச்சத்துக்களும் நிறைந்த சுவையான உணவு.

This image has an empty alt attribute; its file name is thinai-rice-foxtail-millet-.jpg

தேவையான பொருட்கள்

  • 1 கப் தினை அரிசி
  • ஒரு எலுமிச்சை அளவு புளி
  • ஒரு சிட்டிகை  மஞ்சள் தூள்
  • ¼ கப் நல்லெண்ணெய்
  • உப்பு
  • சிறிது  கடுகு

  • 1 ஸ்பூன் கடலை பருப்பு
  • 2 ஸ்பூன் வறுத்து தோல் நீக்கிய வேர்க்கடலை
  • சிறிது பெருங்காயம்
  • 3 காய்ந்த மிளகாய்
  • சிறிது கறிவேப்பிலை

வறுத்துப் பொடிக்க:

  • 3 காய்ந்த மிளகாய்
  • 1 ஸ்பூன் கடலை பருப்பு
  • 2 ஸ்பூன் தனியா
  • ½ ஸ்பூன் வெந்தயம்
  • 1 ஸ்பூன் எள்

செய்முறை

  • முதலில் புளிக்காய்ச்சலை தயாரித்துக்கொள்வோம்.
  • வறுக்க தேவையான பொருட்களை தனித்தனியாக வெறும் வாணலியில் வறுத்து எடுக்கவும். 
  • எள்ளை வாணலியில் போட்டு சடசடவென பொரிந்ததும் எடுத்து ஆறவைக்கவும்.
  • ஆறியதும் ஒன்றாக சேர்த்து நைசாக பொடித்துக்கொள்ளவேண்டும்.
  • புளியை 1 கப் நீர் விட்டு ஊற வைத்துக்கொள்ளவேண்டும். 
  • வாணலியில் நல்லெண்ணெய் நான்கு ஸ்பூன் ஊற்றி, கடுகு, பெருங்காயம் தாளித்து மிளகாய், கடலைப்பருப்பு சேர்க்கவும். 
  • பருப்பு சிவந்ததும் வேர்கடலை சேர்த்து பின் கறிவேப்பிலை சேர்க்கவும். 
  • இதில் கரைத்த புளியை வடித்து உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து கொதிக்க விடவும்.
  • நன்கு கொதித்து புளி வாசம் போய் சற்று கெட்டியாக தொடங்கியதும் பொடித்த பொடியில் முக்கால் பாகத்தை சேர்த்து ஒரு கொதி விட்டு அடுப்பை அணைக்கவும். 
  • புளிக்காய்ச்சலை தயாரிக்கும் சமயத்திலேயே தினை அரிசியை நன்கு களைந்து இருபது நிமிடம் ஊறவைத்துக்கொள்ளவும். 
  • பின் ஒரு பாத்திரத்தில் ஆறு கப் தண்ணீர் ஊற்றி நன்கு கொதிவந்ததும், தினையை சேர்க்கவும்.
  • மீண்டும் கொதிவந்து மூன்று நன்கு நிமிடத்தில் (அதற்குள் தினைஅரிசி வெந்துவிடும்) அடுப்பை அணைத்து மீதமிருக்கும் தண்ணீரை வடித்து தினை சாதத்தில் நன்கு ஸ்பூன் நல்லெண்ணெய் ஊற்றி கிளறி தயாராக எடுத்துக்கொள்ளவும். 
  • சிறிது தினை சாதம் ஆறியதும் அதில் புளிக்காய்ச்சலையும் மீதமிருக்கும் பொடியையும் தேவையானஅளவு உப்புடன் சேர்த்து கிளறி அரைமணி நேரத்திற்குப்பின் பரிமாறலாம். 

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி உண்ணும் புளியோதரை தினை அரிசியில் சுவையாகவும், சத்தானதாகவும் இருக்கும்.

தினை புளியோதரை

தினை அரிசியில் புளியோதைரை செய்து குழந்தைகளுக்கு கொடுக்க விரும்பி உண்பார்கள். பல பல சத்துக்கள் நிறைந்த சிறுதானியம் தினை என்பதால் வளரும் குழந்தைகளுக்கு ஏற்ற ஊட்டச்சத்துக்களும் நிறைந்த சுவையான உணவு.
ஆயத்த நேரம் : – 20 minutes
சமைக்கும் நேரம் : – 25 minutes
மொத்த நேரம் : – 45 minutes

தேவையான பொருட்கள்

  • 1 கப் தினை அரிசி
  • ஒரு எலுமிச்சை அளவு புளி
  • ஒரு சிட்டிகை  மஞ்சள் தூள்
  • ¼ கப் நல்லெண்ணெய்
  • உப்பு
  • சிறிது  கடுகு
  • 1 ஸ்பூன் கடலை பருப்பு
  • 2 ஸ்பூன் வறுத்து தோல் நீக்கிய வேர்க்கடலை
  • சிறிது பெருங்காயம்
  • 3 காய்ந்த மிளகாய்
  • சிறிது கறிவேப்பிலை

வறுத்துப் பொடிக்க:

  • 3 காய்ந்த மிளகாய்
  • 1 ஸ்பூன் கடலை பருப்பு
  • 2 ஸ்பூன் தனியா
  • ½ ஸ்பூன் வெந்தயம்
  • 1 ஸ்பூன் எள்

செய்முறை

  • முதலில் புளிக்காய்ச்சலை தயாரித்துக்கொள்வோம்.
  • வறுக்க தேவையான பொருட்களை தனித்தனியாக வெறும் வாணலியில் வறுத்து எடுக்கவும். 
  • எள்ளை வாணலியில் போட்டு சடசடவென பொரிந்ததும் எடுத்து ஆறவைக்கவும்.
  • ஆறியதும் ஒன்றாக சேர்த்து நைசாக பொடித்துக்கொள்ளவேண்டும்.
  • புளியை 1 கப் நீர் விட்டு ஊற வைத்துக்கொள்ளவேண்டும். 
  • வாணலியில் நல்லெண்ணெய் நான்கு ஸ்பூன் ஊற்றி, கடுகு, பெருங்காயம் தாளித்து மிளகாய், கடலைப்பருப்பு சேர்க்கவும். 
  • பருப்பு சிவந்ததும் வேர்கடலை சேர்த்து பின் கறிவேப்பிலை சேர்க்கவும். 
  • இதில் கரைத்த புளியை வடித்து உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து கொதிக்க விடவும்.
  • நன்கு கொதித்து புளி வாசம் போய் சற்று கெட்டியாக தொடங்கியதும் பொடித்த பொடியில் முக்கால் பாகத்தை சேர்த்து ஒரு கொதி விட்டு அடுப்பை அணைக்கவும். 
  • புளிக்காய்ச்சலை தயாரிக்கும் சமயத்திலேயே தினை அரிசியை நன்கு களைந்து இருபது நிமிடம் ஊறவைத்துக்கொள்ளவும். 
  • பின் ஒரு பாத்திரத்தில் ஆறு கப் தண்ணீர் ஊற்றி நன்கு கொதிவந்ததும், தினையை சேர்க்கவும்.
  • மீண்டும் கொதிவந்து மூன்று நன்கு நிமிடத்தில் (அதற்குள் தினைஅரிசி வெந்துவிடும்) அடுப்பை அணைத்து மீதமிருக்கும் தண்ணீரை வடித்து தினை சாதத்தில் நன்கு ஸ்பூன் நல்லெண்ணெய் ஊற்றி கிளறி தயாராக எடுத்துக்கொள்ளவும். 
  • சிறிது தினை சாதம் ஆறியதும் அதில் புளிக்காய்ச்சலையும் மீதமிருக்கும் பொடியையும் தேவையானஅளவு உப்புடன் சேர்த்து கிளறி அரைமணி நேரத்திற்குப்பின் பரிமாறலாம். 
  • குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி உண்ணும் புளியோதரை தினை அரிசியில் சுவையாகவும், சத்தானதாகவும் இருக்கும்.