ஒவ்வொரு வீட்டிலும் இருக்கக் கூடிய ஒரு சாதாரண பொருள் தான் வெந்தயம். பலவிதமான சமையல்களிலும் பயன்படுத்தக்கூடிய ஒரு பொருளாகவும் இது உள்ளது. வட இந்தியாவிலும், தென்னிந்தியாவிலும் இதன் இலைகளையும் விதைகளையும் அன்றாடம் சமையலில் நாம் பயன்படுத்துவது உண்டு.
ஒரு சிறு செடி வகையை சேர்ந்தது இந்த வெந்தய செடி. மூன்று சிற்றிலைகள் கொண்ட ஒரு அழகான கை வடிவ கூட்டு இலைகள் கொண்டிருக்கக்கூடிய ஒரு செடி இது. இதனுடைய இலைகள் ஈட்டி போன்ற வடிவமைப்பைக் கொண்டது. மாற்றடுக்கில் அமைந்திருக்கும் இந்த வெந்தயத்தின் மலர்கள் மஞ்சள் கலந்த வெண்மை நிறத்தில் மிக அழகாக காணப்படும்.
வெந்தயம் பயன்கள்
இதனுடைய விதைகள் அழகாக வெடிக்கக்கூடிய அமைப்புடன் இருக்கும். ஒவ்வொரு வெடிகனிகளிலும் இருபது விதைகள் வரை காணப்படும். இந்த வெந்தய செடியின் இலைகளும், விதையும் மருத்துவப்பயன் உடையது. இது கசப்பு சுவை கொண்டது. இரும்பு சத்து, சுண்ணாம்பு சத்து, கந்தகச் சத்துகள், பாஸ்பரஸ் சத்துக்கள் நிறைந்துள்ளது. மேலும் வெந்தயத்தின் மருத்துவ பயன்களை தெரிந்துக் கொள்ள வெந்தய மருத்துவம் என்ற பகுதியில் இணையலாம்.
காமத்தைப் பெருக்கக் கூடிய தன்மையும், சிறுநீரைப் பெருக்கக்கூடிய தன்மையும் உள்ளடக்கியது இந்த வெந்தயமும் வெந்தய கீரையும். வயிற்று தொந்தரவுகள், மாந்தம், இருமல், சுவையின்மை, வாதம், கபம் போன்ற நோய்களை குணப்படுத்த முடியும். இதனுடைய விதைகள் சீதக்கழிச்சல், உடல் எரிச்சல், தாகம், வெள்ளை, எலும்பை பற்றிய சுரங்கள், கொடிய இருமல், ஆண்மையின்மை, இளைப்பு போன்ற பல நோய்களைத் தீர்க்கக் கூடியதாக உள்ளது.
வெந்தயத்தின் இலைகளை நன்கு நீர்விட்டு அரைத்து உடலில் இருக்கக்கூடிய வீக்கங்கள், வலிகள் மீதும் தீக்காயங்களால் ஏற்பட்ட புண்கள் மீது தடவினால் அவை விரைவில் குணமாகும். வெந்தயக் கீரைக்கு அவ்வளவு பெரிய மருத்துவ குணங்கள் உள்ளது.
தாய்ப்பால் அதிகமாக சுரக்க
தாய்ப்பால் அதிகமாக சுரக்க வெந்தயத்தை நன்கு மைய வேகவைத்து அதனை நன்கு கடைந்து தேன் சேர்த்து குழந்தை பெற்ற தாய்மார்களுக்கு கொடுக்க தாய்ப்பால் அதிகமாக சுரக்கும்.
பெண்களுக்கு
- வெந்தயக் கீரையுடன் தேங்காய் பால், நெய் சேர்த்து சமைத்து உண்ண இடுப்பு வலி தீரும். முற்பது நற்பது வயது கடந்த பெண்களுக்கு இது மிகச் சிறந்த மருந்தாகவும் இருக்கும்.
- ஒவ்வொரு நாளும் வெந்தயத்தை இரவு ஊற வைத்து காலையில் வெறும் வயிற்றில் உட்கொள்ள உடல் சூடு தணிவதுடன் சுண்ணாம்பு சத்துக்கள் கிடைக்கும்.
வெந்தய பொடி
- வெந்தயத்தை வறுத்து பொடியாக செய்து குடிநீராக அவ்வப்பொழுது குடித்துவர வயிற்று வலி, வெள்ளை, சீதக்கழிச்சல், காய்ச்சல், உடல் சூடு, வயிற்று பொருமல் போன்ற நோய்கள் தீரும்.
- வெந்தய பொடியை நீரில் கரைத்து, தலையில் ஊற வைத்து குளித்து வர முடி நன்கு வளரும். முடி உதிர்வதும் நிற்கும்.
- வெந்தயப் பொடியை சிறிது எடுத்து காலை மாலை நீருடன் கலந்து பருகிவர சர்க்கரை நோய் குணமாகும்.
வயிற்றுப்போக்கு நிற்க
வயிற்றுப்போக்கு நிற்க – வெந்தயத்தை நெய்யில் நன்கு வறுத்து சிறிது உப்பு, சோம்பு சேர்த்து மோரில் கலந்து பருக வயிற்றுப்போக்கு நிற்கும்.
ரத்தசோகை நீங்க
ரத்தசோகை போன்ற பிரச்சனைகளும் இரத்தம் குறைவாக இருப்பதால் பல நோய்களும் ஏற்படும். இதற்கு சிறந்த மருந்தாக இருக்கக்கூடியது இந்த வெந்தயம். இந்த வெந்தயத்தை பச்சரிசியுடன் சேர்த்து சமைத்து சிறிது உப்பு சேர்த்து அவ்வப்பொழுது உண்பதால் ரத்தம் பெருகும். இதனுடன் தேங்காய் துருவல் சேர்த்துக் கொள்ள நல்ல சுவையாக இருக்கும். உடல் சூடு நீங்கும்.
வெந்தயக் கீரை
- வெந்தயக் கீரையை நன்கு வேக வைத்து தேன் விட்டு கடைந்து உட்கொள்ள மலச்சிக்கல் தீரும். அதுமட்டுமல்லாமல் மூலம், உட்புண், இருமல், மார்புவலி போன்ற நோய்களும் மறையும்.
- மார்புவலி, மூச்சடைப்பு குணமாக – வெந்தயக் கீரையுடன் சீமைப்புளி, அத்திப்பழம், திராட்சை சம அளவு எடுத்து நீரில் கொதிக்க வைத்து சிறிது தேன் கலந்து பருகிவர மார்புவலி, மூச்சடைப்பு குணமாகும்.
- கட்டிகள் உடைய – வெந்தயக் கீரையையும் அத்திப்பழத்தையும் நன்கு அரைத்து கட்டிகளின் மீது பற்றாகபோடா கட்டிகள் உடைந்து குணமாகும்.
- வெந்தயக் கீரையை கூட்டு செய்து அல்லது வெந்தயக்கீரையை தேங்காய் சேர்த்து ஒரு வெந்தயக்கீரை கீர் செய்து சாப்பிட குழந்தையின்மை போன்ற பிரச்சனைகள் தீரும். மலட்டுத் தன்மை அகலும்.
வட இந்தியாவில் வெந்தயக்கீரை அதிகமாக கிடைக்ககூடிய காலங்களில் உலர்த்தி பொடித்து எடுத்து வைத்துக் கொண்டு ஒவ்வொரு உணவின் இறுதியிலும் பயன்படுத்தக்கூடிய ஒரு பழக்கம் உண்டு. அது மட்டுமல்லாமல் அனைத்து விதமான உணவுகளிலும் மேத்தி எனப்படக்கூடிய இந்த உலர்த்திய வெந்தயக் கீரையை சேர்ப்பதால் நல்ல மணமும், உடலுக்கு பல விதமான ஊட்டச் சத்துக்கள் கிடைக்கிறது.