உடலின் சீரான இயக்கத்திற்கு நரம்புகள் அவசியமான ஒன்று. நரம்புகள் உடலின் அசைவுகள், இரத்த ஓட்டம், செல் இயக்கம், உள்ளுறுப்புகள் செயல்பாடு என பலவற்றிற்கும் நரம்புகள் பலமாக இருப்பது அவசியம்.
வயதாக வயதாக பலருக்கும் நரம்புகளின் பலம் குறைவதைப் பார்த்திருப்போம். கைகள் நடுங்குவது, சீரான உடல் இயக்கமின்மை போன்றவை அதன் எளிய அறிகுறிகளாகும். இன்றோ இளைஞர்களுக்கு கூட இந்த பாதிப்பு ஏற்படுகிறது. இவற்றை மிக எளிமையாக நமது உணவுகளைக் கொண்டு சரிசெய்யலாம். மேலும் நரம்பு தளர்ச்சி குணமாக்கும் சில உணவுகளையும் தெரிந்துக் கொள்ளலாம்.
- அதிகாலை சூரியஒளி நரம்புகளை அரண்போல் பாதுகாக்கும் வல்லமைக் கொண்டது. காலை நேரம் சூரிய ஒளியில் சிறிது நேரம் இருப்பது சிறந்தது.
- இரசாயனங்கள், பூச்சி கொல்லிகள் கொண்ட உணவுகளை தவிர்ப்பது நரம்புகளை பாதுகாக்க உதவும்.
- அன்றாடம் ஒரு கையளவு சின்ன வெங்காயத்தை வதக்கி காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டு வர நரம்பு தளர்ச்சி ஓடிவிடும். இவ்வாறு பூண்டையும் வதக்கி உண்ணலாம்.
- மதிய உணவில் ரைத்தா என்னும் நம்மூர் தயிர் பச்சடியை அதாவது வெங்காயம் கலந்த தயிர் ஒரு கப் அளவு உண்டுவர நரம்புகள் பலப்படும். இது நரம்புகளுக்கு மட்டுமல்ல எலும்புகளையும் பலப்படுத்தும். மூட்டுவலி, கை கால் குடைச்சல், சத்துப் பற்றாக்குறை மறையும்.
- கொட்டைப் பருப்பு, பச்சை தேங்காய், கீரைகள் ஆகியவற்றை அன்றாடம் எடுத்துக் கொள்வது சிறந்த பலனை அளிக்கும்.