இயற்கை உரங்கள் தயாரிக்கும் முறை
இயற்கை விவசாயம், வீட்டுத்தோட்டம், மாடித்தோட்டம் வைத்திருப்பவர்களுக்கு இருக்கக்கூடிய மிக முக்கியமான பிரச்சனைகள் பயிர் வளர்ச்சி குன்றுவது, தழைச்சத்து குறைபாடு, பூக்கள் உதிர்வது, மண்ணின் ஊட்டச்சத்து குறைந்திருப்பது, நுண்ணூட்ட சத்து குறைபாடு மண்ணின் காரஅமில தன்மை மாறுபடுவது, பூச்சி தாக்குதல், காய்கனி வளர்ச்சி குறைவது மற்றும் ஒட்டுமொத்த வளர்ச்சி குறைவதும். இவற்றிற்கான சிறந்த தீர்வை அளிக்கக்கூடியது மீன் அமிலோ அமிலம்.
மண் வளத்தை அதிகரிக்கவும், பயிர் வளர்வதற்கும், பூக்கும் திறனை அதிகப்படுத்தவும், மிக முக்கியமாக தழைச்சத்து குறைபாடை சீராக்கவும் பயன்படுத்தப்பட்டு வரும் ஒரு வளர்ச்சி ஊக்கிதான் மீன் அமினோ அமிலம்.
இவற்றை நாமே குறைந்த செலவில் மிக எளிமையாக தயாரிக்கலாம். 9இதனை எளிமையாக தயாரித்து பயிர்களுக்கு தெளிப்பதால் செலவு குறையும், பலன் கூடுதலாக கிடைக்கும். அகையால் குறைந்த செலவை கொண்டு மீன் அமினோ அமிலம் தயாரித்து தரமான பொருட்களை உற்பத்தி செய்து கூடுதல் மகசூல் பெற முயலுவோம்.
மீன் அமினோ அமிலத்தின் பயன்கள்
- பயிர்கள் நன்கு செழித்து வளரும்.
- பயிர்களுக்கு பூக்கும் திறனை அதிகரிக்கச் செய்யும்.
- தரமான காய்கனிகளை தருகிறது.
- நுண்ணூயிர்களின் எண்ணிக்கை அதிகரிக்க உதவுகிறது.
- 75% பயிர் வளர்ச்சி ஊக்கியாகவும்.
- 25% பூச்சி விரட்டியாகவும் பயன்படுகிறது.
- பயிர்களுக்கு 90% தழைச்சத்து தரக்கூடியது.
- பயிர்கள் ஓரே சீராக வளர்கிறது.
- பூச்சிகள், பயிர்களை சேதம் செய்யும் சிறுவிலங்குகளின் தாக்குதலை குறைக்கிறது.
மீன் அமினோ அமிலம் தயாரிக்க
தேவையான பொருள்கள் :
மீன் கழிவுகள் – 1 பங்கு
நாட்டு வெல்லம் / நாட்டு சர்க்கரை – 1 பங்கு
பிளாஸ்டிக் வாளி அல்லது டப்பா – ஒன்று
தயாரிக்கும் முறை :
பெரிய மீன் கழிவு துண்டுகளாக இருந்தால் சிறு சிறு துண்டுகளாக வெட்டி பிளாஸ்டிக் வாளியில் சேர்த்துக்கொள்ளவேண்டும்.
ஒரு கிலோ நாட்டு சர்க்கரை, ஒரு கிலோ மீன் கழிவுகள் இரண்டையும் நன்றாக கலந்து ஒரு பிளாஸ்டிக் வாளியில் அல்லது டப்பாவில் போட்டு நன்கு கலந்து காற்று புகாமல் மூடி வைக்க வேண்டும்.
பதம் பார்த்தல் :
நாற்பது நாள்கள் கழித்து திறந்து பார்த்தால் நொதித்து தேன் போன்ற நிறத்தில் ஒரு திரவம் வாளிக்குள் இருக்கும். மீன் கழிவுகள் அடியிலேயே தங்கியிருக்கும்.
இந்த திரவத்திலிருந்து துளி கூட கெட்டை வாடை வீசாது.
பழவாடை அறிதல் :
பழவாடை வீசும். இப்படி பழவாடை வீசினால் மீன் அமினோ அமிலம் தயார் என்பதை தெரிந்து கொள்ள முடியும்.
இவற்றை வடிகட்டி எடுத்துக் பயிருக்கு தெளிக்கலாம.
கரைசலில் கழிவுகள் ( மீனின் முள்) மீன் கழிவுகள் ஏதாவது கரையாமல் இருந்தால் அரைக்கிலோ வெல்லம், அரைக் கிலோ மீன் திரும்பவும் சரியான விகிதத்தில் போட்டு கிளறி விட்டு மூடி விடவும், இவற்றை தொடர்ந்து பயன்படுத்தலாம்.
பயன்படுத்தும் முறை :
ஒரு லிட்டர் தண்ணீருக்கு 3 மில்லி என்ற விகிதத்தில் கலந்து காலை அல்லது மாலை வேளையில் பயிர்களின் மேல் தெளிக்கலாம்.
தெளிக்கும் பருவம் :
பயிர் பூ மற்றும் காய்ப்பு பருவத்தில் தெளிக்கலாம். அல்லது தண்ணீர் பாயும் பொழுது தண்ணீருடன் கலந்து விடலாம்.
மாதம் ஒருமுறை தெளிப்பதால் சிறந்த பலனை அளிக்கும்.
பயன்படுத்தும் பயிர்கள்
வீட்டுத்தோட்ட செடிகள், மரப்பயிர்கள், காய்கறிகள், கொடிவகைகள், பணப்பயிர்கள், பயறுவகை பயிர்கள், எண்ணெய்வித்து பயிர்கள், மலர்சாகுபடி, தானியப்பயிர், கனி மரங்கள் போன்ற அனைத்து வகை பயிர்களுக்கும் பயன்படுத்தலாம்.
குறிப்பு :
பயிர்களுக்கு அதிகமாக பயன்படுத்தாமல் பரிந்துரை செய்த அளவு பயன்படுத்த வேண்டும்.
மற்ற இயற்கை இடுபொருட்களுடன் சேர்த்து பயன்படுத்தலாம்.
இதனை தயாரிக்கும் பொழுது தயாரிக்க பயன்படும் கலனை மண்ணில் 75 சதம் புதைத்து வைத்து தயாரித்தல் தரம் நன்றாக இருக்கும்.
மீன் கடைகளில் கிடைக்கும் பயனற்ற மீன் பாகங்கள் மீன் கழிவுகள் எனப்படுகிறது.
வைப்பு :
ஒரு முறை தயார் செய்யப்படும் மீன் அமினோ அமிலத்தை 6 மாத காலம் வரை வைத்திருந்து பயன்படுத்தலாம்.
மேலும் பல இயற்கை வளர்ச்சி ஊக்கிகள், பூச்சி விரட்டிகளுக்கு