சத்துக்கள் நிறைந்த இந்த இயற்கை லட்டு வளரும் குழந்தைகளுக்கு மிக சிறந்த உணவு. காலையில் குழந்தைகள் இதனை உட்கொள்ள உடல் பலப்படும், சீரான வளர்ச்சியையும், உறுதியான எலும்புகளையும் அளிக்கும். எளிமையாக நிமிடத்தில் தயரிக்கக்கூடியது.
தேவையான பொருட்கள்
- கொட்டை நீக்கி பேரீச்சம் பழம்
- உலர் திராட்சை
- முந்திரி பருப்பு
- பாதாம் பருப்பு
- வேர்க்கடலை
- துருவிய கொப்பரை தேங்காய்
- ஏலக்காய்த்தூள்
செய்முறை
- பேரீச்சம் பழம், உலர்ந்த திராட்சை, முந்திரி பருப்பு, பாதாம் பருப்பு, வேர்க்கடலை, கொப்பரைத் தேங்காய் ஆகியவற்றை சம அளவு எடுத்துக்கொள்ளவேண்டும்.
- கொப்பரை தேங்காய் இல்லையென்றால் சாதாரண தேங்காயை உடைத்து துருவி வெயிலில் காயவைத்து எடுத்து வைத்துக் கொண்டு கொப்பரைத் தேங்காய்க்கு பதிலாக உபயோகிக்கலாம். வெண்மையாக இருக்கும் சுவையாகவும் இருக்கும்.
- அனைத்தையும் ஒன்றாக மிக்ஸியில் சேர்த்து அதனுடன் சிறிது ஏலக்காய் தூள் சேர்த்து அரைத்துக் கொள்ள வேண்டும்.
- அரைத்தவற்றை உருண்டைகளாக பிடித்தால் இயற்கை லட்டு தயார்,
- பல நாட்களுக்கு கெடாது. மிகவும் சத்துள்ள உணவு வளரும் குழந்தைகளுக்கு நல்லது. மிகவும் அதிகமான சத்துக்கள் இருப்பதால் வயதானவர்கள் ஒரு நாளைக்கு ஒன்றிரண்டிற்கு மேல் சாப்பிட வேண்டாம்.
இயற்கை லட்டு