food and disease, can food cure disease, can food cure auto immune disease

உடலுக்கேற்ற உணவு

நாம் ஒவ்வொருவரும் நம் காலுக்கு ஏற்றார்போல செருப்பு அணிந்துக் கொள்கிறோம். சிறியவர்கள் சிறிய செருப்பையும், பெரியவர்கள் பெரிய செருப்பை நமக்கு நமது உடலுக்கு ஏற்றவாறு அணிந்துக் கொள்கிறோம். நாமே சிறுவர்களாக இருக்கும் பொழுது நாமும் நமக்கேற்றவாறு சிறிய செருப்பை தான் அணிந்து கொண்டோம். பிறகு பெரியவர்கள் ஆன பின் அதற்கேற்றார்ப் போல் நம் கால்களுக்கு ஏற்றார்ப் போல் நம் செருப்பை மாற்றி பெரிய செருப்புகளை அணிந்துக் கொண்டோம்.

காலுக்கு ஏற்ற செருப்பு; உடலுக்கேற்ற உணவு

food and disease, can food cure disease, can food cure auto immune disease

செருப்பு மட்டுமல்ல நமக்கு ஏற்ற உடையையும் நமது உடலுக்கு ஏற்ப மாற்றிக் கொள்கிறோம். அதேபோல் குளிர் பிரதேசங்களில் இருப்பவர்கள் அதற்கேற்றாற் போல உடையையும் செருப்பையும் தேர்ந்தெடுத்த அணிந்துக் கொள்கின்றார். பாலைவனத்தில் இருக்கக்கூடியவர்கள் அதற்கேற்ற உணவு, உடை, செருப்பையும் அணிந்து கொள்கின்றார்.

இன்னும் சொல்லப்போனால் களத்தில் போராடுபவர்கள் அதற்கேற்ப பிரத்யேகமான உடை பிரத்யேகமான செருப்பையும் அணிவதுண்டு. அதேபோல விண்வெளிக்கு செல்பவர்களும் அவர்களுக்கு ஏற்றார்போல உடையையும் செருப்பையும் அணிகின்றனர்.

விண்வெளிக்கு செல்பவர்கள் அவ்வாறு அணிகின்றனர் என்பதற்காக நாமும் அந்த செருப்பையும் அந்த உடையும் அணிந்து நமது ஊரில் உலா வர முடியுமா?

வாழ்வியலும் வாழிடமும் அவற்றை முடிவு செய்கின்றன. நம் உண்ணும் உணவும் அப்படித்தான். நமக்கு ஏற்றதாக; நம் மண்ணுக்கேற்றதாக; நம் உடலுக்கு ஏற்றதாக; நாம் இருக்கும் சுற்றுச்சூழலுக்கு ஏற்றதாக இருக்க வேண்டுமே தவிர பிறரைப் பார்த்து இருந்தால் கேடு நமக்கே.

நமது உணவு நமக்கே ஏற்றதாகவும், நமது சுற்றுசூழலுக்கு ஏற்றதாகவும், நமது மண்ணிற்கு ஏற்றதாகவும், நம் உயரத்திற்கு ஏற்றதாகவும், நமது உழைப்பிற்கு ஏற்ற உணவாகவும் இருப்பது அவசியமானது. இவ்வாறு நமக்கு ஏற்ற, நாம் சுற்றுச்சூழலுக்கு ஏற்ற உணவை உண்ணும் பொழுது ஆரோக்கியம் மேம்படும், மன நிம்மதியும் மகிழ்ச்சியும் பொங்கும்.

நமக்கு ஏற்றதாக உள்ள உணவை உண்போம்;

ஏற்ற அளவு உண்போம்.

வாழ்வில் ஏற்றம் காண்போம்.

(1 vote)