செட்டிநாடு எண்ணெய் கத்திரிக்காய் குழம்பு

செட்டிநாடு திருமணங்களில் தவறாமல் இடம்பெறும் ஒரு சுவையான குழம்பு இந்த எண்ணெய் கத்திரிக்காய் குழம்பு. இதனுடைய நிறம், மணம் பசியை தூண்டக்கூடியதாகவும் பசியை அதிகரிக்கச் செய்து, அதிகப்படியான உணவையம் உட்கொள்ள தூண்டும்.

தேவையான பொருட்கள்

  • 6-8 கத்திரிக்காய்
  • 6 சின்ன வெங்காயம்
  • 4 பூண்டு
  • 1 தக்காளி

  • சிறிது கறிவேப்பிலை
  • 5 ஸ்பூன் நல்லெண்ணெய்
  • ¼ ஸ்பூன் கடுகு
  • ¼ ஸ்பூன் உளுந்து பருப்பு
  • ¼ ஸ்பூன் வெந்தயம்

  • ¼ ஸ்பூன் சீரகம்
  • ¼ ஸ்பூன் பெருஞ்சீரகம்
  • ஒரு சிட்டிகை மஞ்சள் தூள்
  • 3 ஸ்பூன் குழம்பு மிளகாய் தூள்
  • 1 சிறிய எலுமிச்சை அளவு புளி
  • உப்பு

செய்முறை

  • எண்ணெய் கத்திரிக்காய் குழம்பு செய்ய இளங் கத்தரிக்காயைத் முதலில் தேர்ந்தெடுக்கவும்.
  • பொதுவாக இந்த குழம்பு செய்வதற்கு நாட்டு கத்திரிக்காய்களை எடுத்துக் கொள்வது சிறந்தது, நல்ல சுவையாகவும் இருக்கும்.
  • தோலுரித்து சின்ன வெங்காயம், பூண்டை முதலில் எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.

  • புளியை நீரில் ஊறவைத்து கரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.
  • கத்தரிக்காயை நன்கு சுத்தமாக உப்பு நீரில் முதலில் கழுவி எடுத்துக் கொள்ள வேண்டும்.
  • பின் கத்தரிக்காயின் காம்புகளை முக்கால் பகுதியை வெட்டி நீக்கிவிட்டு அதன் அடியில் நான்கு அல்லது ஆறு கீறல்களாக / பாகமாக வகுத்துக் கொள்ளவேண்டும்.

  • காம்பிலிருந்து கதிரிக்காய்கள் தனியாக வரமால் ஒன்றாக இருக்க வேண்டும்.
  • கத்திரிக்காயில் புழு, பூச்சி இல்லாமல் சரிபார்த்து அவற்றை உப்பு நீரில் போடவும்.

  • ஒரு மண் சட்டியில் நல்லெண்ணையை சூடாக்கி கடுகு, உளுந்து, சீரகம், பெருஞ்சீரகம், வெந்தயம், கறிவேப்பிலை சேர்க்கவும்.
  • இவற்றை தாளித்தப்பின் பூண்டு, சின்ன வெங்காயம் சேர்த்து பொன்னிறமாக வதக்கவும்.

  • பின்னர் தக்காளியைச் சேர்த்து வேகும் வரை சில நிமிடங்கள் நன்கு வதக்கவும், பின்னர் கத்தரிக்காயைச் சேர்த்து சில நிமிடங்கள் வதக்கி மஞ்சள் தூள், குழம்புத் தூள், உப்பு மற்றும் புளி கரைசலை சேர்க்கவும்.

  • அவற்றுடன் மொத்தமாக இரண்டு கப் தண்ணீர் இருக்குமாறு சேர்க்கவும்.
  • இவை கொதிக்க ஆரம்பித்ததும் மூடி மிதமான தீயில் 5 – 10 நிமிடங்கள் கொதிக்க விடவும்.

  • குழம்பு நன்கு கொதித்து எண்ணெய் பிரிந்து வர குழம்பு கெட்டியாகும்.
  • இந்த சமயத்தில் விருப்பப்பட்டால் 1 டீஸ்பூன் வெல்லத்தை சேர்த்து மேலும் 1 நிமிடம் வேக விடவும். வெல்லம் சேர்ப்பதால் கூடுதல் இனிப்பு கலந்த காரம் புளிப்பு சுவை அதிகமாகும்.
  • நல்ல காரசாரமான எண்ணெய் கத்திரிக்காய் குழம்பு தயார்.
  • சாதம், பொரியல் அப்பளத்துடன் பரிமாறவும். இது பிரியாணி, இட்லி தோசையுடனும் நன்றாக இருக்கும்.

ஆயத்த நேரம் : – 10 minutes
சமைக்கும் நேரம் : – 20 minutes
மொத்த நேரம் : – 30 minutes