உடல் உறுப்புகளை சீரமைக்கும் நல்ல உணவு இது. வாரம் ஒருமுறை இந்த எள்ளு சாதத்தை தயாரித்து உண்ண எலும்புகள் பலப்படும். உடலில் ஏற்படும் பல தொந்தரவுகள் மறையும். நோய் எதிர்ப்பு ஆற்றல் அதிகரிக்கும். For Sesame rice recipe in English.
தேவையான பொருட்கள்
- 1 கப் அரிசி (தூயமல்லி அரிசி)
- 4 – 5 ஸ்பூன் எள்
- 1 ஸ்பூன் மிளகு
- சிறிது கருவேப்பிலை
- 1 ஸ்பூன் உளுந்தம்பருப்பு
- 2 ஸ்பூன் நல்லெண்ணெய்
- சிறிது கடுகு
- 2 வரமிளகாய்
- ஒரு சிட்டிகை பெருங்காயம்
- ¼ ஸ்பூன் சீரகத்தூள்
- உப்பு
செய்முறை
- முதலில் தூயமல்லி அரிசியை ஒரு மணி நேரம் நன்கு களைந்து ஊற வைத்து எடுத்துக் கொள்ள வேண்டும்
- பின் தூயமல்லி அரிசியை சாதமாக வடித்துக் கொள்ளவேண்டும்.
- அரிசி சோறு எவ்வாறு வடிப்பது என்பதை இந்த பதிவில் பார்த்துக் கொள்ளலாம்.
- ஒரு வாணலியில் மிளகு, உளுந்து மற்றும் எள்ளை தனித் தனியாக வறுத்து எடுத்துக்கொள்ள வேண்டும்.
- வறுத்த அனைத்தையும் சேர்த்து தேவையான அளவு உப்பு சேர்த்து மிக்சியில் அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.
- ஒரு வாணலியில் நல்லெண்ணெய் சேர்த்து நல்லெண்ணெய் சூடானதும் கடுகு, வரமிளகாய், சீரகத்தூள், கறிவேப்பிலை, பெருங்காயம் சேர்த்து தாளிக்க வேண்டும்.
- தாளித்தவற்றுடன் வடித்த சாதத்தை சேர்த்து அதனுடன் அரைத்த பொடியையும் கலந்துவிட சுவையான எள்ளு சாதம் தயார்.
- இளஞ்சூட்டில் உண்ண சத்துக்களையும் சுவையையும் சமமாகப் பெறலாம்.
எள்ளு சாதம்
உடல் உறுப்புகளை சீரமைக்கும் நல்ல உணவு இது. வாரம் ஒருமுறை இந்த எள்ளு சாதத்தை தயாரித்து உண்ண எலும்புகள் பலப்படும். உடலில் ஏற்படும் பல தொந்தரவுகள் மறையும். நோய் எதிர்ப்பு ஆற்றல் அதிகரிக்கும்.

😀