- சுக்குக்கு மிஞ்சின மருந்தும் இல்லை, சுப்பிரமணியனுக்கு மிஞ்சின தெய்வமும் இல்லை.
- உப்பில்லாப் பண்டம் குப்பையிலே.
- கந்தையானாலும் கசக்கிக் கட்டு, கூழானாலும் குளித்துக் குடி.
- சுத்தம் சோறு போடும்.
- லங்கணம் பரம ஔஷதம் (பட்டினி கிடப்பது மகத்தான மருந்து).
- பாலுக்கு மிஞ்சின சுவையுமில்லை, பல்லக்குக்கு மிஞ்சின சொகுசுமில்லை.
- வாழ்வதற்காக உண்; உண்பதற்காக வாழாதே.
- விருந்தும் மருந்தும் மூன்று நாள்.
- விளையும் பயிர் முளையிலே தெரியும்.
- உப்பிட்டவரை உள்ளளவும் நினை.
- உப்பில்லாப் பண்டம் குப்பையிலே.
- கடைத் தேங்காயை வழிப்பிள்ளையாருக்கு உடைக்காதே.
- வினை விதைத்தவன் வினை அறுப்பான். தினை விதைத்தவன் தினை அறுப்பான்.
- வெண்ணெயை வைத்துக் கொண்டு நெய்க்கு அலைவானேன்.
- நொறுங்கத் தின்றால் நூறு வயது.
- அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு.
- ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம்.
- நொறுங்கத் தின்றால் நூறு வயது.
- பசி வந்திடப் பத்தும் பறந்து போகும்.
- பணம் பந்தியிலே குணம் குப்பையிலே.
- பழகப் பழகப் பாலும் புளிக்கும்.
- முழு பூசணியைச் சோற்றில் மறைக்காதே.
- மருந்தேயாயினும் விருந்தோடு உண்.
- சுட்ட எண்ணையைத் தொடாதே, வறுத்த பருப்பை விடாதே!.
- வெட்டிவேரில் விசிறியும் விலாமிச்சை வேரில் தட்டியும் பண்ணு.
- வெந்தயம் போடாத கறியும் கறியல்ல, சந்தையில்லாத ஊரும் ஊரல்ல.
- வில்வப் பழம் திண்பார் பித்தம் போக, பனம் பழம் திண்பார் பசி போக.
- பொன்னாங் கண்ணிக்கு புளியிட்டு ஆக்கினால் உண்ணாப் பெண்ணும் ஒரு உழக்கு உண்ணும்.
- சுக்கு அறியாத கஷாயம் உண்டா?.
- வைத்தியனுக்குக் கொடுப்பதை வாணியனுக்குக் கொடு.
- பருப்பில்லாத கல்யாணம் உண்டா?.
- ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக்குறுதி.
- பலா உத்தமம், மா மத்திமம், பாதிரி அதமம்.
- உடம்பைக் கடம்பாலே அடி.
- கத்தரிக்காய்க்கு காம்பு ருசி, வெள்ளரிக்காய்க்கு விதை ருசி.
Related