காய்ச்சல் தீர

பொதுவாக உடலின் நோய் எதிர்ப்பு சக்தி உடலை தாக்கியிருக்கும் கிருமிகளை அழிக்கும் இயற்கையான செயலே காய்ச்சல். அதனால் காய்ச்சலை குணமாக்க எளிமையாக நாம் செய்ய வேண்டியது நோய் எதிர்ப்பு ஆற்றலை அளிக்கும் திட, திரவ உணவுகளை அதாவது கசாயம், குடிநீர், பானம், இயற்கை தேநீர் போன்றவற்றை பருகுவதும் தொடர்ந்து இளம் சூடான நீரை பருகுவதும் சிறந்த பலனை அளிக்கும். மேலும் கீழுள்ள சில எளிய வீட்டு வைத்திய முறைகளையும் பின்பற்றினாலே போதும் விரைவாக நோயிலிருந்து வெளிவரலாம்.

  • வேப்பிலையை வறுத்து தலைக்கு வைத்து தூங்க நிம்மதியான தூக்கமும் வரும் காய்ச்சலும் விரைவாக தீரும்.
  • இஞ்சி, பட்டை, லவங்கம் தேநீர் தேன் கலந்து பருகலாம்.
  • மிளகு சீரகம் சேர்த்து சாப்பிட்டு வரவும்.
  • எப்படிப்பட்ட காய்ச்சலும் தீர கோரைக்கிழங்கு கஷாயம் கொடுத்தால் நல்லது. கோரைக்கிழங்கை கழுவி சுத்தம் செய்து நீர்விட்டு காய்ச்சி குடிக்கலாம்.

  • நார்த்தங்காய் செடி இலையை கஷாயம் செய்து குடிக்கலாம்.
  • வெங்காயச் சாறு அரை அவுன்ஸ் காலை மாலை குடித்து வர சுரம் நீங்கும்.
  • ஓமவல்லி இலை காம்பு கஷாயம் குடிக்க குடிக்க சளி காய்ச்சல் தீரும்.
  • ஆடாதோடை இலை கசாயம் தேன் கலந்து குடிக்க சளி காய்ச்சல் குணமாகும்.

  • ஓமவல்லி இலை காம்பு கஷாயம் செய்து குடிக்க இருமல் காய்ச்சல் தீரும்.
  • கானா வாழை சமூகத்துடன் மிளகு சீரகம் சேர்த்து கஷாயம் செய்து குடிக்க தாகம் மிகுந்த சுரம் தீரும்.
  • முருங்கைப் பட்டையை அவித்து சாறு எடுத்து ரசமாக்கி சாப்பிட குளிர் காய்ச்சல் தீரும்.