- மங்கும் காலம் மாங்காய், பொங்கும் காலம் புளியங்காய்.
- அரச மரத்தைச் சுற்றியதும் அடிவயிற்றைத் தொட்டுப்பார்த்தது போல!.
- ஐப்பசி மருதாணி அரக்காய்ப் பற்றும்.
- ஏட்டுச் சுரைக்காய் கறிக்கு உதவாது!.
- விருந்தும் மருந்தும் மூன்றே நாள்.
- மக்களைக் காக்கும் மணத்தக்காளி.
- தேனும் தினை மாவும் தேவர்க்கு அமிர்தம்.
- வேலம் பட்டை மேகத்தை நீக்கும், ஆலம் பட்டை பித்தத்தை அடிக்கும்.
- அன்னம் அடங்கினால் ஐந்தும் ஒடுங்கும்.
- உப்பு அறியாதவன் துப்பு கெட்டவன்.
- இன்று விருந்து நாளை உபவாசம்.
- கடுக்காய்க்கு அக நஞ்சு, இஞ்சிக்கு புற நஞ்சு.
- எருதுக்குப் பிண்ணாக்கு, ஏழைக்கு கரிசாலை.
- வாழை வாழ வைக்கும்.
- அறுகம்புல்லும் ஆபத்துக்குதவும்.
- உண்டி சுருங்குதல் பெண்டிர்க்கு அழகு.
- ஆலை இல்லா ஊரில் இலுப்பைப்பூ சர்க்கரை.
- கடுகு சிறுத்தாலும் காரம் குறையாது.
- எரு கெட்டாருக்கும் எட்டே கடுக்காய், இளம்பிள்ளை தாய்க்கும் எட்டே கடுக்காய்.
- அடுக்கிற அருமை உடைக்கிற நாய்க்கு தெரியுமா.
- கஞ்சி கண்ட இடம் கைலாசம், சோறு கண்ட இடம் சொர்க்கம்.
- அடாது செய்தவன் படாது படுவான்.
- இலங்கையில் பிறந்தவனெல்லாம் ராவணனில்லை.
- உண்டவன் பாய் தேடுவான், உண்ணாதவன் இலை தேடுவான்.
- குடிப்பதோ கூழ், கொப்பளிப்பதோ பன்னீர்.
- ஊதாரிக்கு பொன்னும் துரும்பு.
- அறுக்கத் தெரியாதவன் இடுப்பில் ஆயிரம் கதிர் அரிவாள்.
- ஆயிரம் காக்கைக்கு ஒரு கல்.
- சேர இருந்தால் செடியும் பகை.
- தேரை இழுத்து தெருவில் விட்டது போல.
- கடுகத்தனை நெருப்பானாலும் போரைக் கொளுத்திவிடும்.
- ஏழைபேச்சு அம்பலம் ஏறாது.
- கூரை ஏறி கோழி பிடிக்காதவன் வானம் ஏறி வைகுண்டம் போறானாம்.
- பந்திக்கு முந்து, படைக்கு பிந்து.
- அடிநாக்கில் நஞ்சு நுனிநாக்கில் அமிர்தம்.
- இருகினால் களி, இளகினால் கூழ்.
- சருகைக் கண்டு தணல் அஞ்சுமா.
Related