நமது உடலுக்கு தேவையான சத்துக்களில் ஒன்றுதான் இந்த போலிக் அமிலம். பொதுவாக கர்ப்பிணிகளுக்கு இது அவசியம் தேவை என்பதால் அந்த நேரத்தில் கருவுற்றிருக்கும் பெண்களுக்குத் தான் ஃபோலிக் அமிலம் தேவை என பலர் நினைப்பதுண்டு. கருவுற்றிருக்கும் பெண்களுக்கு மட்டுமல்லாமல் அனைவருக்குமான சத்துதான் ஃபோலிக் அமிலம். இது வைட்டமின் பி சத்துக்களின் ஒரு அங்கமாகும்.
முளை மற்றும் நரம்புகள் சுறுசுறுப்பாகவும் ஆரோக்கியமாகவும் இயங்கவும், நல்ல மனநிலை ஏற்படவும், மந்தம் அகலவும், வலிப்பு நோய் மறையவும், மலட்டுத் தன்மை, குழந்தையின்மை தீரவும், ஜீரண சக்தியை அதிகரிக்கவும், நினைவாற்றலை அதிகரிக்க அதுவும் முதுமை காலத்தில் வரும் ஞாபக மறதிக்கும் சிறந்தது போலிக் அமிலம்.
மேலும் உள்ளுறுப்புகளில் ஏற்படும் பாதிப்புகளை சீராக்கவும், செல்களில் ஏற்படும் பாதிப்புகளை போக்கவும், நல்ல அடர்த்தியான கூந்தல், பளபளப்பான அழகைப் பெறவும் போலிக் அமிலம் உதவும். அதனால் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்குமானது போலிக் அமிலம். பள்ளி செல்லும் குழந்தைகள், கல்லூரி மாணவ மாணவிகள், வேலை தேடுபவர்கள், கர்ப்பிணிகள், முப்பது வயதைக் கடந்த பெண்களுக்கும் அவசியமானது.
அதனால் போலிக் அமிலம் நிறைந்த உணவுகளை சீராக தொடர்ந்து எடுத்துக் கொள்வது அவசியம். பயறு, பருப்பு வகைகள், வெண்டைக்காய், முட்டை கோஸ், கருவேப்பிலை, தண்டுக்கீரை மற்றும் பிற கீரைகள், அடர்பச்சை நிற காய்கறிகள், பீன்ஸ், பாசிபடிந்த நீர் போன்றவற்றில் போலிக் அமிலம் நிறைந்துள்ளது. அதிலும் பச்சையாக வெண்டைக்காயை சாப்பிட்டு வர உடலில் சேரும் நச்சுக்களும் அகலும், போலிக் அமிலமும் சேரும்.
ஃபோலிக் அமிலம் உள்ள உணவுகளை தொடர்ந்து எடுத்துவர மலட்டுத் தன்மை அகலும், குழந்தைப் பேறு ஏற்படும் மேலும் தாம்பத்திய வாழ்வில் ஏற்படும் வெறுப்பு, எரிச்சல் நீங்கும்.