உடலுக்கு வலுவளிக்கும் சிறந்த உணவுகளில் கேழ்வரகும் ஒன்று. சுண்ணாம்பு சத்துக்கள் அதிகம் கொண்ட தானியம். சுண்ணாம்பு சத்துக்கள் மட்டுமில்லாமல் மற்ற தாது சத்துக்களும் வைட்டமின் சத்துக்களும் அதிகம் கொண்ட தானியம். சிறுதானிய வகையை சேர்ந்த இந்த கேழ்வரகை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் உட்கொள்ளலாம்.
பிறந்த குழந்தைக்கு முதலில் கொடுக்கும் உணவாகவும் நமது கலாச்சாரத்தில் இந்த கேழ்வரகு உள்ளது. குழந்தைகளுக்கு எளிமையான செரிமானத்தை அளிக்கும் இந்த கேழ்வரகு உடல் உஷ்ணத்தை சமநிலைப்படுத்த உதவுகிறது. எலும்புகளுக்கு உறுதி அளிக்கும் கேழ்வரகு குழந்தைகளின் உடல் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்க உதவுகிறது.
பெரியவர்கள் அவ்வபொழுது கேழ்வரகு சார்ந்த உணவுகளை உட்கொள்வதால் உடல் பருமன், மூட்டுவலி போன்ற தொந்தரவுகள் வராமல் பாதுகாக்கலாம்.
இயற்கையான பொருட்களை கீழிருக்கும் இணைப்பிலிருந்து பெறலாம். Ragi Flakes – கேழ்வரகு அவல், ColdPress Sesame / Gingelly Oil – செக்கு நல்லெண்ணெய். இனி கேழ்வரகு அவல் இட்லி செய்முறையை பார்போம்.
தேவையான பொருட்கள்
- 1 கப் கேழ்வரகு அவல்
- 4 தே கரண்டி உளுந்து மாவு
- 2 கப் புளித்த பசுந் தயிர்
- 1 ப.மிளகாய்
- சிறிது வெங்காயம்
- சிறிது உப்பு
- சிறிது சீரகம்
- சிறிது செக்கு நல்லெண்ணெய்
செய்முறை
- கேழ்வரகு அவலை சுத்தம் செய்து வறுத்து கொரகொரப்பாக அரைக்கவும்.
- சிறிது நல்லெண்ணெய் காயவைத்து சிரகம், ப.மிளகாய், வெங்காயம் சேர்த்து லேசாக வதக்கவும்.
- பின் உளுத்த மாவை சிறிது சூட்டில் வறுத்து பொடித்த கேழ்வரகு அவலை சேர்த்து அடுப்பை அணைக்கவும்.
- இந்த கலவை ஆறியதும் கடைந்த தயிர், உப்பு, வறுத்த வெங்காய கலவையை சேர்த்து 1/2 மணி நேரம் ஊறவைக்கவும்.
- 1/2 மணி நேரத்திற்குப் பின் இட்லித்தட்டில் சிறிது எண்ணெய் தடவி, ஊறிய கேழ்வரகு அவல் கலவையை ஊற்றி பின் 10 நிமிடம் வேக வைக்கவும்.
- பத்துநிமிடத்தில் சுவையான கேழ்வரகு அவல் இட்லி தயராக இருக்கும்.
- சுவையான சத்தான இந்த இட்லியுடன் கார சட்னி பிரமாதமாக இருக்கும்.
கேழ்வரகு அவல் இட்லி
உடலுக்கு வலுவளிக்கும் சிறந்த உணவுகளில் கேழ்வரகும் ஒன்று. சுண்ணாம்பு சத்துக்கள் அதிகம் கொண்ட தானியம். சுண்ணாம்பு சத்துக்கள் மட்டுமில்லாமல் மற்ற தாது சத்துக்களும் வைட்டமின் சத்துக்களும் அதிகம் கொண்ட தானியம். சிறுதானிய வகையை சேர்ந்த இந்த கேழ்வரகை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் உட்கொள்ளலாம்.
⏲️ ஆயத்த நேரம்
1 hr
⏲️ சமைக்கும் நேரம்
10 mins
🍴 பரிமாறும் அளவு
2
🍲 உணவு
காலை