Ragi Malt Kelvaragu Malt recipe

கேழ்வரகு இனிப்பு பானம் / Ragi Health Drink

சிறுதானிய வகையை சேர்ந்த நம் கேழ்வரகு (ராகி). கேழ்வரகு எல்லா கடைகளிலும் எளிதில் கிடைக்கக் கூடியது மட்டும் இல்லை, குறைந்த விலை, அதிக சத்துக்கள் கொண்டதும்.

ராகியில் சுண்ணாம்பு சத்து, நார்சத்து, புரதம், இரும்பு சத்து என எல்லா சத்துகளும் உள்ளது. ராகி மலச்சிக்கலை ஒழித்து அதிக நேரம் பசி தாங்க செய்யும். மேலும் ரத்தம் சுத்தியாகும், எலும்பு உறுதிப்படும், சதை வலுவாக்கும்.

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் ஏற்ற பானம் இந்த கேழ்வரகு பானம். காலை உணவிற்கு சிறந்தது. விரைவாக தயரிக்கக்கூடியது.

தேவையான பொருட்கள்

செய்முறை

  • கேழ்வரகு மாவினை இரண்டு கப் நீர் விட்டு நன்கு காய்ச்சிக் கொள்ளவும். 
  • நன்கு கொதி வந்த பின் அடுப்பை சிறு தீயில் வைத்து சிறிது கிளறிவிடவும்.
  • வெந்தபின் அதில் நாட்டு சர்க்கரை, ஏலக்காய்த்தூள் சேர்த்து சிறு தீயில் ஒரு நிமிடம் வைத்து இறக்கி முந்திரி, பாதாமுடன் பரிமாறலாம். 
  • காலையில் பாக்கெட் பால் அல்லது காப்பிக்கு மாற்றாக சத்தான கேழ்வரகு இனிப்பு பானத்தை அருந்தலாம்.