tamil proverbs palamozhi

உணவு / ஆரோக்கிய பழமொழிகள் – 4

  • பத்து மிளகு இருந்தால் பகைவன் வீட்டிலும் உண்ணலாம்.
  • விருந்தும் மருந்தும் மூன்று நாள்.
  • அழுத பிள்ளை சிரித்ததாம் கழுதைப் பாலைக் குடித்ததாம்.
  • ஆவாரைப் பூத்திருக்கச் சாவோரைக் கண்டதுண்டோ.
  • பசி வந்தால் பத்தும் பறக்கும்.
  • கூழ் குடித்தாலும் குட்டாய்க் குடிக்கவேண்டும்.
  • உற்றார் தின்றால் புற்றாய் விளையும், ஊரார் தின்றால் பேராய் விளையும்.
  • இளைத்தவனுக்கு எள்ளைக்கொடு, கொளுத்தவனுக்குக் கொள்ளைக் கொடு.
  • வெந்து கெட்டது முருங்கை, வேகாமல் கெட்டது அகத்தி.
  • மாதா ஊட்டாத அன்னத்தை மாங்காய் ஊட்டும்.

  • ஆறிய உணவு மூட்டு வலி உண்டாக்கும்.
  • இரைப்பை புண்ணுக்கு எலுமிச்சை சாறு.
  • ரத்த கொதிப்புக்கு அகத்திக் கீரை.
  • இருமலை போக்கும் வெந்தயக் கீரை.
  • உண்ணா நோன்பு ஆயுளைக் கூட்டும்.
  • உஷ்ணம் தவிர்க்க கம்பங் களி.
  • கல்லீரல் பலம் பெற கொய்யாப் பழம்.

  • காட்டுலே புலியும் , வீட்டுலே புளியும் ஆளைக் கொல்லும்.
  • போன ஜுரத்தை புளி இட்டு அழைக்காதே.
  • சீரகம் இல்லா உணவும், சிறு குழந்தைகள் இல்லா வீடும் சிறக்காது.
  • எண்ணெய்க் குடத்தைச் சுற்றும் எறும்பு போல.
  • தன் காயம் காக்க வெங்காயம் போதும்.
  • வாழை வாழ வைக்கும்.
  • அவசர சோறு ஆபத்து.

  • எறும்பு ஊர கல்லும் தேயும்.
  • ஆலும் வேலும் பல்லுக்குறுதி. நாலும் ரெண்டும் சொல்லுக்குறுதி.
  • குப்பையில் கிடந்தாலும் குண்டுமணி நிறம் போகுமா?.
  • கழுதை கெட்டால் குட்டிச் சுவர்.
  • தனி மரம் தோப்பாகாது.
  • உண்ட வீட்டுக்கு இரண்டகம் செய்யலாமா?
  • அகத்தின் அழகு முகத்தில் தெரியும்.
  • உடம்பைத் தூக்கிக் கடம்பில் போடு.

  • தேனுடன் இஞ்சி ரத்தத் தூய்மை.
  • பூண்டில் இருக்கு பென்சிலின் சக்தி.
  • மூல நோய் தீர வாழைப்பூ கூட்டு.
  • வாந்திக்கு மருந்து மணத்தக்காளி.
  • வாத நோய் தடுக்க அரைக் கீரை.
  • வாய் துர்நாற்றம் தீர்க்க ஏலக்காய்.
  • பருமன் குறைய முட்டைக்கோஸ்.
  • பித்தம் தணிக்க நெல்லிக்காய்.

  • குடல் புண் நலம் பெற அகத்திக்கீரை.
  • கொலஸ்ட்ரால் குறைக்க பன்னீர் திராச்சை.
  • சித்தம் தெளிய வில்வம்.
  • சிறுநீர் கடுப்புக்கு அன்னாசி.
  • சூட்டை தணிக்க கருணை கிழங்கு.
  • ஜீரண சக்திக்கு சுண்டக்காய்.
  • தலை வலி நீங்க முள்ளங்கி சாறு.