- அகப்பை குறைத்தால் கொழுப்பை அடக்கலாம்.
- ஒருவேளை உண்பான் யோகி; இருவேளை உண்பான் போகி; மூவேளை உண்பான் ரோகி; நாலுவேளை உண்பான் போகியே போகி!
- சுவாமி இல்லை என்றால் சாணியைப் பார்; மருந்தில்லை என்றால் பாணத்தைப் பார்; பேதி இல்லை என்றால் நேர்வாளத்தைப் பார்.
- ஆற்றுநீர் வாதம் போக்கும் அருவிநீர் பித்தம் போக்கும் சோற்றுநீர் இரண்டும் போக்கும்.
- நோயைக் கட்ட வாயைக் கட்டு.
- சனிதோறும் நீராடு.
- நாற்பது வயதில் நா குணம்.
- ஆயிரம் வேரைக் கொன்றவன் அரை வைத்தியன்.
- பிள்ளை இல்லையென்றால் முல்லையாற்றில் முழுகு (குளி).
- மலம் தங்கினால் நலம் போச்சு, மலம் போனால் பலம் போச்சு.
- நொறுங்கத்தின்றால் நூறு வயது.
- நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்.
- உண்டதும் குளித்தால் உடலில் சேராது.
- பசித்த பின்பு புசி, பசிக்காவிட்டால் யோசி.
- உண்ட மயக்கம் தொண்டனுக்கும் உண்டு.
- இருப்பவன் இரும்பைத் தின்பான், போறவன் பொன்னைத் தின்பான்.
Related