சுண்ணாம்பு சத்துக்கள் நிறைந்த சிறந்த உணவு கேழ்வரகு. உடலுக்கு வலுவையும், தெம்பையும் அளிக்கும் நல்ல சுவையான கார கேழ்வரகு புட்டு எவ்வாறு செய்வது என இந்த பதிவில் பார்க்கலாம். எளிதாக பத்தே நிமிடத்தில் தயாரிக்ககூடிய சுவையான உணவு இந்த கார கேழ்வரகு புட்டு. மாலை உணவிற்கு இனிப்பு கேழ்வரகு புட்டு, கார கேழ்வரகு புட்டு என விட விதமாக கொடுக்க அனைவரும் விரும்பி உண்பார்கள்.
குழந்தைகள் முதல் அனைத்து வயதினருக்கும், ஆண்கள் பெண்களுக்கும் ஏற்றது. வளரும் குழந்தைகளின் சீராக வளர்ச்சிக்கு உதவக்கூடியதாகவும் இந்த புட்டு உள்ளது. ஆவியில் வேகவைக்கும் இந்த உணவு செரிமானத்திருக்கு ஏற்றது. நோய் எதிர்ப்பு ஆற்றலை அதிகரிக்கக் கூடியது. மூட்டு வலி, உடல் வலிக்கு சிறந்தது.
மேலும் கேழ்வரகின் மருத்துவகுணங்கள், பயன்களை தெரிந்துக்கொள்ள – கேழ்வரகு. கிராமங்களில் இருக்கும் மக்கள் நகரங்களில் இருக்கும் மக்களை விட அதிக ஆற்றலையும், நோய் எதிர்ப்பு ஆற்றலையும் கொண்டுள்ளதற்கு மிக முக்கிய காரணம் இந்த கேழ்வரகு. அன்றாடம் ஏதோவது ஒரு வகையில் இந்த கேழ்வரகை அவர்கள் உட்கொள்வதால் உடல் சுறுசுறுப்புடன் இருபதுடன் நோய் நொடி இல்லாமலும் உள்ளனர். கேழ்வரகை சதாரணமாக கேழ்வரகு மாவாக அரைக்காமல் அதனை வீட்டிலேயே முளைகட்டி காயவைத்து அரைத்து முளைகட்டிய கேழ்வரகு மாவாக தயாரித்து அனைத்து உணவுகளுக்கும் பயன்படுத்த எந்த தொந்தரவும் இன்றி ஆரோக்கியமாக வாழலாம். For Ragi Spicy Puttu Recipe in English.
தேவையான பொருட்கள்
- 2 கப் ராகி மாவு / கேழ்வரகு மாவு (முளைகட்டிய கேழ்வரகு மாவினை எடுக்க சத்துக்கள் கூடும்.)
- 2 ஸ்பூன் நல்லெண்ணெய்
- ¼ ஸ்பூன் கடுகு
- ¼ ஸ்பூன் உளுந்து
- ¼ ஸ்பூன் சீரகம்
- 2 வர மிளகாய்
- சிறிது கறிவேப்பிலை
- ¼ கப் சின்ன வெங்காயம்
- உப்பு
- 2 ஸ்பூன் தேங்காய் துருவல்
- 2 ஸ்பூன் மோர் ((புளிப்பு சுவைக்காக தேவைப்பட்டால்))
செய்முறை
- ஒரு பாத்திரத்தில் ராகி மாவை சிறிது உப்புடன் கலந்து எடுத்து அதில் தண்ணீரை சிறிது சிறிதாக தூவி நன்கு கட்டியில்லாமல் கலந்துகொள்ளவேண்டும்.
- மாவினால் கைகளால் கொழுக்கட்டைப் போல் பிடித்தால் பிடிக்கவரவேண்டும்.
- அதேபோல் அழுத்தினால் மணல் போல் உதிர வேண்டும்.
- இந்த பக்குவத்திற்கு மாவினை கலக்க வேண்டும்.
- அதிகமாக தண்ணீருடன் சப்பாத்தி பதத்திற்கு இருக்கக் கூடாது. மாவு ஈரத்துடன் மணல் மணலாக இருக்க வேண்டும்.
- தேவைப்பட்டால் தண்ணீரில் கலந்த பின் சல்லடையில் சளித்துக் கொள்ளலாம். கட்டிகள் இருந்தால் தேய்த்துவிட்டு உதிர்த்து விடலாம்.
- இவ்வாறு ஈர மாவு தயாரான பின் ஒரு இட்லி பாத்திரத்தில் இட்லி தட்டில் ஈர துணியை வைத்து நீராவி தயாராக வைக்க வேண்டும்.
- அதில் மெதுவாக, சலித்த மாவினை தட்டில் சமமாக பரப்பி அங்கங்கே ஆள்காட்டி விரலால் துளைகளை இட்டு மூடிவைக்கவேண்டும்.
- இவ்வாறு செய்வதால் ஆவி நன்கு வெளியேறி மாவு சமமாக வேகும். இதனை பத்து நிமிடம் ஆவியில் வேகவைக்க வேண்டும்.
- பத்து நிமிடங்கள் கழிந்த பின் மாவினை கைகளால் உருட்டி பார்க்க நன்கு திரண்டு உருட்ட வந்தால் மாவு நன்கு வெந்துள்ளது என தெரிந்துக் கொள்ளலாம்.
- பின் தண்ணீர் தெளித்து நீராவியில் இருந்து இட்லி தட்டை எடுத்து வேறொரு தட்டில் மாற்றிக் கொள்ள வேண்டும்.
- ஒரு வாணலியில் எண்ணெய் சூடானதும் கடுகு, உளுந்து பருப்பு, சீரகத்தை சேர்த்து தாளிக்கவும். பிறகு கறிவேப்பிலை, வர மிளகாய் மற்றும் வெங்காயம் சேர்க்கவும்.
- வெங்காயம் பொன்னிறமாக வரும்வரை வதக்கவும்.
- உப்பு சேர்த்து அடுப்பை அணைக்கவும். ராகியை வேகவைக்க உப்பு சேர்த்திருப்பதால் இதற்கு மட்டும் உப்பு பார்த்து சேர்க்கவும்.
- விரும்பினால் இதில் ஒன்று அல்லது இரண்டு ஸ்பூன் மோர் சேர்த்துக்கொள்ளலாம்.
- இதனுடன் வேகவைத்து எடுத்துவைத்திருக்கும் ராகியை சேர்த்து நன்கு கிளறி தேங்காய்ப்பூ சேர்க்கவும்.
- அவ்வளவுதான் சுவையான ராகி கார புட்டு தயார்.
- இதனை செட்டிநாடு சும்மா குழம்புடன் சேர்த்து சாப்பிட சுவையதிகமாக இருக்கும்.
ராகி கார புட்டு
சுண்ணாம்பு சத்துக்கள் நிறைந்த சிறந்த உணவு கேழ்வரகு. உடலுக்கு வலுவையும், தெம்பையும் அளிக்கும் நல்ல சுவையான கார கேழ்வரகு புட்டு.
⏲️ ஆயத்த நேரம்
10 mins
⏲️ சமைக்கும் நேரம்
15 mins
🍴 பரிமாறும் அளவு
4
🍲 உணவு
புட்டு
தேவையான பொருட்கள்
- 2 கப் ராகி மாவு / கேழ்வரகு மாவு ((முளைகட்டிய கேழ்வரகு மாவினை எடுக்க சத்துக்கள் கூடும்.))

Nice