பாத மருத்துவம் / Foot Reflexology

உடலின் ஆரோக்கியத்தையும், தொந்தரவையும் பிரதிபலிக்கும் கண்ணாடி நமது பாதம், முகம் மற்றும் நகங்கள். இவற்றில் முகம் சொல்லும் பலன்களையும், நகம் காட்டும் அறிகுறிகளையும் வேறொரு பகுதியில் பார்த்தோம். அவற்றில் மற்றொன்றான பாதம் காட்டும் அறிகுறிகளையும், அவை பிரதிபலிக்கும் தொந்தரவுகளையும் இந்த பகுதியில் பார்க்கலாம்.

பாதம் நமது உடலின் ஆரோக்கியத்தை கூறும் கண்ணாடி என்பது 3000 ஆண்டுகட்கு முன்பு நாம் கண்டறிந்த உண்மை. இங்கிருந்து இம்மருத்துவ முறை சீனாவுக்குப் பரவி, இன்று சீனா உலகிற்கு வழங்கிக் கொண்டிருக்கிறது.

பாத மருத்துவத்தின் சிறப்பு

உடல் உறுப்புகளை இயக்கும் எல்லா நரம்புகளும் பாதத்தில் சேர்கின்றன. ஓர் உறுப்பு நோயுறும் போது, நரம்பு முடிப்பாக பாதத்தில் உணர்வூட்டும். கட்டைவிரலால் உள் பாதத்தின் பல பகுதிகளை நன்கு அழுத்திக் கொண்டே வரும்போது நோயுற்ற உடல் பகுதியைக் குறிக்கும் நரம்பு சந்திக்கும் இடம் அதிக உணர்வுடன் இருக்கும், சற்றுக் கூசும். எனவே எந்தப் பகுதியில் நோய் என்று கண்டுபிடிக்கவும், நோயை குணப்படுத்தவும் இம்முறை உதவுகிறது. இன்று Foot Reflexology, Gusa Therapy என பல மருத்துவ முறையில் பாத அழுத்த முறையான சிறிது மாற்றங்களுடன் நடைமுறையில் உள்ளது.

பாத மருத்துவ பயன்கள்

படத்தில் இருப்பதை கவனித்து அதற்கேற்ப  பாதங்களில் உள்ள உள்ளுறுப்பு பகுதியை குறித்து வைத்துக் கொள்ளலாம். குறிப்பிட்ட இடத்தை நீங்களே நன்கு அழுத்தி மசாஜ் செய்யலாம். தொடர்ந்து ஒவ்வொரு நாளும் இரண்டு அல்லது மூன்று முறை ஐந்தைந்து நிமிடங்கள் அழுத்தம் அளிப்பதால் அந்த உறுப்பு தூண்டப்படுவதுடன், புத்துணர்வும் பெறுகிறது. இதனால் விரைவாக நல்ல பலனை பெறலாம்.

இரு பாதங்களில் எந்த ஒன்றிலும் பலன் உண்டு. பழக்கம் இல்லாதவர் செய்தாலும் தாறுமாறாக எதுவும் ஆகிவிடாது. ஆபத்தில்லாத எளிய மருத்துவம். சிறப்பாக, சுரப்பிகள், குடல்வால், வயிறு, பாலியல் உறுப்புகள் சம்பந்தப்பட்ட தொல்லைகளுக்கு நல்ல நிவாரணம் கிடைக்கும்.

(3 votes)