கேழ்வரகு பால்

ஆரியம், கேழ்வரகு, கேவுரு, ராகி, கேப்பை… இப்படிப் பல பெயர்களால் அழைக்கப்படும் கேழ்வரகு, ஆசியாவிலும் ஆப்பிரிகாவிலும் பெரிய அளவில் பயிரிடப்படுகிறது. உலகில் அதிக மக்கள் உண்ணக் கூடியதும் இந்த கேழ்வரகைதான்.

தொன்றுதொட்டு நமது நாட்டில் உட்கொள்ளப்பட்ட இந்த கேழ்வரகு நம் முன்னோர்களின் மிக முக்கியமான உணவுகளில் ஒன்று.  நமது முன்னோர்கள் உடலுறுதியுடனும், அதிக காலம் நோயின்றியும் உயிர் வாழ்ந்ததற்கு மிக முக்கிய காரணம் அவர்களது சிறந்த உணவு மேலாண்மையும் அதனில் தவறாமல் பயன்படுத்திய கேழ்வரகு உணவும் தான்.

மேலும் கேழ்வரகைப் பற்றி தெரிந்துக்கொள்ள இங்கு இணையவும் – கேழ்வரகு சத்துக்களும் பயன்களும்.

பசும் பாலை விட அதிக சுண்ணாம்பு சத்துக்களும் மற்ற சத்துக்களும் நிறைந்தது இந்த கேழ்வரகு பால். குழந்தைகள், பெண்கள் முதல் அனைவருக்கும் ஏற்ற கேழ்வரகு பால். கர்ப்பிணிகளுக்கும் ஏற்றது. ஊட்டசத்துக்கள் மற்றும் உயிர்சத்துக்கள் நிறைந்தது. இயற்கையான சுண்ணாம்பு சத்து நிறைந்த பானம்.

தேவையான பொருட்கள்

  • 1 கப் கேழ்வரகு
  • வெல்லம்
  • 1 ஏலக்காய்

செய்முறை

கேழ்வரகை முதல் நாள் காலை ஊறவைக்கவும். 

பின் அதனை முதல் நாள் இரவு நீரிலிருந்து எடுத்து ஒரு துணியில் கட்டிவைக்கவும். 

இவ்வாறு செய்வதால் அந்த கேழ்வரகு சிறிதாக வெள்ளை வெள்ளை நிறத்தில் முளைத்திருக்கும்.

This image has an empty alt attribute; its file name is sprouted-ragi-mulaikattiya--500x375.jpg

மறுநாள் இதனை சிறிது நீர் சேர்த்து நன்கு அரைத்து வடிகட்டவும். 

பின் தேவையான வெல்லம் சேர்த்து அதனுடன் ஒரு சிட்டிகை ஏலக்காய் தூள் சேர்த்து அருந்தவும்.

சுவையான கேழ்வரகு பால் தயார். சூடாக கேழ்வரகு பால் தேவை என்றால் சூடான தண்ணீரை இதனுடன் சேர்த்து பருகவும்.

கேழ்வரகு பால்

(2 votes)



இயற்கையான சுண்ணாம்பு சத்து நிறைந்த பானம். பசும் பாலை விட அதிக சுண்ணாம்பு சத்துக்களும் மற்ற சத்துக்களும் நிறைந்தது. குழந்தைகள், பெண்கள் முதல் அனைவருக்கும் ஏற்ற கேழ்வரகு பால். கர்ப்பிணிகளுக்கும் ஏற்றது. ஊட்டசத்துக்கள் மற்றும் உயிர்சத்துக்கள் நிறைந்தது.


⏲️ ஆயத்த நேரம்
1 day

⏲️ தயாரிக்கும் நேரம்
5 mins

🍴 பரிமாறும் அளவு
2

🍲 உணவு
பால்


தேவையான பொருட்கள்
  • 1 கப் கேழ்வரகு
  • வெல்லம்
  • 1 ஏலக்காய்
செய்முறை
  1. கேழ்வரகை முதல் நாள் காலை ஊறவைக்கவும். 
  2. பின் அதனை முதல் நாள் இரவு நீரிலிருந்து எடுத்து ஒரு துணியில் கட்டிவைக்கவும். 
  3. இவ்வாறு செய்வதால் அந்த கேழ்வரகு சிறிதாக வெள்ளை வெள்ளை நிறத்தில் முளைத்திருக்கும்.
  4. மறுநாள் இதனை சிறிது நீர் சேர்த்து நன்கு அரைத்து வடிகட்டவும். 
  5. பின் தேவையான வெல்லம் சேர்த்து அதனுடன் ஒரு சிட்டிகை ஏலக்காய் தூள் சேர்த்து அருந்தவும்.
  6. சுவையான கேழ்வரகு பால் தயார். சூடாக கேழ்வரகு பால் தேவை என்றால் சூடான தண்ணீரை இதனுடன் சேர்த்து பருகவும்.

(2 votes)

https://www.youtube.com/watch?v=JMlR62xzTC4