Strychnos Nux-vomica; Nux-vomica Strychnine Tree; எட்டி மரம்
தமிழகத்தில் சில கோவில்களில் தலவிருட்சமாக இருக்கும் மாரமாகவும், நம்மை துர்சக்திகளில் இருந்து காக்கும் மரமாகவும் எட்டி மரம் உள்ளது. இந்த மரத்தை சற்று எட்டியே நாம் வைக்க வேண்டும் என்பதற்கும் சில பழமொழிகள் தமிழில் உண்டு. இந்த பிரபஞ்சம் சமநிலையின் அடிபடையிலிருந்தே இயங்குகிறது. நல்லது நல்லது என பல நம்மை சூழ்ந்திருக்கும் அதேசமயம் கொடிய விஷங்களும் நம்மிடம் உள்ளது. அவற்றிற்கு ஒரு எடுத்துக்காட்டு தான் இந்த எட்டி என்ற எட்டி மரம். இதுவும் ஒரு மூலிகை மருத்துவ மரம்தான். விசமும் சில விசங்களை முறிக்க உதவுகிறது தானே, அவ்வாறு மருந்தாக அளவோடு தக்க முறையில் பயன்படுத்த விசங்களை முறிக்கும் மருந்து. மிஞ்சினால் அல்லது சாதாரணமாக கொடிய விஷ மரம்.
இது ஒரு பெரிய மரம் வகையைச் சேர்ந்தது. காஞ்சிரம், விடமுட்டி என சில பெயர்களும் இந்த மரத்திற்கு உண்டு. இந்த எட்டி மரத்தின் இலைகள் பசுமை மாறாது இருக்கும். பழங்கள் விதை ஆரஞ்சு கலந்த மஞ்சள் நிறத்தில் வட்டமாகவும் நடுவில் குழியுடையதாகவும் இருக்கும். அதன் மேல் தோலில் பட்டுப் போன்ற மினு மினுப்பில் சுனையுமிருக்கும். இதன் உட்பாகம் மிகக் கடினமாக இருக்கும். கைப்பு சுவைக் கொண்ட இந்த மரத்தின் பழம், இலை, விதை, மரப்பட்டை, வேர்ப்பட்டை ஆகியவை பயன்படும் பகுதிகள். நீர் மலத்தைப் போக்கி, அழுகலை அகற்றி, சிருநீரப் பெருக்கும் ஆற்றல் நிறைந்தது எட்டி.
வாந்தி, கழிச்சலை ஏற்படுத்தும் தன்மைக் கொண்ட எட்டி காற்றினால் ஏற்படும் பாதிப்புகளுக்கு சிறந்த பலனை அளிக்கும் மற்றும் நரம்புகளுக்கும் வலிமை அளிக்கும். மூலம், வலிப்பு நோய்களுக்கும் நல்ல பலனை அளிக்கிறது. காற்று சமநிலையின்மை, நோய்களுக்கு இந்த எட்டி மர இலைகளை நீரில் சேர்ந்து நன்கு காய்ச்சி குளிக்கலாம், சிறந்த பலனை அளிக்கும். உடலில் ஏற்படும் கட்டிகளுக்கும், அழுகலுக்கும் இதன் இளந்தளிர்கள் பயன்படும். இதனை சில மூலிகைகளுடன் தைலமாக காய்ச்சி வீக்கங்களுக்கு போட விரைவில் நல்ல பலன் கிடைக்கும்.