கேழ்வரகு இனிப்பு பானம் / Ragi Health Drink
சிறுதானிய வகையை சேர்ந்த நம் கேழ்வரகு (ராகி). கேழ்வரகு எல்லா கடைகளிலும் எளிதில் கிடைக்கக் கூடியது மட்டும் இல்லை, குறைந்த விலை, அதிக சத்துக்கள் கொண்டதும்.
ராகியில் சுண்ணாம்பு சத்து, நார்சத்து, புரதம், இரும்பு சத்து என எல்லா சத்துகளும் உள்ளது. ராகி மலச்சிக்கலை ஒழித்து அதிக நேரம் பசி தாங்கச் செய்யும். மேலும் ரத்தம் சுத்தியாகும், எலும்பு உறுதிப்படும், சதை வலுவாக்கும்.

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் ஏற்ற பானம் இந்த கேழ்வரகு பானம். காலை உணவிற்கு சிறந்தது. விரைவாக தயரிக்கக்கூடியது.

தேவையான பொருட்கள்
- ¼ கப் கேழ்வரகு மாவு
- ½ கப் நாட்டுச் சர்க்கரை
- ஏலக்காய் தூள்
செய்முறை
- கேழ்வரகு மாவினை இரண்டு கப் நீர்விட்டு நன்கு காய்ச்சிக் கொள்ளவும்.
- நன்கு கொதிவந்தபின் அடுப்பை சிறுதீயில் வைத்து சிறிது கிளறிவிடவும்.
- வெந்தபின் அதில் நாட்டுச்சர்க்கரை, ஏலக்காய்த்தூள் சேர்த்து சிறு தீயில் ஒருநிமிடம் வைத்து இறக்கி முந்திரி, பாதாமுடன் பரிமாறலாம்.
- காலையில் பாக்கெட்பால் அல்லது காபிக்கு மாற்றாக சத்தான கேழ்வரகு இனிப்பு பானத்தை அருந்தலாம்.

கேழ்வரகு இனிப்பு பானம்

ஆரோக்கியம் உள்ளவனுக்குத் தினசரி திருமணம் தான்.
சமீபத்திய கருத்துகள்