மூவிலைக் கரைசல் – எளிய பூச்சி விரட்டி / இடுபொருள்

செடிகளைத் தாக்கும் பூச்சிகளை இயற்கை விவசாயத்தில் அழிப்பது இல்லை. இயற்கை நமக்கானது மட்டுமல்ல உலகிலிருக்கும் அனைத்து உயிரினத்திற்குமானது. அதனால் நமது உணவு தானியங்கள், பயிர்கள், செடிகளை தாக்கும் பூச்சிகளை விரட்ட மட்டுமே இயற்கை விவசாயத்தில் நாம் செய்வதுண்டு. அந்த வகையில் இயற்கை பூச்சி விரட்டியை எவ்வாறு தயாரிப்பது அதனை எவ்வாறு பயன்படுத்துவது என இயற்கை பூச்சி விரட்டி பகுதியில் பார்த்தோம்.

அதில் பூச்சிகளுக்கு பிடிக்காத மூன்று குணங்களைக் கொண்ட பத்து இலைகளைக் கொண்டு பூச்சி விரட்டி தயாரித்து பயன்படுத்தலாம். அதுமட்டுமல்லாமல் இன்னும் பல இலைக் கரைசல் பூச்சிகளை விரட்டவும், செடிகளுக்கு சிறந்த வளர்ச்சி ஊக்கியாகவும் செயல்படுகிறது. அவற்றையும் இந்த இயற்கை இடுபொருள் / இயற்கை வளர்ச்சி ஊக்கி பகுதியில் பார்க்கலாம்.

இயற்கை பூச்சி விரட்டியை விட மிக எளிதாக மூவிலைக் கரைசலைத் தயாரிக்கலாம். மிக எளிதாக கிடைக்கும், எங்கும் கிடைக்கும் மூன்று இலைகளைக் கொண்டு மிக எளிதாக தயாரித்து செடிகளுக்கு பயன்படுத்த செடிகளில் இருக்கும் பூச்சிகள் நீங்குவதும், செடிகளுக்கு நல்ல வளர்ச்சியையும், ஊட்டத்தையும் அளிக்கும்.

எல்லா இடங்களிலும் சாதாரணமாக கிடைக்கும் இலைகள் வேப்பிலை, எருக்கன் இலை மற்றும் ஊமத்தை இலை. இந்த இலைகள் பூச்சிகளுக்கு பிடிக்காத கசப்பு சுவை, ஓட்டும் தன்மை, பால் வரும் இயல்பையும் கொண்டுள்ளது. இவற்றைக் கொண்டு மிக எளிதாக பெரிய பண்ணை, சிறு தோட்டம் மற்றும் மாடித் தோட்டம் வைத்திருப்பவர்களும் தயாரித்துப் பயன்படுத்தலாம்.

மூவிலைக் கரைசல் தயாரிக்க தேவையானவை

மூவிலைக் கரைசல் செய்முறை

இந்த மூன்று இலைகளையும் ஒன்றாக கலந்து ஒரு பிளாஸ்டிக் அல்லது சிமென்ட் தொட்டியில் போட்டு இவை மூழ்கும் அளவு தண்ணீர் ஊற்றி ஊறவைக்க வேண்டும். இதனை மூடி நிழலில் பாதுகாப்பாக வைக்க வேண்டும். இந்த கலவையை ஐந்து நாட்கள் வைக்க வேண்டும். ஒவ்வொரு நாளும் இந்த இலைக் கலவையை ஒருமுறை என நன்கு கலக்கி விட வேண்டும். ஐந்து நாட்களுக்குப் பின் இதிலிருக்கும் நீர் அடர் பச்சை நிறமாக மாறியிருக்கும். இதனை வடிகட்ட அதுவே மூவிலைக் கரைசல். ஒவ்வொரு மாதமும் இரண்டு முறை இந்த கரைசலை செடிகளுக்கு தெளிக்க நல்ல பலனையும், அதிக மகசூலையும் பெறலாம்.

மூவிலைக் கரைசல் பயன்கள்

  • மூவிலைக் கரைசலை பண்ணைகளில் சொட்டுநீர் பாசனத்தின் மூலம் பயிர்களுக்கு செலுத்தலாம்.
  • காலை மாலை என இரண்டு நேரம் பயிர்களுக்கு அளிக்க பூச்சிகள் நீங்கும், பயிர் வளர்ச்சி அதிகரிக்கும்.
  • இந்த மூன்று இலைக் கரைசல் பூச்சிகளை விரட்டவும், பயிர்களில் ஏற்படும் வேர் அழுகல் நோய் வராமலும் பாதுகாக்கும்.
(1 vote)