- அஞ்சினவனைப் பேய் அடிக்கும்.
- அஞ்சும் மூன்றும் உண்டானால், அறியாப்பெண்ணும் சமைக்கும்.
- அடிக்கும் ஒரு கை, அணைக்கும் ஒரு கை.
- நல்ல காற்று ஆயிரம் அவுன்ஸ் மருந்துக்கு சமம்.
- குளிர்ச்சியான தலையும் சூடான பாதங்களுக்கும் நீண்ட வாழ்வுக்கு உகந்தவை.
- உணவு, அமைதி, முகமலர்ச்சி ஆகிய மூவருமே உலகில் தலைசிறந்த மருத்துவர்கள்.
- தாகத்தோடு படுக்கச் செல்பவன் உடல் நலத்தோடு விழித்தெழுவான்.
- நல்ல மனைவியும் உடல் நலமும் மனிதனின் சிறந்த செல்வம்.
- வைத்தியர்களை விட உணவுமுறை அதிகம் குணமுண்டாகும்.
- நீண்ட நாள் வாழ்வதற்கு கதகதப்பான உடை அணியவும், மிதமாக உண்ணவும், நிறைய நீர் பருகவும்.
- மதிய உணவுக்குப்பின் சிறிது நேரம் அமர்ந்திரு, இரவு உணவுக்குப்பின் ஒரு மைல் நட.
- ஒருவனுக்கு உடல் நலம் குறைவு என்றால் எல்லாமும் குறைவு என்று பொருள்.
- ஆரோக்கியம் உள்ளவனுக்குத் தினசரி திருமணம் தான்.
- முகமலர்ச்சி, நிதானமான வாழ்க்கை, அமைதி இவை உள்ள இடத்தில் வைத்தியருக்கு வேலையில்லை.
- மக்கள் ஆரோக்கியமாக இருந்தால் வைத்தியர்களுக்கு நோய் வரும்.
- முன்னிரவில் தூங்கி அதிகாலையில் எழுந்திருப்பவனுக்கு உடல்நலமும் செல்வமும் அறிவும் பெருகும்.
- சூரியன் போகாத இடத்திற்கு வைத்தியர் போகிறார்.
- கோழையான வீரன் ஆயுதத்தின் மீது குறை சொல்வான்.
- நெடும்பகலுக்கும் உண்டு அஸ்தமனம்.
- நண்டு கொழுத்தால் வலையில் தங்காது.
- கோல் ஆட, குரங்கு ஆடும்.
- தனி மரம் தோப்பாகாது.
- கொடுக்கிறவனைக் கண்டால் வாங்குகிறவனுக்கு இளக்காரம்.
- கேட்டதெல்லாம் நம்பாதே! நம்பியதெல்லாம் சொல்லாதே!.
- அக்கரை மாட்டுக்கு இக்கரை பச்சை.
- உடல் நலம் உள்ளவனுக்கு ஒவ்வொரு நாளும் விருந்து தான்.
- இரவு சாப்பாட்டிற்கு முன்னும் பின்னும் சிறிது உலாவுதல் நலம்.
- நன்றாக இருக்கும் உடலில் நல்ல மனம் தங்கியிருக்கும்.
- ஐந்துக்கு எழுந்திரு ஒன்பதுக்கு உணவருந்து ஐந்துக்கு சாப்பிடு ஒன்பதுக்கு உறங்கு.
- ஒரு வேளை உணவை இழந்தால் 100 வைத்தியர்களை அழைப்பதை விட மேலானது.
Related