Ragi Laddu Kelvaragu Ladoo

இயற்கை லட்டு

சத்துக்கள் நிறைந்த இந்த இயற்கை லட்டு வளரும் குழந்தைகளுக்கு மிக சிறந்த உணவு. காலையில் குழந்தைகள் இதனை உட்கொள்ள உடல் பலப்படும், சீரான வளர்ச்சியையும், உறுதியான எலும்புகளையும் அளிக்கும். எளிமையாக நிமிடத்தில் தயரிக்கக்கூடியது.

தேவையான பொருட்கள்

  • கொட்டை நீக்கி பேரீச்சம் பழம்
  • உலர் திராட்சை
  • முந்திரி பருப்பு
  • பாதாம் பருப்பு
  • வேர்க்கடலை
  • துருவிய கொப்பரை தேங்காய்
  • ஏலக்காய்த்தூள்

செய்முறை

  • பேரீச்சம் பழம், உலர்ந்த திராட்சை, முந்திரி பருப்பு, பாதாம் பருப்பு, வேர்க்கடலை, கொப்பரைத் தேங்காய் ஆகியவற்றை சம அளவு எடுத்துக்கொள்ளவேண்டும்.
  • கொப்பரை தேங்காய் இல்லையென்றால் சாதாரண தேங்காயை உடைத்து துருவி வெயிலில் காயவைத்து எடுத்து வைத்துக் கொண்டு கொப்பரைத் தேங்காய்க்கு பதிலாக உபயோகிக்கலாம். வெண்மையாக இருக்கும் சுவையாகவும் இருக்கும்.

  • அனைத்தையும் ஒன்றாக மிக்ஸியில் சேர்த்து அதனுடன் சிறிது ஏலக்காய் தூள் சேர்த்து அரைத்துக் கொள்ள வேண்டும்.
  • அரைத்தவற்றை உருண்டைகளாக பிடித்தால் இயற்கை லட்டு தயார்,
  • பல நாட்களுக்கு கெடாது. மிகவும் சத்துள்ள உணவு வளரும் குழந்தைகளுக்கு நல்லது. மிகவும் அதிகமான சத்துக்கள் இருப்பதால் வயதானவர்கள் ஒரு நாளைக்கு ஒன்றிரண்டிற்கு மேல் சாப்பிட வேண்டாம்.

ஆயத்த நேரம் : – 5 minutes
மொத்த நேரம் : – 5 minutes