avaram-avarampoo-aavaram-poo-Senna-Auriculata-Tanners-cassia-yellow-flower-avaram-senna-flower-Cassia-Auriculata-avarampoo-benefits-in-tamil-uses-medicinal-benefits-diabetic-weight-loss

செடிகளுக்கு தேவைப்படும் சத்துக்கள்

மனித ஆரோக்கியத்திற்கு மாவுச்சத்து, புரதம், கொழுப்புசத்து, இரும்புசத்து, சுண்ணாம்புச்சத்து, தாதுச்சத்து மற்றும் வைட்டமின் சத்துக்கள் இன்றியமையாதது. அதைப்போல் ஆரோக்கியமான செடி வளர்ச்சிக்கு நைட்ரஜன், பாஸ்பரஸ், பொட்டாசியம் (NPK), கால்சியம், மெக்னீசியம், போரான், துத்தநாகம், மேக்னீஸ், இரும்பு, தாமிரம், மாலிப்டினம், குளோரின் போன்ற சத்துக்கள் இன்றியமையாதது.

தமிழகத்தைப்பொறுத்தவரை நிலத்திற்கு நிலம் வேறுபாடும். செம்மண், உவர்மண், கரிசல் மண், களிமண், வண்டல் மண், சுண்ணாம்புத் தன்மையுள்ள மண் என பல இடங்களில் பலவகை மண் உள்ளது. இவற்றில் பலவகை மண் செடிவளர்ச்சிக்கு ஏதுவானதாக இருக்கும். ஆயினும் சில நுண்ணூட்ட சத்துக்களின் குறைபாடு காணப்படும். பொதுவாக செடிகளுக்கு பதினாறு சத்துக்கள் அவசியமானது. கார்பன், ஆக்ஸிஜன், ஹைட்ரஜன்,  நைட்ரஜன் (தழைச்சத்து), பாஸ்பரஸ் (மணிச்சத்து), பொட்டாசியம் (சாம்பல்சத்து), கால்சியம் (சுண்ணாம்புச்சத்து), மக்னீசியம், சல்பர்(கந்தகச்சத்து), இரும்பு, மாங்கனீசு, போரான், துத்தநாகம், தாமிரம், மாலிப்டினம், குளோரின் போன்றவைகளாகும். இவற்றில் மக்கு பொருட்கள் குறையும் பொழுது நைட்ரஜன் மற்றும் கந்தக சத்துக்கள் குறையும், அதேபோல் கார அமில தன்மையில் வேறுபாடு இருக்க கால்சியம், மக்னீசியம், துத்தநாகம், போரான் போன்ற சத்துக்கள் குறைவாக இருக்கும். இதனால் வளர்ச்சி குன்றுவது, இலைகள் மஞ்சளாக மாறுவதும், இலைகள் சுருளுவது, பூக்கள் உதிர்வது, இலைநுனிகள் கீழ் நோக்கி வளைவது, ஒளிசேர்க்கை தடைபடுவது என பல பாதிப்புகள் செடிகளுக்கு ஏற்படும்.

எந்தெந்த சத்துக்கள் குறைய என்னென்ன மாற்றங்கள் செடிகளில் ஏற்படும் என்பதை இனி தெரிந்துகொள்வோம். கார்பன் எனப்படும் கரிமம், ஹைட்ரஜன், ஆக்ஸிஜன் ஆகிய மூன்றும் ஊட்டச்சத்து பொருட்கள் இல்லை என்றாலும் இவை இல்லாமல் செடிகள் இல்லை என்பதால் மிக முக்கிய பங்கு வகிக்கிறது. மேலும் செடிகளுக்கும் அன்றாடம் கிடைக்கும் காற்று மற்றும் நீரிலிருந்து இவை எளிதாக பெறப்படுவதால் இவற்றிற்கென்று தனி பற்றாக்குறை கிடையாது.

கார்பன் எனப்படும் கரிமம், ஹைட்ரஜன், ஆக்ஸிஜனை தவிர மற்ற ஊட்டச்சத்துக்கள் செடி வளர்ச்சிக்கும், செழிப்பிற்கும் இன்றியமையாதது.

பொதுவாக மற்ற ஊட்டச்சத்துக்கள்  இயற்கையானதாகவும், எளிமையாக செடிகள் கிரகிக்கும் வகையிலும் மண்ணில் இருக்க செடிவளர்ச்சி செழிப்பாக இருக்கும். இரசாயன கலப்பில்லாத இயற்கை ஊட்டச்சத்துக்களுடன் விளையும் உணவுகளை இயற்கை  உணவு பொருட்கள் என்று இன்று பிரபலமாக உள்ளது.

இவ்வாறான இயற்கை முறையில் விளையும் காய்கனிகள் உலக உயிரினங்களுக்கு தேவையான பல சத்துக்களை உள்ளடக்கிய உணவுகளாகவும் உள்ளது. குறிப்பாக மண்ணிலிருக்கும் சத்துக்களை கிரகித்து மனிதனுக்கு தேவையான பலசத்துக்கள் நிறைந்த உணவுகளை மண்ணிலிருக்கும் செடிகள் அளிக்கிறது.

உதாரணத்திற்கு கடல் சூழ்ந்த நமது தமிழகத்து நிலங்களில் கடலில் அதிகமாக இருக்கும் ஐயோடின் என்ற சத்துக்கள் தமிழக மண்ணிலும் கலந்தே உள்ளது. இவ்வகை சத்துக்கள் பெரியளவில் செடிகளுக்கு தேவையில்லை என்றாலும் மனிதர்களின் உடல் கட்டமைப்பிற்கு இந்த சத்துக்கள் அவசியம், இவற்றை எளிதாக செடிகள் மண்ணிலிருந்து கிரகித்து காய்கனிகளில் சேமிக்கிறது. இதனால் மனிதர்களுக்கு அத்தியாவசியமான ஐயோடின் சத்துக்கள் உணவு மூலமாகவே நமக்கு கிடைக்கப்பெறுகிறது.

avaram-avarampoo-aavaram-poo-Senna-Auriculata-Tanners-cassia-yellow-flower-avaram-senna-flower-Cassia-Auriculata-avarampoo-benefits-in-tamil-uses-medicinal-benefits-diabetic-weight-loss

குறிப்பிட்ட 13 சத்துக்கள்

குறிப்பிட்ட 13 சத்துக்கள் செடிகளுக்கு அவசியமென்றாலும், அதற்கு அப்பாற்பட்டு பல சத்துக்களை மண் செடிகளின் காய்கனி, தானியங்களில் மனித ஆரோக்கியத்திற்காக சேமித்து வைக்கிறது. இவற்றை உண்ணும் மனிதர்கள் இன்றிருக்கும் தைராய்டு, மூட்டுவலி, கருப்பை பிரச்சனைகள், குழந்தையின்மை போன்ற நோய்களில் இருந்து எளிதாக விடுபடலாம்.

அதனாலேயே செடிகளை குறிப்பாக வீட்டுத்தோட்டம் வைத்திருப்பவர்கள் பெரும்பங்கு மண்ணைக்கொண்டே செடிகளை வளர்க்கவேண்டும். தேங்காய் நார்கழிவுகள், கரும்பு சக்கை, இலைதழை கழிவுகளுடன் கட்டாயம் மண்ணின் பங்கும் அதிகமாக இருக்கவேண்டும்.

அனைத்து சத்துக்களும் ஒருங்கிணைத்த மண்ணையே உயிருள்ள மண் என்போம். 

தழைச்சத்து / நைட்ரஜன் சத்து

செடி வளர்ச்சிக்கு இன்றியமையாத சத்துக்களில் ஒன்றானது தழைச்சத்து எனப்படும் நைட்ரஜன் சத்து. இந்த நைட்ரஜன் சத்துக்கள் செடிகளுக்கு தேவையான புரதம், அமினோ அமிலம், வைட்டமின் மற்றும் பச்சையம் போன்றவற்றிற்கு அவசியமாகிறது. செடிகளில் இருக்கும் தண்டு மற்றும் இலை வளர்ச்சிக்கு அவசியமான சத்தாக இந்த நைட்ரஜன் சத்து உள்ளது. பச்சையத்தை அளிக்கக்கூடிய இந்த நைட்ரஜன் சத்து அதிகமாகும் பொழுது பூக்கும் பருவம் மற்றும் காய்ப்புத் தன்மை பாதிக்கப்படும் அல்லது தாமதமாகும். அதோடு பூச்சிகள் ஈர்க்கப்பட்டு பூச்சிகளினால் செடிகள் தாக்கப்படும். அதுவே நைட்ரஜன் சத்து குறையும் பொழுது காய்ப்புத் தன்மை குறைவதோடு செடிகளில் இருக்கும் இலைகள் மஞ்சளாக மாறுவதும் (பச்சைய சோகை), வளர்ச்சி குன்றுவதும் ஏற்படும். செடிவளர்ச்சிக்கு தேவையான இந்த நைட்ரஜன் சத்துக்கள் நாட்டுமாட்டின் சிறுநீரிலும், அது சார்ந்த இயற்கை வளர்ச்சிஊட்டிகளிலும், மண்புழு, கால்நடை மக்கு உரத்திலும் அதிகமாக காணப்படுகிறது. இவற்றைக்கொண்டு சீராக செடிகளுக்கு ஊட்டமளிக்க தழைச்சத்து பாதிப்புகள் இல்லாமல் செடிகளை பாதுகாக்கலாம். நல்ல வளர்ச்சியையும் செழிப்பான காய்களையும் பெறலாம்.

பாஸ்பரஸ் / மணிச்சத்து

விதை முளைப்பதற்கும், ஒளிச்சேர்க்கைக்கும் ஆதாரமாக இருக்கக்கூடியது பாஸ்பரஸ் எனப்படும் மணிச்சத்து. செடிகளின் மரபணு, நியுக்ளியோடைடுகள் மற்றும் பல துணை நொதிகளின் வளர்ச்சிக்கும்  இருக்கக்கூடியது இந்த பாஸ்பரஸ் சத்து. செடி வளர்ச்சிக்கும், வளர்சிதை மாற்றத்திற்கும் இன்றியமையாத ஒரு சத்தாகவும் இந்த பாஸ்பரஸ் சத்து உள்ளது. செடி பூக்கும் தன்மைக்கும், காய் உருவாவதற்கும் அத்தியாவசியமான சத்து இந்த மணிச்சத்து எனப்படும் பாஸ்பரஸ் சத்து. இந்த பாஸ்பரஸ் சத்து பொதுவாக பாஸ்பேட் என்ற வடிவில் நமது அங்கக  உயிர் மண்ணில் அதாவது மக்குப்பொருளில் இருக்கும். இயற்கை உரங்கள், இயற்கை உரத்தில் குறிப்பாக மண்புழு, மக்குஉரம் போன்ற உரத்தில் செடிகளுக்கு தேவையான அளவில் இந்த பாஸ்பரஸ் சத்துக்கள் உள்ளது. இந்த பாஸ்பரஸ் சத்து குறைவதால் இலைகள், தண்டுகள் நிறம் மாறுவது, காய்ந்து போவதுடன் வளர்ச்சியும் பாதிக்கப்படும். காய்ப்பு பெரியளவில் குறையும். அது மட்டுமில்லாமல் பிஞ்சிலேயே செடிகள், பிஞ்சிலேயே பழங்கள், பூக்கள் உதிர்வதும் இந்த பாஸ்பரஸ் சத்து குறைபாட்டினால் தான். ஆரோக்கியமான வேர்வளர்ச்சிக்கும், வேர்மூலமாக பரவும் நோய்களை தடுக்கவும் இந்த பாஸ்பரஸ் சத்துக்கள் துணைபுரிகிறது. காய்கனிகள் சீரான வளர்ச்சிக்கும், பெருக்கத்திற்கும், கனிவதற்கும் அவசியமானது இந்த சத்து. இந்த சத்துக்கள் குறைவதால் வளர்ந்த இலைகள் உதிரும், பொதுவாக செடி வளர்ச்சி குறையும்.

பொட்டாசியம் / சாம்பால் சத்து

அடுத்ததாக செடி வளர்ச்சிக்கு மிக முக்கியமான சத்து சாம்பால் சத்து எனப்படும் பொட்டாசியம் சத்து. இந்த சாம்பல் சத்துக்கள் செடிகளின் ஒளிசேர்க்கை மூலம் நிகழும் வளர்ச்சிதை மாற்றத்திற்கும், செடிகள் இலைகளில் சர்க்கரையை பாதுகாக்கவும், புரதம் போன்ற மற்ற சத்துக்களை உட்கிரகிக்கவும், செல் வளர்ச்சிக்கும் ஆதாரமாக இருக்கிறது. அது மட்டுமில்லாமல் செடி வளர்ச்சிக்கு அவசியமான சத்து இந்த சாம்பல் சத்து. சீராக செடிகளுக்குத் தேவையான தண்ணீரை செடிகள் எடுத்துக் கொள்வதற்கும், தண்டுகள் சீராக வளர்வதற்கும், எல்லாவிதமான பருவகாலத்திலும் ஆரோக்கியமாக செழித்து வளர்வதற்கும் பொட்டாசியம் சத்து துணைபுரிகின்றது. உணவிற்கு  தேவையான நிறத்தையும் மணத்தையும் கொடுக்கக் கூடியது இந்த பொட்டாசியம் சத்து எனப்படும் சாம்பல் சத்து. காய்கனிகளில் இருக்கும் எண்ணெய் தன்மை உருவாக துணைபுரிவது இந்த சத்துதான். இயற்கையாகவே மரசம்பல்களில் இந்த சாம்பல் சத்துக்கள் அதிகமுள்ளது. அதனாலேயே மரக்கட்டைகள், அடுப்பு ஆகியவற்றில் எரிந்த சாம்பலை செடிகளுக்கு தெளிப்பது நமது பழக்கமாக இருந்தது. இந்த சாம்பல் சத்து குறைய செடிகளின் இலைகள் சுருள்வது, இலை, காய்களில் கரும்புள்ளிகள் அதிகரிப்பதும், செடிகளின் தண்டுகள் இலைகளில் காய்ந்த நிறத்தையும் ஏற்படுத்தும். பொதுவாக இலை நுனிகள் கீழ்நோக்கி வளைந்தும் வளர்ச்சி குன்றியும் காணப்பட பொட்டாசியம் சத்துக்குறைபாட்டை தெரிந்துகொள்ளலாம். மேலும் இதனால் செடிகளின் ஒளிசேர்க்கை பாதிக்க செடிகள் காய்ந்துவிடும். இந்த சாம்பல் சத்து சீராக செடிகளுக்கு கிடைக்க செடியின் நோய்யெதிர்ப்பு தன்மை, பூச்சி எதிர்ப்பு தன்மை மேம்படும். மேலும் பருவநிலைக்கு தகுந்தாற்போல் அனைத்து சூழலையும் தாங்கிவளரக்கூடிய தன்மையும் இந்த சாம்பல் சத்தின் மூலம் செடிகளுக்கு கிடைக்கும்.

(2 votes)