சுண்ணாம்பு சத்துக்கள் நிறைந்த சிறந்த உணவு. உடலுக்கு வலுவையும், தெம்பையும் அளிக்கும் கேழ்வரகு புட்டு. எளிதாக பத்தே நிமிடத்தில் தயாரிக்ககூடிய சுவையான உணவு இந்த கேழ்வரகு புட்டு. குழந்தைகள் முதல் அனைத்து வயதினருக்கும், குழந்தைகள், ஆண்கள் பெண்களுக்கும் ஏற்றது. வளரும் குழந்தைகளின் சீராக வளர்ச்சிக்கு உதவக்கூடியது. மூட்டு வலி, உடல் வலிக்கு சிறந்தது.
மேலும் கேழ்வரகின் மருத்துவகுணங்கள், பயன்களை தெரிந்துக்கொள்ள – கேழ்வரகு.
தேவையான பொருட்கள்
- 1 கப் கேழ்வரகு மாவு
- ¾ கப் நாட்டு சர்க்கரை
- ½ கப் தேங்காய் துருவல்
- சிறிது நெய்
- 1 சிட்டிகை ஏலக்காய் தூள்
- சிறிது உப்பு
செய்முறை
- முதலில் கேழ்வரகு மாவை எடுத்துக்கொண்டு அதனுடன் சிறிது உப்பு, ஏலக்காய் தூள் சேர்த்து வெதுவெதுப்பான தண்ணீர் தெளித்து நன்றாக பிசறிக் கொள்ளவும்.
- மாவினை கொழுக்கட்டை போல் பிடித்தால் பிடிக்கவரும், அதேபோல் லேசாக அழுத்தினால் உடைந்துவிடும். இதுதான் சரியான பக்குவம்.
- ஒரு தேங்காய் சிரட்டை அதாவது கொட்டாங்குச்சியை எடுத்துக்கொண்டு அதனில் சிறிது தேங்காய் துருவல், சேர்த்து அதன்மேல் இந்த கேழ்வரகு மாவினை வைத்து மீண்டும் அதன் மேல் தேங்காய் துருவல் சேர்த்து குக்கர் குழாயில் பொருத்தி குக்கரில் நீரூற்றி வேகவிடவும்.
- ஆவி மேல் வரும்பொழுது அடுப்பை அணைத்து அதனில் நாட்டு சர்க்கரை, நெய் சேர்த்து சூடாக பரிமாறலாம்.
- சுவையான சத்தான கேழ்வரகு புட்டு தயார்.
கேழ்வரகு புட்டு
சுண்ணாம்பு சத்துக்கள் நிறைந்த சிறந்த உணவு. உடலுக்கு வலுவையும், தெம்பையும் அளிக்கும் கேழ்வரகு புட்டு.
⏲️ ஆயத்த நேரம்
5 mins
⏲️ சமைக்கும் நேரம்
10 mins
🍴 பரிமாறும் அளவு
2
🍲 உணவு
சிற்றுண்டி